தினசரி காபி அருந்துவதால் உடல் எடை குறையுமா? புதிய ஆய்வில் தகவல்

கடந்த 4 ஆண்டு காலமாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சர்க்கரை சேர்க்காமல் காபி குடித்தவர்களின் எடை மற்றவருடன் ஒப்பிடுகையில், பெரிதளவில் அதிகரிக்கவில்லை என்று கண்டறிந்துள்ளனர்.
தினசரி காபி அருந்துவதால் உடல் எடை குறையுமா? புதிய ஆய்வில் தகவல்
தினசரி காபி அருந்துவதால் உடல் எடை குறையுமா? புதிய ஆய்வில் தகவல்canva

காபி அருந்துவது நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு அன்றாட பழக்கம் ஆகும். தேநீருக்கு அடுத்தபடியாக, பலரின் ஃபேவரட் பானமாக இருப்பது இந்த காபி தான்.

காபியை சிலர் பாலுடன் சேர்த்து அருந்துவார்கள், சிலர் பால் சேர்க்காமல் அருந்துவார்கள்.

இந்த காபியை குடிப்பதனால், நம் உடல் ஆரோக்கியத்துக்கு சில நன்மைகள் உள்ளன. அதில் ஒன்று எடைக் குறைப்பு.

சமீபத்தில் ஹார்ட்வார்ட் பள்ளி நடத்திய ஆய்வில், தினசரி ஒரு கப் காபி கூடுதலாக அருந்தினால், உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டு காலமாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சர்க்கரை சேர்க்காமல் காபி குடித்தவர்களின் எடை மற்றவருடன் ஒப்பிடுகையில், பெரிதளவில் அதிகரிக்கவில்லை என்று கண்டறிந்துள்ளனர்.

காபி உடல் எடை குறைய எப்படி வழிவகுக்கிறது? இந்த பதிவில் காணலாம்

தினசரி காபி அருந்துவதால் உடல் எடை குறையுமா? புதிய ஆய்வில் தகவல்
Health : வெறும் வயிற்றில் ஏன் பப்பாளி பழம் சாப்பிடக்கூடாது?

சர்க்கரை மற்றும் பால் சேர்க்காமல், பிளாக் காபி அருந்துபவர்களுக்கு உடல் எடை அவ்வளவாக அதிகரிக்காது. குறிப்பாக காலை வேளைகளில் இதனை முதல் பானமாக அருந்தும்போது. இதற்கு காரணம், இதில் குறைவான கலோரிகளே இருப்பது தான்.

உடற்பயிற்சி செய்பவர்கள், அதற்கு முன், பின் என்ன உணவு எடுத்துகொள்கின்றனர் என்பதே உடல் எடையை நிர்ணயிக்கிறது. உடற்பயிற்சிக்கு முன்னர், பிளாக் காபி அருந்துவது, நமக்கு எக்சர்சைகள் செய்ய தேவையான ஆற்றலை வழங்குவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். உடற்பயிற்ச்சிக்கு குறைந்தது 30 நிமிடங்கள் முன்பு, காபியை அருந்திவிடவேண்டும்.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், ஜங்க் ஃபுட்களை தவிர்க்க வேண்டும். அதிக ஆற்றல் வழங்கும் சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது அவசியமாகிறது.

இதற்கு காபி ஒரு சிறந்த தீர்வு என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உணவருந்துவதற்கு முன்னர் காபி குடிப்பதனால், தேவைக்கு அதிகமாக நாம் சாப்பிடமாட்டோம். இது உடல் எடையை கூட்டாது

காபி நமது உடலின் மெடபாலிசத்தை கூட்டுகிறது. காபியில் இருக்கும் கஃபைன், நமது பி எம் ஐ-யை சமன்படுத்தி மெட்டபாலிசத்தின் வேகத்தை கூட்டுகிறது. இதனால் உடல் ஆற்றலோடு செயல்படுகிறது.

இந்த கஃபைன் ஆனது, அதிகமாக நமது உடலுக்கு எடுத்துக்கொண்டாலும், ஆபத்தை விளைவிக்கவல்லதே. பிளாக் காபி அருந்துவதும் அளவாக இருத்தல் முக்கியம். ஒரு நாளைக்கு 2 அல்லது 3 கப் காபியே போதுமானது. அதில் ஒரு முறை பால் சேர்த்து அருந்தலாம்

தினசரி காபி அருந்துவதால் உடல் எடை குறையுமா? புதிய ஆய்வில் தகவல்
Health: பயண நேரத்தில் பசிக்கிறதா? இந்த எமர்ஜென்சி உணவுகளை எடுத்துச்செல்லலாம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com