சீனா நெருக்கடி: அச்சத்தில் உலக நாடுகள், சூழப் போகும் ஆபத்து - என்ன நடக்கிறது?

அமெரிக்காவில் பணவீக்கம், ஐரோப்பாவில் எரிபொருள் விலை உயர்வு, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள், ரஷ்யா - உக்ரைனிலிருந்து கோதுமை இறக்குமதி செய்யும் ஆப்பிரிக்க நாடுகளின் பாதிப்புகள், சீனாவின் பொது முடக்கத்தால் பொருளாதார நெருக்கடி இவையெல்லாம் ஒரு கட்டுக்குள் இருந்தால் மந்தநிலை வராது.
மோடி மற்றும் சி ஜின்பிங்
மோடி மற்றும் சி ஜின்பிங்Twitter
Published on

கோவிட் 19 தொற்று நோயால் உலகம் முழுவதும் இரண்டாண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. இந்த வருடம் அதிலிருந்து மீண்டு வந்தாலும் இன்னொரு நோக்கில் அதிகரித்து வரும் அபாயங்கள் உலக பொருளாதாரத்தைப் பாதிக்கின்றன.

இருப்பினும் பெரும்பாலான பொருளியல் வல்லுநர்கள் இந்த ஆண்டு பொருளாதார மந்திலை ஒப்பீட்டளவில் சாத்தியமில்லை என்று நம்பிக்கையூட்டுகிறார்கள். அவர்களது நம்பிக்கை பலிக்குமா?

உக்ரைனில் போர், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள், சீனாவின் கடுமையாக கோவிட் கட்டுப்பாடுகள், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வு மற்றும் அங்கே நிலவும் பணவீக்கம் அனைத்தும் 2022 இல் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும்.

மந்தநிலையை முன்கூட்டியே கணிப்பது கடினம், அப்படி ஒரு பின்னடைவைச் சந்தித்தால் மட்டுமே தெரியும் என்று சில பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

அமெரிக்க பொருளாதாரம்
அமெரிக்க பொருளாதாரம்Twitter

அமெரிக்காவில் மந்தநிலை வருமா?

அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரைக் கடந்த நான்கு பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்குப் பணவீக்கம் இருக்கிறது. இருப்பினும் பொது மக்களை விட பொருளாதார வல்லுநர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பற்றி அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

கடந்த மாதம் சிஎன்பிசி தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 81% அமெரிக்க மக்கள் 2022 இல் பொருளாதார மந்தநிலை ஏற்படக்கூடும் என்று நம்புகிறார்கள்.

இதற்கு மாறாக கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் பொருளாதார வல்லுநர்கள் அடுத்த ஆண்டில் அமெரிக்கப் பொருளாதார மந்தநிலையின் வாய்ப்பு 20 -35% என்று கணித்துள்ளார்கள்.

சிட்னியில் வாழும் பொருளாதார நிபுணர் டிம் ஹார்கோர்ட்டின் கருத்துப்படி அமெரிக்க அதிபர் பிடனின் உள்கட்டமைப்பு செயல்பாடுகள் பொருளாதாரத்தைத் தூண்டும் என்கிறார். இதனால் இடைக்கால நன்மை இருக்காது என்றாலும் அது பொருளாதாரத்தைக் காப்பாற்றும் என மேலும் கூறுகிறார். சீனாவைப் பொறுத்தவரை அதன் முக்கியமான தொழிற்துறை நகரமான ஷாங்காயில் கோவிட் முடக்கத்தை அமல்படுத்தியிருப்பால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்கிறார்.

ரஷ்யாவின் மீதான இதுவரையிலான பொருளாதாரத் தடைகளால் பெரிய பிரச்சினை இல்லையென்றாலும் அத்தடைகள் மேலும் அதிகரித்தால் வரும் மாதங்களில் உலகப் பொருளாதாரத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் காரணியாக அது இருக்கும்.

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்Twitter

ஐரோப்பாவில் உயரும் எரிபொருள் விலை

ஐரோப்பாவைப் பொறுத்தவரை ரஷ்யா மீது பல தடைகளை விதித்தாலும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது. நிலக்கரியை மட்டும் தடை செய்திருக்கிறது. ஐரோப்பாவின் மூன்றில் ஒரு பகுதி எரிபொருள் தேவையை ரஷ்யாவே பூர்த்தி செய்கிறது.

