டிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட பெண் - வேலையிலிருந்து நீக்கிய நிறுவனம் - என்ன நடந்தது?

தொழில்நுட்பத் துறையில் வேலை செய்து வரும் அந்த பெண், டிக் டாக் வீடியோக்கள் வெளியிடுவதில் ஈடுபாட்டுடன் இருந்து வந்துள்ளார். இந்த ஈடுபாடே அவர் வேலை போவதற்கு காரணமாக மாறியது.
Lexi Larson
Lexi LarsonTwitter
Published on

வேலைக்கு சேரும் போது HR துறையிலிருந்து சம்பள விவரங்களைப் பகிர்வது குறித்து சில அறிவுறுத்தல்கள் இருந்திருக்கலாம். உண்மையில் அவை சில காரணங்களுக்காகக் கொடுக்கப்படுபவைதான்.

டென்வரைச் சேர்ந்த இந்த பெண் தனது சம்பளம் குறித்துப் பேசி தனது வேலையை இழந்த சம்பவம் உங்களுக்கு கொஞ்சம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

அவர் தனது டிக்டாக் வீடியோவில் $20,000 உயர்வு பெற்றது எப்படி எனக் கூறியிருந்தார்.

Tik Tok
Tik TokTwitter

தொழில்நுட்பத் துறையில் வேலை செய்து வரும் லெக்ஸி லார்சன், டிக் டாக் வீடியோக்கள் வெளியிடுவதில் ஈடுபாட்டுடன் இருந்து வந்துள்ளார். இந்த ஈடுபாடு அவர் வேலை போவதற்குக் காரணமாக மாறியது.

புதிய வேலையில் சேர்ந்து தனது சம்பளத்தை 70000 டாலரில் இருந்து எப்படி 90000 டாலராக உயர்த்தினார் எனக் கூறி டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டார் லார்சன்.

சம்பளத்தைப் பொது வெளியில் விவாதிக்கும் உரிமை தொழிலாளர்களுக்கு உள்ளது என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால் அவர் வீடியோவில் சம்பளம் குறித்துப் பகிர்ந்துகொண்டதை அவரது நிறுவனம் விரும்பவில்லை.

Lexi Larson
தவறுதலாக 1.42 கோடி account-ல் போட்ட நிறுவனம், தலைமறைவான ஊழியர் : ஓர் அடடே சம்பவம்

அந்த பெண்ணின் மேலதிகாரி அவரை அழைத்துப் பேசியிருக்கிறார். அவரது டிக் டாக் வீடியோவில் சம்பளம் குறித்துப் பேசியதை நிறுவனம் விரும்பவில்லை என அவர் கூறியிருக்கிறார். இதனால் தனது மொத்த வீடியோக்களையும் நீக்க கூட லார்சன் முன்வந்திருக்கிறார்.

ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரை மீடிங் ஒன்றுக்கு அழைத்து அவரை வேலையை விட்டு நீக்குவதாகக் கூறியுள்ளனர்.

தான் சட்ட விரோதமாக எதையும் செய்யவில்லை என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால் நிறுவனத்தின் சார்பில் அவரது வீடியோக்கள் பாதுகாப்பு குறித்த கவலைகளை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளனர்.

Lexi Larson
4 நாட்கள் மட்டுமே வேலை - முழு சம்பளம் கொடுக்கும் ஒரு அடடே நிறுவனம்


நமது வாழ்வும் சமுக வலைத்தளங்களும் பின்னிப்பிணைந்து இருக்கின்றன. இது சில நேரங்களில் சில ஆபத்துக்களை விளைவிக்கிறது.

இப்போது அவரது டிக் டாக் வீடியோ 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

Lexi Larson
Search Engine -ஆக பயன்படுத்தப்படும் Insta, Tiktok - 2K கிட்ஸிடம் தோற்று போகிறதா Google?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com