ஈரான் : ஹிஜாபுக்கு எதிராக போராடும் 15,000 பேருக்கு மரண தண்டனையா?- உண்மை என்ன? | Fact Check

கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கும் போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனையும், நீண்ட கால சிறை தண்டனையும் வழங்க இரான் அரசு தரப்பு திட்டமிட்டு கொண்டிருக்கலாம் என சில மனித உரிமை ஆர்வலர்கள் குழுக்கள் கூறுகின்றன.
ஈரான் : ஹிஜாபுக்கு எதிராக போராடும் 15,000 பேருக்கு மரண தண்டனையா? - உண்மை என்ன?
ஈரான் : ஹிஜாபுக்கு எதிராக போராடும் 15,000 பேருக்கு மரண தண்டனையா? - உண்மை என்ன?Twitter
Published on

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் சமூக வலைதள பக்கத்தில், இரான் நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக போராடிய 15 ஆயிரம் மக்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக ஒரு செய்தியை பகிர்ந்தார். அச்செய்தி ஒரு வதந்தி என்பதை அறிந்து கனடா நாட்டு பிரதமரின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது.

இப்படி ஒரு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை கனடா நாட்டின் பிரதமர் போன்ற ஒரு முக்கிய அரசியல் தலைவர் பகிர்ந்ததால் அச்செய்தி காட்டுத் தீ போல உலகம் முழுக்க பரவியது. ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ரெடிட், டிக் டாக்... என உலகில் சமூக வலைதளம் என்கிற பெயரில் என்னவெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் இச்செய்தி சென்று சேர்ந்தது.

ஆனால் கள எதார்த்தத்தில் இரான் அரசுக்கு எதிராக போராடிய 15 ஆயிரம் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்ட தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 2000 பேருக்கு அதிகாரப்பூர்வமாக குற்றம் சாட்டப்பட்டு ஐந்து பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

போராட்டக்காரர்களில் மேலும் 20 பேர் மரண தண்டணையை  எதிர்கொள்வதாக நார்வே நாட்டைச் சேர்ந்த மனித உரிமைகள் குழுக்களில் ஒன்று கூறுகிறது.

உண்மையில் கைது செய்யப்பட்ட தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்களில் பெரும்பாலானோர் இதுவரை விசாரணையே எதிர்கொள்ளவில்லை என்று பிபிசி வலைதள கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்த பதிவை கீழே படத்தில் காணலாம்.

ஒரு கட்டத்துக்குப் பிறகு இந்த செய்தி உண்மையல்ல என்பதை அறிந்து கொண்ட கனடா அரசே ஜஸ்டின் ட்ரூடோவின் கணக்கிலிருந்து அச்செய்தியை நீக்கியது. 

ஜஸ்டின் ட்ரூடோ பகிர்ந்த செய்தி ஈரானில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கும் போராட்டக்காரர்கள் குறித்து வெளியான ஆரம்பகட்ட செய்திகளை அடிப்படையாகக் கொண்டு பகிரப்பட்டது. அதில் போதிய ஆதாரங்கள் இல்லை, தகவல்கள் முழுமையாக இல்லை என்பது தெரிய வந்த பின் கனட பிரதமரின் பதிவு நீக்கப்பட்டது என கனடா பிரதமர் அலுவலகத்தில் இருந்து அப்பதிவு நீக்கப்பட்டதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டது.

ஈரான் : ஹிஜாபுக்கு எதிராக போராடும் 15,000 பேருக்கு மரண தண்டனையா? - உண்மை என்ன?
ஈரான்: போராட்டத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுமி மர்மாமான முறையில் கொலை- என்ன நடந்தது?


அதே நேரத்தில் கனடா அரசு இரான் நாட்டு மக்களை ஆதரிப்பதாகவும், நடைபெற்று வரும் பிரச்சனைக்கு இரான் நாட்டு அரசை பொறுப்பாக்க கனடா நாடு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது கனடா நாட்டின் பிரதமர் அலுவலகம்.

இரான் அரசுக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை கூட வழங்கலாம் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உள்ள அவை உறுப்பினர்கள் வாக்களித்ததாக நியூஸ் வீக் என்கிற பத்திரிக்கையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு செய்தி வெளியானது.

இதற்கு இரான் நாடாளுமன்றம் ஒரு விளக்கத்தையும் கொடுத்தது. இரானின் அரசுக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற அவை உறுப்பினர்கள் கையெழுத்தி,ட்டார்களே ஒழிய மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை என விளக்கம் அளித்தது.

