ஐக்கிய அரபு அமீரகம் சட்டவிரோதப் பணப்புழகத்தை எதிர்த்து போராடியதா இல்லையா என்பதை ஜி 7 எனப்படும் பணக்கார நாடுகளின் நிதி நடவடிக்கை பணிக்குழு விரைவில் வாக்களித்து முடிவு செய்யும். இந்த நிதி நடவடிக்கை பணிக்குழு பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் இருக்கிறது.
இந்த நிதிக்குழு உலகளவில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தைக் கண்காணித்து வருகிறது. அக்குழுவின் உறுப்பினர்கள் சிலர் கருத்துப்படி அமீரகம் இத்தகைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனையைத் தடுக்கத் தவறியதாக கூறுகிறார்கள். அதனால் அமீரகத்தைச் சந்தேகப் பட்டியல் அல்லது சாம்பல் நிறப் பட்டியலில் சேர்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதென விசயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். கருப்புப் பட்டியல் என்பது முற்றிலும் சட்டவிரோத பரிவர்த்தனை நடக்குமென முடிவு செய்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
பாரிசில் இருக்கும் இக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் இப்படி கருத்துக் கூறியிருக்கின்றனர். அமீகரம் இத்தகைய சட்டவிரோத பணப் போக்குவரத்தை எதிர்த்து போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுகின்றனர். வரும் வெள்ளிக்கிழமை இது குறித்து இக்குழு முடிவை அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய சந்தேகப்பட்டியலில் சேர்க்கக் கூடாது என்றால் பாரிசில் இருக்கும் நிதிக்குழுவின் 39 உறுப்பினர்களும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். அதன்படி ஒரு நாடு சட்டவிரோத பரிவர்த்தனையைத் தடுப்பதற்கு போதுமான நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று பொருள். ஆனால் சில உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தால் குறிப்பிட்ட நாட்டின் மீதான கண்காணிப்பு நடத்தப்படும். அதை ஒட்டி வரும் முடிவுகளிலிருந்து அந்நாடு எந்தப் பட்டியலில் சேர்க்கப்படும் என்பது முடிவு செய்யப்படும்.
கருப்பு பட்டியல் போலச் சாம்பல் பட்டியல் ஆபத்தானது அல்ல. கருப்புப் பட்டியலில் இருக்கும் நாடுகள் தண்டனைக்குரியது.
கருப்பு பட்டியல் போலச் சாம்பல் பட்டியல் ஆபத்தானது அல்ல. கருப்புப் பட்டியலில் இருக்கும் நாடுகள் தண்டனைக்குரியது. தற்போது அமீரகம் இத்தகை சட்டவிரோத பரிவர்த்தனையை எதிர்த்து நடவடிக்கை எடுத்து வருவதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பாரிஸ் நிதிக்குழுவின் சாம்பல் பட்டியலில் துருக்கி, ஜிம்பாவே, அல்பேனியா உட்பட இரண்டு டஜன் நாடுகள் உள்ளன. கருப்புப் பட்டியலில் ஈரானும், வட கொரியாவும் உள்ளன. பாரிஸ் நிதிக் குழு ஜி 7 நாடுகளால் நியமிக்கப்பட்டு முப்பது ஆண்டுகளாகச் செயல்படுகிறது. தற்போது வளைகுடாவில் வட்டார நிதிமையமாக இருக்கும் அமீரகம் குறித்து இக்குழு முக்கிய முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறது.
பாரிஸ் நிதிக்குழு இவ்விவகாரம் குறித்து இதுவரை வெளிப்படையாக பேசவில்லை. அது உள் அலுவலக விசயம் மற்றும் இரகசியமானது என்றே கூறி வருகிறது. அமீரக அரசைப் பொறுத்தவரை பாரிஸ் நிதிக்குழு, முடிவை வெளியிடும் பட்சத்தில் அதிகாரப்பூர்வ பதில் அறிக்கையை வெளியிடுமெனக் கூறியிருக்கிறது.
அமீரகத்திற்கு ஏற்படப்போகும் பிரச்சினைகள்
அமீகரத்திற்கு அருகாமை நாடான சவுதி அரேபிய நிதிச்சந்தை, மற்றும் மூலதனச் சந்தையில் அமீரகத்திற்கு போட்டியாக இருக்கிறது. இந்நிலையில் அமீரகம் சாம்பல் பட்டியலில் சேர்க்கப்பட்டால் அது அந்நாட்டிற்கு ஒரு பின்னடைவாக இருக்குமென கருதப்படுகிறது.
அமெரிக்காவின் வால்ஸ்டீரிட்ட்டில் இருக்கும் பல வங்கிகளின் வளைகுடா வட்டாரத் தலைமையங்கள் துபாயில் இருக்கின்றது. பாரிஸ் நிதிக்குழுபோன்ற பன்னாட்டு நெறிமுறைகளின் படி அபராதங்களைத் தவிர்க்க வேண்டுமானால் இந்த வங்கிகள் தமது வாடிக்கையாளர் நாடுகளிடமிருந்து கூடுதல் ஆதாரங்களைக் கேட்கும். இது அமீரகத்தில் தலைநகரான அபுதாபியில் இருக்கும் 1 டிரில்லியனுக்கும் மேல் உள்ள சொத்துக்களைப் பாதிக்கும்.
ஐஎம்எஃப் எனும் பன்னாட்டு நிதி முனையத்தின் அறிக்கைப் படி சாம்பல் பட்டியலில் உள்ள நாடுகளில் நடவடிக்கை காரணமாக முதலீடுகள் பெருமளவு குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அமீரகம் சாம்பல் பட்டியலில் சேர்க்கப்பட்டால் அதன் வீழ்ச்சியைக் கணக்கிடுவது கடினமாக இருக்கும். மேலும் அந்நாட்டை நிதி நிறுவனங்கள் ஆபத்துள்ள நாடாக அணுகலாம்.
கடந்த ஆண்டு நிதி மோசடி, மற்றும் பயங்கரவாத பணப் போக்குவரத்திற்கு எதிராக அமீரகம் 1 பில்லியன் டாலர் பணத்தை அபராதமாக விதித்திருக்கிறது.
பாரிஸ் நிதிக்குழு 2020 ஆம் ஆண்டிலேயே தனது அறிக்கையில் அமீரகத்தை எச்சரித்திருந்தது. அதை அடுத்து அமீரகம் நிதி மோசடிகள், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி செல்வது போன்றவற்றைத் தடுக்க சில முயற்சிகள் எடுத்தது.
ஹமீத் அல் சாபி என்பவர் தலைமையில் அமீரக அரசு, ஒரு குழுவை இதற்கென அமைத்தது. இக்குழு சட்டவிரோத பண வருகையைத் தடுப்பதற்கு முயன்றது. அமீரகம் சர்வதேச நிதி முறைக்குக் கட்டுப்படு நடப்பதற்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறது என அல் சாபி கூறினார்.
இதன் தொடர்ச்சியாக அமீரகம் நிதித்துறை குற்றங்களை விசாரிப்பதற்கென்றே தனி நீதிமன்றங்களை நியமித்தது. மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை 2023 ஆம் ஆண்டிலிருந்து 9% ஆக உயர்த்தப் போவதாகவும் அறிவித்திருக்கிறது. அமீகரத்தின் மத்திய வங்கி சமீபத்தில் நிதி மோசடி செய்வோருக்கு அபராதம் விதித்திருக்கிறது. மேலும் ஹவாலா பரிவர்த்தனைகளுக்கு ஒழுங்குமுறைகளையும் விதித்திருக்கிறது. அதே போன்று அறக்கட்டளைகள் வழியாகப் பயங்கரவாத தேவைகளுக்குச் செல்லும் பணத்தைத் தடுக்கும் விதத்தில் புதிய கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது.
கடந்த ஆண்டு நிதி மோசடி, மற்றும் பயங்கரவாத பணப் போக்குவரத்திற்கு எதிராக அமீரகம் 1 பில்லியன் டாலர் பணத்தை அபராதமாக விதித்திருக்கிறது. மேலும் இதற்கேற்ற முறையில் பண மோசடி தடுப்புச் சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இதில் பணப் பறிமுதல், சொத்துக்களை முடக்குதல் ஆகியவை அடங்கும்.
ஏப்ரல் 2020 இல் பாரிஸ் நிதிக்குழு வெளியிட்ட அறிக்கையின் படி அமீரகம் பயங்கரவாத நிதியுதவியைத் தடுக்க எவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது என்பதைத் தெரிவிக்கிறது. இருப்பினும் பணமோசடி குறித்த அதிக தகவல்கள் அமீரகத்திடமிருந்து நிதிக்குழுவிற்குச் செல்லவில்லை. அதனால் நிதிக்குழு அமீரகம் குறித்து நிதி பரிவர்த்தனையை ஆய்வுக்கு எடுத்திருக்கிறது.
நிதி மோசடியைத் தடுக்க அமீரகம் இவ்வளவு நடவடிக்கைகளை அதன் கண்காணிப்பு காலத்தில் எடுத்திருந்தாலும் தற்போது அந்நாடு சாம்பல் பட்டியலில் சேர்ப்பதை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது. அந்தப் போராட்டத்தில் அமீரகம் வெற்றி பெற்றால் ஒரு வேளை அது சாம்பல் பட்டியலில் சேர்க்கப்பட்டாலும் விரைவிலேயே வெளியே வந்து விடும்.