கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? மருத்துவம் சொல்வதென்ன?

மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை மாம்பழம் சாப்பிட கூடாது என்று வலியுறுத்துவதற்கு காரணம், பழத்தில் கிளைசெமிக் இண்டெக்ஸ் இருப்பது தான். மாம்பழத்தின் கிளைசெமிக் குறியீடு 51 ஆக உள்ளது.
High Blood Sugar Control: Guide To Eating Mangoes In Summer
High Blood Sugar Control: Guide To Eating Mangoes In SummerTwitter
Published on

கோடை காலம் வரும்போது மாம்பழ சீசனும் வந்துவிடுகிறது. பழங்களின் ராஜா என்று குறிப்பிடப்படும் மாம்பழத்தை விரும்பாதோர் யாரும் இருக்கமாட்டார்கள்.

"மாதா ஊட்டாத சாதத்தை மாங்காய் ஊட்டும்" என்ற பழமொழி பலரும் கேள்விப்பட்டிருப்போம். அப்படி ஒரு சுவை அந்த பழத்தில் இருக்கும்.

ஆனால் மாம்பழம் சீசன் தான் என்றாலும், சாதாரணமாகவே உடல் வெப்பநிலையில் அதன் தாக்கம் வெளிப்படும் எனவும் அதிகம் மாம்பழம் சாப்பிடக் கூடாது எனவும் பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.

அதிலும் குறிப்பாக கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.

சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை சாப்பிடவே கூடாது என்பது இல்லை. மாம்பழம் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அளவோடு சாப்பிட்டலாம் என கூறப்படுகிறது.

மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை மாம்பழம் சாப்பிட கூடாது என்று வலியுறுத்துவதற்கு காரணம், பழத்தில் கிளைசெமிக் இண்டெக்ஸ் இருப்பது தான். மாம்பழத்தின் கிளைசெமிக் குறியீடு 51 ஆக உள்ளது.

இது நீரிழிவு அல்லாத உணவுகளுடன் (non-diabetic foods) ஒப்பிடும் போது அதிகம். பொதுவாக சர்க்கரை நோயாளிகள் கிளைசெமிக் இண்டெக்ஸ் 55க்கு மேல் உள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

High Blood Sugar Control: Guide To Eating Mangoes In Summer
Health: சமைக்காமல், பச்சையாக சாப்பிடக் கூடாத உணவுகள் என்ன?

நீரிழிவு நோயாளிகள் செய்ய வேண்டியவை

குறைந்த அளவில் மாம்பழங்களை உட்கொள்ளுங்கள்.

குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்ட மாம்பழங்களைத் தேர்வு செய்யவும்.

பழுத்த மாம்பழங்களைத் தேர்ந்தெடுங்கள்.

மாம்பழங்களை உட்கொண்ட பிறகு இரத்த சர்க்கரை அளவை கண்காணிக்கவும்.

High Blood Sugar Control: Guide To Eating Mangoes In Summer
Health: எந்தெந்த உணவுகள் சாப்பிட்டால், எந்தெந்த உறுப்புகளுக்கு நல்லது?

நீரிழிவு நோயாளிகள் செய்யக்கூடாதவை

மாம்பழங்களில் சர்க்கரை அதிகம் இருப்பதால் அதிக அளவில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுடன் மாம்பழங்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

திராட்சை, வாழைப்பழங்கள், அல்லது செர்ரி போன்ற அதிக சர்க்கரை உள்ள பழங்களுடன் மாம்பழங்களை உட்கொள்ள வேண்டாம்.

ஒரு நாளைக்கு எத்தனை மாம்பழங்கள் சாப்பிடலாம்?

மாம்பழத்தில் கலோரிகள், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, நார்ச்சத்து, சர்க்கரை, வைட்டமின் சி போன்ற சத்துகள் உள்ளன.

ஒரு முழு மாம்பழத்தில் 202 கலோரிகள் உள்ளன. 100 கிராம் மாம்பழத்தில் 60 கலோரிகள் உள்ளன. அப்படி என்றால் ஒரு நாளைக்கு 50 கிராமுக்கு குறைவாக சாப்பிட நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

High Blood Sugar Control: Guide To Eating Mangoes In Summer
Health: வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com