Iran court jails dancing pair for 10 years
Iran court jails dancing pair for 10 yearsTwitter

ஈரான்: நினைவுச்சின்னத்தின் முன் நடனமாடிய இளம் ஜோடி - 10 ஆண்டு சிறை தண்டனை! | Video

பொது இடங்களில் நடனமாட தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஜோடி நடன வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதால் இந்த விவகாரம் வெடித்துள்ளது.
Published on

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள நினைவு சின்னமான ஆசாதி கோபுரம் முன்பு நடனமாடிய இளம் ஜோடிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது அந்நாட்டு அரசு.

ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள நினைவு சின்னமான ஆசாதி கோபுரம் முன்பு, அஸ்தியாஜ் ஹகிகி மற்றும் அவரது வருங்கால கணவர் அமீர் முகமது அஹ்மதி இருவரும், விதிகளை மீறி நடனமாடியதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த இளம் ஜோடிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Hijab
HijabTwitter

ஈரான் அரசு நாட்டில் கடுமையான சட்டங்களை விதித்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு, ஹிஜாப் அணியவேண்டும், ஆண்களுடன் நடனம் ஆட கூடாது என பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொது இடங்களில் நடனமாட தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஜோடி நடன வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதால் இந்த விவகாரம் வெடித்துள்ளது.

Iran court jails dancing pair for 10 years
உலகின் மிக பழமையான நாடுகளின் பட்டியலில் ஈரான் முதலிடம் : இந்தியாவின் இடம் என்ன?

அந்தத் தம்பதி தங்கள் வீடியோவால் என்ன விளைவுகளை எதிர்கொண்டார்கள்?

இந்த ஜோடிக்கு 10 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதற்கும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Iran court jails dancing pair for 10 years
ஈரான் : ஹிஜாபுக்கு எதிராக போராடும் 15,000 பேருக்கு மரண தண்டனையா?- உண்மை என்ன? | Fact Check

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com