கூகுள்: 13 ஆண்டுகளாக பணியாற்றிவரை Lay Off செய்த நிறுவனம் - ஊழியரின் நெகிழ்ச்சி பதிவு

தான் லெ ஆஃப் செய்யப்பட்ட செய்தியை தன் லின்க்ட் இன் பக்கத்தில் தெரிவித்திருந்தார் மாதவ் சின்னப்பா. அதில் தனது 13 ஆண்டு அனுபவங்களை பற்றியும், அவர் அடைந்த மைல்கற்களை பற்றியும் பெருமிதத்தோடு பகிர்ந்திருந்தார்.
கூகுள்: 13 ஆண்டுகளாக பணியாற்றிவரை Lay Off செய்த நிறுவனம் - ஊழியரின் நெகிழ்ச்சி பதிவு
கூகுள்: 13 ஆண்டுகளாக பணியாற்றிவரை Lay Off செய்த நிறுவனம் - ஊழியரின் நெகிழ்ச்சி பதிவுட்விட்டர்

தனது நிறுவனத்தின் செய்தி பிரிவு இயக்குநர் மாதவ் சின்னப்பாவை லே ஆஃப் செய்துள்ளது கூகுள். சுமார் 13 ஆண்டுகளாக இவர் கூகுளுக்காக உழைத்திருந்தும், இவரை லே ஆஃப் செய்துள்ள சம்பவம் மாதவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

கிட்ட தட்ட ஓராண்டு காலமாகவே பல்வேறு காரணங்களை முன்வைத்து கூகுள், மைக்ரோசாப்ட், ட்விட்டர் என முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அதிலும் கூகுள் ஒரே இரவில் 12,000 பேரை நீக்கியது.

ஒட்டுமொத்தமாக இவர்களை லே ஆஃப் செய்யப்பட்டதில், உயர் பதவியில் இருந்தவர்கள் முதல் அடிப்படை ஊழியர்கள் வரை பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது மாதவ் சின்னப்பா என்பவரை கூகுள் லே ஆஃப் செய்துள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் கிட்ட தட்ட 13 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகிறார். இவர் லண்டன் அலுவலகத்தில் செய்தி சுற்றுச்சூழல் மேம்பாடு துறையின் இயக்குநர் ஆக பணியாற்றி வந்தார்.

தான் லெ ஆஃப் செய்யப்பட்ட செய்தியை தன் லின்க்ட் இன் பக்கத்தில் தெரிவித்திருந்தார் மாதவ் சின்னப்பா. அதில் தனது 13 ஆண்டு அனுபவங்களை பற்றியும், அவர் அடைந்த மைல்கற்களை பற்றியும் பெருமிதத்தோடு பகிர்ந்திருந்தார்.

அந்த பதிவில் மாதவ் சின்னப்பா ’கார்டனிங் லீவ்’ல் இருப்பதாக தெரிவித்திருந்தார்

ஒரு நிறுவனத்தின் ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தாலோ, அல்லது அவரே பணியை விடுவதாக சொல்லி இருந்தாலோ, அவருக்கு நோட்டீஸ் பீரியட் என்று ஒன்று வழங்கப்படும். இந்த நோட்டீஸ் பீரியட் சமயத்தில் சில நிறுவனங்கள் நிச்சயம் பணிக்கு வரவேண்டும் என்று கூறும்.

சில நிறுவனங்களில் நமக்கு விடுப்பு அளித்து நம்மை ஆபீசுக்கு வரவேண்டாம் என்று கூறிவிடுவார்கள். ஆனால் அந்த சமயத்தில் நிறுவனம் நமக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை கொடுத்துவிடும்.

இவர் பதவியில் இருந்த சமயத்தில் Digital News Initiative, Google News Initiative Innovation Challenges, Journalism Emergency Relief Fund உள்ளிட்ட துறைகளை தொடங்கவும், கூகுளின் டூடுல் டீமிடம் பேசி யூரோவிஷன் டூடுல் ஒன்றை தான் செய்வித்ததாகவும் கூறி, இதனை தனது சாதனைகளாக கருதுவதாக கூறினார் மாதவ்.

தனது இந்த சாதனைகள் எல்லாம் அவரது குழுவினரின் உதவியில்லாமல் சாத்தியப்பட்டிருக்காது என்றவர் அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.

கூகுள்: 13 ஆண்டுகளாக பணியாற்றிவரை Lay Off செய்த நிறுவனம் - ஊழியரின் நெகிழ்ச்சி பதிவு
Google: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் கூகுள்? CEO சுந்தர் பிச்சை விளக்கம்

மேலும், தற்போது தனது குடும்பத்தினருக்கு அவரது ஆதரவு மிகவும் அவசியமாக இருக்கிறது என்றார்.

”ஒரு கோப்பை முழுமையடைவதற்கு முன் அது காலியாக இருக்கவேண்டும்” என்ற ஜென் தத்துவத்தின் படி, தன் இத்தனை ஆண்டுகால அனுபவங்களை கொஞ்சம் தள்ளிவைக்கவுள்ளார். ஆகஸ்ட் மாதம் முழுவதும் லீவு எடுத்து, பின்னர் இந்தியாவில் உள்ள தனது தாயை கவனித்துக்கொள்ள செப்டம்பர் மாதம் முழுவதையும் செலவிட்டு, அக்டோபர் முதல் அடுத்த பணிக்கான வேலைகளை தொடங்குவேன் என்று கூறியிருந்தார் மாதவ்.

மாதவ்வின் இந்த பதிவிற்கு அவரது சக ஊழியர்கள் பலரும் பதிலளித்திருந்தனர். அவரது அடுத்தடுத்த திட்டங்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தனர்

கூகுள்: 13 ஆண்டுகளாக பணியாற்றிவரை Lay Off செய்த நிறுவனம் - ஊழியரின் நெகிழ்ச்சி பதிவு
Google: நீங்கள் மனிதரா, ரோபோவா? கூகுள் உங்களிடம் இந்த கேள்வி கேட்க காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com