தான் பதிவிடும் ஒரு போஸ்டுக்கு 6 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார் டிக் டாக் பிரபலம் கேபி லேம். இந்த ஆண்டு இறுதிக்குள் இவரது சொத்து மதிப்பு 10 மில்லியன் டாலரை எட்டவுள்ளதாகவும் அவரது மேனேஜர் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
எளிமையான விஷயங்களை வெறும் உடல் பாவங்களை வைத்து ஒரு வார்த்தை கூட பேசாமல், நகைச்சுவையாக நடித்து காண்பிப்பவர் தான் டிக் டாக் பிரபலம் கேபி லேம்.
டிக் டாக், இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் போன்றவை இன்றைய காலத்தில் மிக அதிகமாக பார்க்கப்பட்டு வரும் விஷயங்கள். இவற்றின் மூலம் குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்தவர்கள் ஏராளம்.
வெறும் பிரபலத்துக்கான தளமாக மட்டுமில்லாமல், எளிதாக வருமானம் ஈட்டும் மிக முக்கிய வர்த்தக தளமாகவும் உள்ளது. இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தாலும் மற்ற நாடுகளில் பயன்பாட்டில் தான் இருக்கிறது. இந்த டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர் தான் கேபி லேம்.
22 வயதாகும் இவர், கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு ஹோட்டல்களில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். பெருந்தொற்றால் வேலை இழந்தவர், டிக் டாக்கில் வீடியோக்கள் பதிவிட துவங்கினார்.
ஒரு வார்த்தை கூட பேசாமல், தன் செய்கைகள் மூலம் மட்டுமே கன்டன்ட்களை உருவாக்க தொடங்கினார். சிறிய வீடியோக்கள் மூலம் மக்களை சிரிக்கவைத்து, குறுகிய காலத்தில் பெரிய அளவில் பிரபலமானார். நாம் அன்றாடம் செய்யும் செயல்களை மற்றும் லைஃப் ஹேக் வீடியோக்களை எளிமையாக செய்வது எப்படி என்பதை காண்பித்து சிரிக்க வைப்பார்.
வெறும் பாடி லாங்குவேஜில் பேசியவர் வாய் திறந்து பேசமாட்டாரா என்று இவரது ரசிகர்கள் ஏங்கிய காலமுண்டு. அப்போது Nas Daily என்ற கிரியேட்டர் ஒருவருடனான சந்திப்பில் முதல் முறையாக பேசினார். அந்த சந்திப்பின்போது தான் அவரது வாழ்க்கை கதையை முதன்முதலில் பகிர்ந்துகொண்டார் கேபி.
தற்போது 150 மில்லியன் ஃபாலோவர்களை கொண்டுள்ள கேபி லேம், தன் ஒரு சோஷியல் மீடியா போஸ்டுக்கு எவ்வளவு சம்பாதிக்கிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேபியின் ஒரு சோஷியல் மீடியா போஸ்ட்டின் மதிப்பு 750000 டாலர். அதாவது 6 கோடி ரூபாய். அதுமட்டுமில்லாமல், இந்த ஆண்டு இறுதிக்குள் கேபியின் சொத்து மதிப்பு 10 மில்லியன் டாலராக உயரப்போகிறது எனவும் அவரது மேலாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால், தான் சம்பாதிக்கும் பணம் குறித்து கேபிக்கு எந்த கவலையும் இல்லை எனவும், அவர் அதை பற்றி கண்டுகொள்ளமாட்டார் எனவும் மேலாளர் தெரிவித்தார் . ஹாலிவுட்டில் காமெடியனாக வேண்டும் என்பது தான் கேபியின் கனவாம்!
ரியல் எஸ்டேட்-ல் அதிகளவில் முதலீடு செய்து வருகிறார் கேபி. மேலும் உணவகம் ஒன்றை நடத்தி வரும் இவர் சில மென்பொருள் நிறுவனங்களில் முதலீடும் செய்துள்ளார். 2020 பிற்பகுதியிலிருந்து 2022க்குள் இவருடைய வாழ்க்கை டிக்டாக் வீடியோக்களால் தலைகீழாக மாற்றியுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust