Iran Women Protest: "மாஹ்ஷா அமினி உடல்நல குறைவால் தான் இறந்தார், காவலர்களால் அல்ல"- ஈரான்

மாஹ்ஷா அமினி ஹிஜாப் சரியாக அணியாததற்காக ஈரானின் ஒழுக்க காவலர்களால் கைது செய்யப்பட்டார். அவர்கள் கடுமையாக அவரைத் தாக்கியதனால் கோமா நிலைக்கு சென்றவர் 3 நாட்கள் கழித்து கடந்த செப்டம்பர் 16ம் தேதி மாஹ்ஷா உயிரிழந்தார். மாஹ்ஷாவின் இறப்பு நாடுமுழுவதும் பெரும் போராட்டம் நடக்க காரணமானது.
ஈரான்: "மாஹ்ஷா அமினி உடல்நலக் குறைவால் தான் இறந்தார், தாக்குதலால் அல்ல" - ஈரான் அரசு
ஈரான்: "மாஹ்ஷா அமினி உடல்நலக் குறைவால் தான் இறந்தார், தாக்குதலால் அல்ல" - ஈரான் அரசுTwitter
Published on

ஈரான் நாட்டில் பெண்கள் ஹிஜாபுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் தூண்டப்படுவதற்கு காரணமாக இருந்த மாஹ்ஷா அமினி இறப்பு குறித்து புதிய மாறுபட்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறது ஈரான் அரசு.

மாஹ்ஷா அமினி ஹிஜாப் சரியாக அணியாததற்காக ஈரானின் ஒழுக்க காவலர்களால் கைது செய்யப்பட்டார். அவர்கள் கடுமையாக அவரைத் தாக்கியதனால் கோமா நிலைக்கு சென்றார் அமினி. 3 நாட்கள் கழித்து கடந்த செப்டம்பர் 16ம் தேதி மாஹ்ஷா உயிரிழந்தார்.

மாஹ்ஷாவின் இறப்பு நாடுமுழுவதும் பெரும் போராட்டம் நடக்க காரணமானது. ஈரான் பெண்கள் வீதிகளில் இறங்கி ஹிஜாப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக நடைபெற்று வந்த போராட்டங்கள் செப்டம்பர் முதல் பற்றி எரியத்தொடங்கியது.

ஈரானிய பெண்கள் தங்கள் முடியை வெட்டிக்கொள்ளும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. தங்களது ஹிஜாபை தீயிலிட்டு எரித்து போராடி வருகின்றனர்.

22 நாட்களும் மேலாக இந்த போராட்டம் இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.

ஈரான்: "மாஹ்ஷா அமினி உடல்நலக் குறைவால் தான் இறந்தார், தாக்குதலால் அல்ல" - ஈரான் அரசு
ஈரான்: இஸ்லாமிய புரட்சிக்கு முன்னும் பின்னும் பெண்கள் நிலை என்ன?- பேசும் படங்கள்
Twitter

தற்போது மாஹ்ஷா அமினி, அதிகாரிகள் அவரை தாக்கியதனால் உயிரிழக்கவில்லை என்றும் அவர் 8 வயதில் செய்து கொண்ட மூளை கட்டி சிகிச்சை தான் காரணம் என்றும் ஈரானின் தடயவியல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

அதிகாரிகள் தாக்கியதை விட மாஹ்ஷா அமினி 8 வயதில் செய்துகொண்ட அறுவை சிகிச்சை தான் உயிரிழப்புக்கு முக்கியக் காரணம் என்று கூறினாலும் அவரது தலையில் பலமாக தாக்கப்பட்டிருந்தது தான் இறப்பிற்கு காரணம் என்று அமினியின் உறவினர் ஒருவர் கூறியிருக்கிறார்.

மாஹ்ஷா அமினிக்கு பின்னர் போராட்ட காலத்தில் பல பெண்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். சிலர் காணாமல் போயிருக்கின்றனர். ஈரான் அரசு பெண்களின் உயிரிழப்புக்கு தாங்களே காரணம் என குடும்பங்கள் பகிரங்கமாக அறிவிக்க அழுத்தம் கொடுத்து வருவதாக மனித உரிமைகள் ஆணையம் Amnesty International கூறியுள்ளது.

உயிரிழப்புகள் அதிகரித்து வரும் சூழலில் மேற்கு நாடுகள் ஈரானுக்கு எதிராக பேசத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் தங்களது நாட்டு மக்கள் ஈரானில் இருந்து உடனடியாக திரும்ப அழைப்பு விடுத்துள்ளது. கனடா ஈரானுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. பத்தாயிரத்துக்கும் அதிகமான ஈரானிய அதிகாரிகள் கனாடாவில் நுழைய தடையை அறிவித்தார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

சுவீடன் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் ஒருவர் தனது முடியை வெட்டி ஈரான் பெண்களுக்கு ஆதரவு தெரிவித்தார். நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் சில ஹாலிவுட் பிரபலங்கள் ஈரான் பெண்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

ஈரான் அரசின் நிலைப்பாடு இஸ்லாமிய சட்டங்களைக் காப்பதில் உறுதியாக இருக்கிறது. இந்த புதிய தடவியல் அறிக்கை அரசின் நிலைப்பாட்டிலும் போராட்டகாரர்கள் மத்தியிலும் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஈரான்: "மாஹ்ஷா அமினி உடல்நலக் குறைவால் தான் இறந்தார், தாக்குதலால் அல்ல" - ஈரான் அரசு
ஈரான்: போராட்டத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுமி மர்மாமான முறையில் கொலை- என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com