ஆனால் சமூக வலைதளங்களிலோ இரான் அரசு 15,000 போராட்டக்காரர்களுக்கும் மரண தண்டனை விதிக்க இருப்பதாகவும், அது இரான் நாட்டில் வாழும் மக்களுக்கு பாடம் புகட்டும் ஒன்றாக அமையும் என்றும் பரவியது. இது போன்ற பதிவுகளை, சமூக வலைதளங்களில்  வயோலா டேவிஸ் போன்ற பல புகழ்பெற்ற பிரபலங்களும் பகிர்ந்தனர்.

இதுநாள் வரை, இரான் நாடு மிக அதிக எண்ணிக்கையில் மரண தண்டனைகளை விதித்து வருகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை சுமார் 6,885 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பும் இரான் நாட்டில் மிகப்பெரிய எண்ணிக்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது. 1988 ஆம் ஆண்டு அயாதுல்லா காமனேனி அவர்களின் ஆணையின்படி 2800 முதல் 5000 பேருக்கு (இதில் ஆண்கள் பெண்கள் இரு பாலினத்தவரும் அடக்கம்) மரண தண்டனை விதிக்கப்பட்டு அடையாளம் தெரியாத இடுகாடுகளில் புதைக்கப்பட்டதை சில மனித உரிமை ஆர்வலர்கள் குழுக்கள் நினைவு கூறுகின்றன. இது நாள் வரை அயாதுல்லா காமனேனியின் உத்தரவின் பேரில் எத்தனை பேர் அப்படி கொல்லப்பட்டார்கள் என்பது குறித்து தெளிவான விவரங்கள் யாரிடமும் இல்லை.

ஈரான் : ஹிஜாபுக்கு எதிராக போராடும் 15,000 பேருக்கு மரண தண்டனையா? - உண்மை என்ன?
ஈரான்: இஸ்லாமிய புரட்சிக்கு முன்னும் பின்னும் பெண்கள் நிலை என்ன?- பேசும் படங்கள்

ஏன் இந்தப் போராட்டம்

கடந்த 2022 செப்டம்பர் மாதத்தில் மாஷா அமீனி என்கிற 22 வயது இளம்பெண், தன் தலையை ஹிஜாப் அணிந்து மூடவில்லை என்கிற காரணத்தால் கலாச்சார காவலர்களால் கைது செய்யப்பட்டு, மர்மமான முறையில் இறந்து போனார். 

மாஷா கலாச்சார காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டு இறந்து போனதாக ஒரு தரப்பினர் நம்புகின்றனர். இரான் அரசு தரப்பு மற்றும் கலாச்சார காவலர்கள் தரப்பு அவர் உடல்நல குறைவால் இறந்ததாக கூறுகின்றனர்.

ஈரான் : ஹிஜாபுக்கு எதிராக போராடும் 15,000 பேருக்கு மரண தண்டனையா? - உண்மை என்ன?
Iran Women Protest: "மாஹ்ஷா அமினி உடல்நல குறைவால் தான் இறந்தார், காவலர்களால் அல்ல"- ஈரான்

ஒரு கட்டத்தில் இது பொது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி மக்கள் போராட்டமாக வெடித்தது. இந்த மக்கள் போராட்டத்தில் இதுவரை சுமார் 326 போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 43 குழந்தைகள் மற்றும் 25 பெண்கள் அடக்கம் என்கிறது ஈரான் மனித உரிமைகள் குழு.

தி ஹியூமன் ரைட்ஸ் ஆக்டிவிஸ்ட் நியூஸ் ஏஜென்சி என்கிற மனித உரிமைகள் அமைப்போ, இதுவரை 344 போராட்டக்காரர்கள் உயிரிழந்திருப்பதாகவும் அதில் 52 பேர் குழந்தைகள் என்றும் கூறுகிறது. 

கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கும் போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனையும், நீண்ட கால சிறை தண்டனையும் வழங்க இரான் அரசு தரப்பு திட்டமிட்டு கொண்டிருக்கலாம் என சில மனித உரிமை ஆர்வலர்கள் குழுக்கள் கூறுகின்றன.

ஈரான் : ஹிஜாபுக்கு எதிராக போராடும் 15,000 பேருக்கு மரண தண்டனையா? - உண்மை என்ன?
ஈரான்: போராட்டத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுமி மர்மாமான முறையில் கொலை- என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com