வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்த இந்தியர்: ரூ.1 லட்சம் நிதி வழங்கிய அரசு - ஏன் தெரியுமா?

வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்ய பின் பெலாரஸ் அரசிடருந்து 1 லட்சம் ரூபாயை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் பெற்றுள்ளார்.
Indian origin man Mithilesh receives Rs 1 lakh 28 thousand from government of Belarus after marriage
Indian origin man Mithilesh receives Rs 1 lakh 28 thousand from government of Belarus after marriageInstagram
Published on

மும்பையைச் சேர்ந்த மிதிலேஷ், ஒரு டிராவல் பிளாகர். இவர் சமீபத்தில் பெலாரஸைச் சேர்ந்த லிசாவை மணந்தார்.

திருமணத்திற்குப் பிறகு பெலாரஸில் வசிக்கும் தம்பதியினர் சமீபத்தில் ஒரு குழந்தையைப் பெற்றனர்.

குழந்தையை வளர்ப்பதற்காக பெலாரஸ் அரசிடமிருந்து கணிசமான தொகையைப் பெற்றதாக மிதிலேஷ் தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.

அவர் ஒரு முறை ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்தை அரசிமிடமிருந்து பெற்றுள்ளார். மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.18,000 பெறவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அது அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக மாற்றப்படுகிறது. இந்த தொகை பெலாரஸில் வசிப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

மிதிலேஷ் தனது மனைவி லிசாவுக்கு இயல்பான பிரசவம் ஆனதாகவும், அவர்களின் குழந்தை பிறக்கும் போது 4 கிலோ எடையுடன் இருந்ததாகவும், தற்போது 2 மாதமாகிவிட்டதாகவும் பகிர்ந்து கொண்டார்.

Indian origin man Mithilesh receives Rs 1 lakh 28 thousand from government of Belarus after marriage
இந்தியரை திருமணம் செய்து விவசாயம் பழகும் ஆஸ்திரேலிய பெண் - ஓர் உன்னத காதல்!

மிதிலேஷ் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவில் தனது காதல் கதையைப் பகிர்ந்துள்ளார். பெலாரஸில் ஒரு நண்பரின் பிறந்தநாள் விழாவில் லிசாவை சந்தித்துள்ளார்.

பின்னர் காதல் வயப்பட்டு இருதரப்பு குடும்ப உறுப்பினர்களின் சம்மத்துடன் மார்ச் 25 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதியினரின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Indian origin man Mithilesh receives Rs 1 lakh 28 thousand from government of Belarus after marriage
சிங்கிளாக இருப்பதே மேல்! திருமணம் பற்றி இளம் பெண்கள் கருத்து என்ன? ஆய்வில் புதிய தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com