ஆனால் ஐரோப்பா ரஷ்யாவின் எரிபொருள் மீதும் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் எண்ணெய் மற்றும் எரிவாயுவை இலக்காகக் கொண்ட தடை நடவடிக்கைகள் ரஷ்யா மீது விரைவில் தேவைப்படலாம் என்று கூறியிருக்கிறார். அப்படி நடக்கும் பட்சத்தில் அங்கே எரிபொருள் விலைகள் அதிகம் உயரும்.

மோடி மற்றும் சி ஜின்பிங்
உக்ரைன் போருக்கு பிறகு ரஷியாவின் பொருளாதாரம் எப்படி இருக்கும்? - விரிவான தகவல்கள்
உலக பொருளாதாரம்
உலக பொருளாதாரம்Twitter

கோவிட் முடக்கத்தால் பாதிக்கப்படும் சீனப் பொருளாதாரம்

சீனாவைப் பொறுத்த வரை தற்போது கோவிட் அலையால் பாதித்து வருகிறது. மற்ற நாடுகளை விட சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் மிக அதிகம். ஒரு பகுதியில் சில கோவிட் தொற்றுகள் பதிவானால் அந்த இடத்தையே பூட்டி விடுகிறார்கள். உலகின் பரபரப்பான துறைமுக நகரமான ஷாங்காய் இரண்டு வாரங்களுக்கும் மேலாக வெளி உலகிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. சரக்குகளை இறக்க விரும்பும் கப்பல்கள் நூற்றுக்கணக்கில் கடலில் நின்று கொண்டிருக்கின்றன.

மேலும் கோவிட் கடுமையான முடக்கத்தால் சீனாவின் உள்நாட்டு நுகர்வும், வெளிநாட்டு வர்த்தகமும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் சீனா இந்த ஆண்டு அதன் பொருளாதார வளர்ச்சி இலக்கான 5.5% அடைய முடியாது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மோடி மற்றும் சி ஜின்பிங்
UAE : நிதி மோசடி - மிகப்பெரிய சிக்கலில் சிக்க இருக்கும் அரபு அமீரகம் - பொருளாதாரம் வீழுமா?

ஆசிய நாடுகளில் என்ன பாதிப்பு?

இருப்பினும் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார கணிப்புகள் உற்சாகமாகவே உள்ளன. ஆசிய அபிவிருத்தி வங்கி வெளியிட்ட அறிக்கையில் ஆசியாவின் வளரும் பொருளாதாரங்கள் 2022 இல் 5.25%மும், 2023 இல் 5.3% மும் வளரும் என மதிப்பிட்டுள்ளது.

சீனாவைத் தவிர மற்ற நாடுகளில் கடுமையான கோவிட் கட்டுப்பாடுகள் இல்லை. இருப்பினும் விலைவாசி உயர்வு, அமெரிக்க டாலருக்கு மாற்றான உள்ளூர் செலாவணிகள் வீழ்ச்சி, நிதி நிலைமைகளின் இறுக்கம் ஆகியவை காரணமாக சில நாடுகளில் பொருளாதார வளர்ச்சி குறையும்.

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் அமெரிக்காவில் பணவீக்கம், ஐரோப்பாவில் எரிபொருள் விலை உயர்வு, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள், ரஷ்யா - உக்ரைனிலிருந்து கோதுமை இறக்குமதி செய்யும் ஆப்பிரிக்க நாடுகளின் பாதிப்புகள், சீனாவின் பொது முடக்கத்தால் பொருளாதார நெருக்கடி இவையெல்லாம் ஒரு கட்டுக்குள் இருந்தால் மந்தநிலை வராது.

இல்லையேல் கோவிட் காலத்தை விட அதிகமான பொருளாதார மந்தநிலையை உலகம் சந்திக்க வேண்டியிருக்கும்.

மோடி மற்றும் சி ஜின்பிங்
இலங்கை பொருளாதாரம் திவாலானது எப்படி? - பகுதி 1

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com