உலக போரில் உருவான இன்ஸ்டண்ட் காபி - விறுவிறு வரலாறு!

ஒரு காலக்கட்டத்தில் பில்டர் காபி என்பது பிரபலமாக இருந்தது. தற்போது இன்ஸ்டண்ட் காபி தான் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
உலக போரில் உருவான இன்ஸ்டண்ட் காபி - விறுவிறு வரலாறு!
உலக போரில் உருவான இன்ஸ்டண்ட் காபி - விறுவிறு வரலாறு!Canva

கொஞ்சம் தலைவலியோ அல்லது அலுவலகத்தில் பணிசுமையோ மன அமைதி இல்லாமல் இருக்கும் போது ஒரு காபி குடித்து விட்டு நமக்கு பிடித்த இளையராஜா பாடலை கேட்பது மிகவும் இனிமை.

இன்றைய பரபரப்பன உலகில் பாலுடன் கலந்து அல்லது பிளாக் காபியாக பலரும் அருந்தி வருகின்றனர்.

ஒரு காலக்கட்டத்தில் பில்டர் காபி என்பது பிரபலமாக இருந்தது. தற்போது இன்ஸ்டண்ட் காபி தான் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

இந்த நிலையில் இன்ஸ்டண்ட் காபி உலகில் அறிமுகமானது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம். அமெரிக்க வேதியியலாளர் ஜார்ஜ் வாஷிங்டன் உடனடியாக உருவாகும் காபியை (instant coffee) உருவாகினார்.

1871 ஆம் ஆண்டு பிறந்த வாஷிங்டன் சொந்தமாக காபி நிறுவனத்தை தொடங்கினார். அதுவரை காபி தயாரிக்க காய்ச்சி வடிக்கும் முறையே இருந்த நிலையில் உடனடியாக காபி தயாரிக்கும் முறையினை வாஷிங்டன் அறிமுகம் செய்தார்.

1906 ஆம் ஆண்டில் இதனை சந்தைபடுத்தியபோது சுமரான வரவேற்பே இன்ஸ்டண்ட் காபிக்கு கிடைத்தது. ஆனால் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு இன்ஸ்டண்ட் காபி மக்கள் மனதில் பிரபலமானது .

வாஷிங்டனின் இந்த இன்ஸ்டெண்ட் காபி கண்டுபிடிப்பு, காபி துறையில் பெரும் புரட்சி ஏற்படுத்தியது. ஆனால் அவரது பெயரில் இருந்த இன்ஸ்டண்ட் காபி நிறுவனம் 1943 ஆம் ஆண்டு வேறு ஒரு நிறுவனத்துக்கு விற்கப்பட்டது .

ஆனாலும் தற்போது உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் உட்கொள்ளும் முக்கிய பானமாக காபி இருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் ஜார்ஜ் வாஷிங்டன் என்பதுதான் வரலாற்று உண்மை .

உலக போரில் உருவான இன்ஸ்டண்ட் காபி - விறுவிறு வரலாறு!
தினசரி காபி அருந்துவதால் உடல் எடை குறையுமா? புதிய ஆய்வில் தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com