2022 ஆம் ஆண்டு கண்ணிமைக்கும் நொடியில் இறுதியை எட்டியுள்ளது. இந்த ஆண்டில் நம்மை வியக்க வைத்த பல சம்பவங்கள் நடந்தன.
உலகை தலைகீழாக மாற்றிய கொரோனா வைரஸ் தொற்றும் அவ்வப்போது எட்டிப்பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
ஒரு பக்கம் உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா இன்றும் அந்நாட்டை கைப்பற்றும் முனைப்பில் சண்டையிட்டு வருகிறது
உலகம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் என்ற கணிப்பு, ஹிஜாப் போராட்டம், இலங்கை நெருக்கடி மற்றும் ஆட்சி மாற்றம் என நினைத்து பார்க்க முடியாத சம்பங்கள் நடந்தன.
அதில் 5 முக்கிய நிகழ்வுகளின் ஒரு recap இதோ!
2019ல் தொடங்கிய இந்த பொருளாதார நெருக்கடி, தீவு தேசத்தை இன்னும் நெருக்கிக்கொண்டிருக்கிறது. 2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து வந்த கோவிட் பொது முடக்கத்தால் அந்நிய செலாவணியின் முக்கிய ஆதாரமான சுற்றுலா வருவாயில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது. இவை ஏற்கனவே இருந்த நெருக்கடியைத் தீவிரமாக்கியது.
பல மாதங்களாக மக்கள் அரசை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இலங்கை அதிபர் மாளிகை உட்படப் பல அரசு அலுவலகங்கள், வெகுண்டெழுந்த மக்கள் கூட்டத்தால் முற்றுகை இடப்பட்டுள்ளதைத் தினமும் ஊடகங்களில் பார்க்க முடிந்தது.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்தது மட்டுமல்லாமல், நாட்டை விட்டு ரகசியமாக வெளியேறியதும் சர்ச்சையை கிளப்பியது. தற்போது இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி வகித்து வருகிறார்
2022 பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தொடங்கியது. 2014 முதலே நடந்துக்கொண்டிருக்கும் ரஷ்யா - உக்ரைன் பிரச்னை ரஷ்ய அதிபர் புதின் தலைமையில் தீவிரமடைந்தது.
முதலில் உக்ரைனின் இடங்களை கைப்பற்றும் எண்ணமில்லை எனவும், ராணுவ தளவாடங்கள் மட்டுமே இலக்கு எனக் கூறிவந்த ரஷ்யா உக்ரைன் தலை நகர் கீவ் மீது தாக்குதல் நடத்தியது.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு தலைவகர் கீவ்வை மீட்டது உக்ரைன் படை. ரஷ்யா உக்ரைன் போரால், உலகின் பொருளாதாரம் பாதிப்பை சந்தித்தது. பெரு நிறுவனங்கள் பலவும் ரஷ்யாவுடனான தனது உறவை முறித்துக்கொண்டன.
நாட்கள் ஆக ஆக, உக்ரைனின் கைகள் ஓங்க தொடங்கியது. ரஷ்யா வெற்றி பெற்றுக் கையகப்படுத்தி வைத்திருந்த பல பகுதிகளை உக்ரைன் படை மீட்டதாக செய்திகள் வந்தன.
ரஷ்யாவை கிரிமியா பகுதியோடு இணைக்கும் கெர்க் பாலம் (Kerch bridge) தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த தாக்குதலில் 3 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாகவும் ரஷ்ய தரப்பு கூறியது
கிரிமியா பாலத்தை தாக்கியதற்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. உக்ரைன் கிரீமியா பாலத்தை தகர்ப்பதாக ரஷ்யாவை அச்சுறுத்தி வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
கனடா நாட்டில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை அந்நாடு அதிகரிக்கப்போவதாக கடந்த பிப்ரவரி 2022ல் அறிவித்தது. கனடாவில் குடியேறுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டில் 475000 இம்மிகிரன்ட்ஸை வரவேற்க இலக்கை நிர்ணயித்துள்ளத கனடா தெரிவித்துள்ளது
கனடாவுக்குள் குடியேறியவர்களில் பெரும்பாலோர் எகனாமிக் கிளாஸை சேர்ந்தவர்களாக உள்ளனர், அந்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 60% இந்தியர்கள் உள்ளனர்.
கடந்த ஜூன் 2022ல் ¸கருக்கலைப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டது அமெரிக்கா. கிட்ட தட்ட 13 மாகாணங்களில் இந்த தடை அமலுக்கு வந்தது என நியூயார்க் டைம்ஸ் தளம் கூறுகிறது. 1973ல் ரோ வெர்சஸ் வேட் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வமாக உரிமை வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பினை மாற்றியமைத்து உச்ச நீதிமன்றம் கருக்கலைப்புக்கு தடை விதித்தது.
ரிபப்ளிகன் கட்சி ஆட்சிப் புரியும் மாகாணங்களில் இந்த கருக்கலைப்பு தடை சட்டம் அமலுக்கு வந்த நிலையில், டெமாக்ரடிக் கட்சி ஆட்சி செய்யும் மாகாணங்கள் இதற்கு எதிராக நின்றன.
இதனால் நாடு முழுவதும் பெண்கள் சாலையில் இறங்கி தங்களது உரிமைகளை காக்க போராட்டங்கள் நடத்தின
மாஷா அமினி என்ற 22 வயது பெண் ஹிஜாபை சரியாக அணியாததற்காக ஈரானின் ஒழுக்க காவலர்களால் கைது செய்யப்பட்டார். மாரல் போலீசார் கடுமையாக தாக்கியதில் அந்த இளம் பெண் உயிரிழந்தார். ஆனால் அரசு இதனை மறுத்தது
இதனால் நாடெங்கிலும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது. பெண்கள் ஹிஜாபை எரித்தும், முடியை வெட்டியும் தங்ககளது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்
ஈரான் பெண்கள் வீதிகளில் இறங்கி ஹிஜாப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரான் மனித உரிமைகள் அமைப்பின் கூற்றுப்படி, பாதுகாப்புப் படையினரின் வன்முறை ஒடுக்குமுறையில் 43 குழந்தைகள் மற்றும் 25 பெண்கள் உட்பட குறைந்தது 326 எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர்.
சுவீடன் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் ஒருவர் தனது முடியை வெட்டி ஈரான் பெண்களுக்கு ஆதரவு தெரிவித்தார். நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் சில ஹாலிவுட் பிரபலங்கள் ஈரான் பெண்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust