உலகின் மிக விலையுயர்ந்த ஓட்டல் ரூமில் தங்குவது எப்படியிருக்கும்? கட்டணம் எவ்வளவு தெரியுமா?

இந்த அறையின் பெயர் எம்பத்தி சூட் (Empathy Suite). இந்த அறையினை உலக புகழ்பெற்ற வடிவமைப்பாளர் டேமியன் ஹர்ஸ்ட் என்பவர் டிசைன் செய்திருக்கிறார்.
உலகின் மிக விலையுயர்ந்த ஓட்டல் ரூம் இது தான் - வசதிகள் என்ன? ஒரு இரவுக்கு ரூ.83 லட்சமா!
உலகின் மிக விலையுயர்ந்த ஓட்டல் ரூம் இது தான் - வசதிகள் என்ன? ஒரு இரவுக்கு ரூ.83 லட்சமா!twitter
Published on

இந்த உலகில் மிகவும் காஸ்லியான ஓட்டல்கள், அதாவது விடுதிகள் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், உலகின் மிகவும் காஸ்ட்லியான ஓட்டல் அறை பற்றி தெரியுமா?

உலகிலேயே இந்த அறை தான் விலையுயர்ந்தது என்றால், அங்கு அப்படி என்ன இருக்கும்? வசதிகள் என்ன? எங்கே இருக்கிறது இந்த அறை?

லாஸ் வேகாஸில், பாம்ஸ் கேசினோ என்ற ரிசார்ட் ஒன்று உள்ளது. இங்கு தான் நாம் பேசிக்கொண்டு இருக்கும் காஸ்ட்லியான விடுதி அறைகள் இருக்கிறது.

இந்த அறையின் பெயர் எம்பத்தி சூட் (Empathy Suite). இந்த அறையினை உலக புகழ்பெற்ற வடிவமைப்பாளர் டேமியன் ஹர்ஸ்ட் என்பவர் டிசைன் செய்திருக்கிறார்.

இந்த எம்பதி சூட்டின் சிறப்புகள் என்ன?

விலை: இது தான் உலகின் காஸ்ட்லியான அறை. வெறும் பேச்சுக்கு இல்லை, இங்கு தங்குவதற்கான கட்டணமாக ஒரு இரவுக்கு ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டியிருக்கும். இந்திய மதிப்பில் 83 லட்சம் ரூபாய்.

நாம் அங்கு செல்லும் சீசனை பொறுத்து இந்த விலை மாறுபடுகிறது.

உலகின் மிக விலையுயர்ந்த ஓட்டல் ரூம் இது தான் - வசதிகள் என்ன? ஒரு இரவுக்கு ரூ.83 லட்சமா!
1,375 அடி ஆழம்; உலகின் முதல் பாதாள ஓட்டல் - ஒரு இரவுக்கு கட்டணம் என்ன?

அளவு: இது ஒரு இரண்டடுக்கு அறை. மொத்தம் 9000 சதுரடியில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு இரண்டு மாஸ்டர் பெட்ரூம்கள், ஒரு பார், சினிமா அறை, ஸ்பா, ரூஃப் டாப் நீச்சல் குளம் போன்ற வசதிகள் இருக்கின்றன.

இங்கு தங்கும் விருந்தினர்களுக்கு 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை கிடைக்கும். பிரைவேட் மசாஜ் ரூம், உடற்பயிற்சி அறை கூட இருக்கிறது.

கண்டிஷன்ஸ்: இங்கு தங்குபவர்கள் குறைந்தது இரண்டு இரவுகளையாவது இந்த அறையில் செலவிடவேண்டும். மேலும், செக்யூரிட்டி டெபாசிட்டாக 10 ஆயிரம் டாலர்கள் செலுத்த வேண்டும்.

இங்கு தங்குபவர்களுக்கு வேகாஸின் நைட் லைஃபை அனுபவிக்கும் வய்ப்பும் கிடைக்கும். இந்த அறை 2019ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு வருபவர்களுக்கு தேவைப்பட்டால், 10,000 டாலர்கள் வழங்கப்படும். இதனை அந்த ஊரில் இருக்கும் கேசினோக்களில் அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்!

உலகின் மிக விலையுயர்ந்த ஓட்டல் ரூம் இது தான் - வசதிகள் என்ன? ஒரு இரவுக்கு ரூ.83 லட்சமா!
ஜப்பான் : உலகின் பழமையான ஓட்டல் இது தான்! எப்போது கட்டப்பட்டது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com