இந்த உலகில் இன்னும் எவ்வளவு தங்கம் மிச்சம் இருக்கிறது தெரியுமா?

உலக தங்க கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் ஹன்னா பிராண்ட்ஸ்டேட்டர், "எங்களிடம் இருக்கிற தங்கத்தின் அளவு குறைந்துகொண்டே வருகிறது. இதனால் உற்பத்தி உச்சத்தை அடைவது நாம் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியேவும் நடக்கலாம்" என்றார்.
Gold
GoldGunay Mutlu

கடந்த மாதத்தில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து, உச்சத்தைத் தொட்டது. இந்த விலை உயர்வு தங்க வியாபாரிகளால் உந்தப்பட்டாலும், இந்த விலைமதிப்பற்ற உலோகத்தின் விநியோகம் இறுதியில் எப்போது தீரும்? என்ற கேள்வியை எழுப்புகிறது.

தங்கத்தில் பணத்தை செலவிடுவது சிறந்த முதலீடாக பார்க்கப்படுகிறது. ஒரு முக்கியமான கௌரவ சின்னமாகவும் அது இருக்கிறது. மேலும் பல மின்னணு சாதனங்களின் தயாரிப்புகளில் முக்கிய அங்கமாகவும் உள்ளது.

ஆனால் தங்கம் ஒரு வரையறுக்கப்பட்ட இயற்கை வளமாகவே இருக்கிறது. மேலும் மேலும் வெட்டியெடுக்க எதுவும் இல்லாத நிலையை அடைந்துவிட்டால், அது முடிவுக்கு வந்துவிடும்.

Gold  Bars
Gold BarsPexels

தங்கத்தின் உச்சகட்டம் :

தங்கத்தின் உச்சகட்டம் என்ன? என்பது பற்றி வல்லுநர்கள் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். ”நாம் வெட்டி எடுத்துக் கொண்டே இருந்தால் ,எப்போது வேண்டுமானாலும் தங்கம் இறுதியை எட்டலாம். ஒருவேளை, நாம் ஏற்கனவே அந்த நிலையை அடைந்திருக்கலாம்” என்று சிலர் கூறுகிறார்கள்.

உலக தங்க கவுன்சிலின் கூற்றுப்படி, தங்கச் சுரங்க உற்பத்தி 2019-ல் மொத்தம் 3,531 டன்களாக இருந்தது. இது 2018 ஐ விட 1% குறைவாக உள்ளது. 2008-க்குப் பிறகு உற்பத்தியில் ஏற்படும் முதல் ஆண்டு சரிவு இதுவாகும்.

உலக தங்க கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் ஹன்னா பிராண்ட்ஸ்டேட்டர் கூறுகையில், "எங்களிடம் இருக்கிற தங்கத்தின் அளவு குறைந்துகொண்டே வருகிறது. இதனால் வருகிற ஆண்டுகளில் எங்களின் விநியோகம் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. உற்பத்தி உச்சத்தை அடைவது நாம் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியேவும் நடக்கலாம்" என்றார்.

Gold Mining
Gold MiningPexels

தங்கம் அதன் உச்சத்தை அடைந்தாலும் கூட, அதற்குப் பிறகு வரும் ஆண்டுகளில் உற்பத்தியில் ஆச்சர்யப்படத் தக்க சரிவைக் காண வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மாறாக, சில தசாப்தங்களாக தங்கம் வெளிவரும் சதவீதம் படிப்படியாகக் குறைந்து வருவதைக் காணலாம்.

MetalsDaily.com இணையதளத்தின் ரோஸ் நார்மன் கூறுகையில், "சுரங்கத்திலிருந்து தங்கம் தயாரிக்கப்படுவதற்கான அளவீட்டு அட்டவணை சீரான வரிசையைக் கொண்டுள்ளது. வருங்காலத்தில் அது கீழ்நோக்கிய பாதையில் இருக்கலாம். ஆனால் நம்ப முடியாத அளவிற்கெல்லாம் அது சரிவை நோக்கி போக வாய்ய்ப்பு இல்லை" என்று கூறுகிறார்.

எவ்வளவு தங்கம் மீதம் உள்ளது?

சுரங்க நிறுவனங்கள் இரண்டு வழிகளில் நிலத்தில் இருக்கும் தங்கத்தின் அளவை மதிப்பிடுகின்றன:

1.கையிருப்பு.

2.மூலாதார வளம்.

Gold Mining
Gold MiningPexels

தங்க இருப்பின் அளவை, மூலாதார வளத்தை விட துல்லியமாக கணக்கிட முடியும். இருந்தாலும் இந்த அளவிடுதல் சவாலானதாகத் தான் இருந்து வருகிறது.

அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, நிலத்தடியில் தங்கத்தின் இருப்பு தற்போது சுமார் 50,000 டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதே நோக்கில் பார்க்கப்போனால், சுமார் 190,000 டன் தங்கம் மொத்தமாக வெட்டப்பட்டிருக்கலாம். ஆனால் இது துல்லியமான கணக்கீடு என்று சொல்ல முடியாது.

இந்த தோராயமான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இன்னும் 20% வெட்டப்பட வேண்டியுள்ளது. இந்த அளவானது மாறுபடக்கூடியதாகவும் இருக்கும்.

புதிய தொழில்நுட்பங்களின் வருகையால், தங்கத்தை பிரித்தெடுப்பதில் பெரிய சிக்கல்கள் இருக்கப்போவதில்லை. மிக சமீபத்திய கண்டுபிடிப்புகளில் பெரிய தரவு, AI மற்றும் ஸ்மார்ட் டேட்டா மைனிங் ஆகியவை அடங்கும். இது செயல்முறைகளை மேம்படுத்தி, செலவுகளைக் குறைக்கிறது. ரோபாட்டிக்ஸ் ஏற்கனவே சில தளங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சுரங்க ஆய்வுகளில் இது நிலையான தொழில்நுட்பங்களாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Gold Mining
Gold MiningPexels
Gold
எல் டொராடோ எனும் தங்க நகரம் உண்மையில் இருந்ததா? - ஒரு சாகச பயணம்

மிகப்பெரிய மூல ஆதாரங்கள் :

வரலாற்றில் தங்கத்தின் மிகப்பெரிய சுரங்கம் தென்னாப்பிரிக்காவின் விட்வாட்டர்ஸ்ராண்ட் பேசின் ஆகும். இதுவரை வெட்டியெடுக்கப்பட்ட தங்கத்தில் விட்வாட்டர்ஸ்ராண்ட் சுமார் 30% ஆகும்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள மிக ஆழமான எம்போனெங் சுரங்கம், ஆஸ்திரேலியாவில் உள்ள சூப்பர் பிட் மற்றும் நியூமாண்ட் போடிங்டன் சுரங்கங்கள், இந்தோனேசியாவின் கிராஸ்பெர்க் சுரங்கம் மற்றும் அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள சுரங்கங்கள் ஆகியவை தங்கத்தின் மற்ற முக்கிய ஆதாரங்களில் அடங்கும்.

சீனா தற்போது உலகின் மிகப்பெரிய தங்க சுரங்கமாக உள்ளது. அதே நேரத்தில் கனடா, ரஷ்யா மற்றும் பெரு ஆகியவை முக்கிய உற்பத்தியாளர்களாக உள்ளன.

Gold bars
Gold barsPexels

நிறுவனங்களைப் பொறுத்தவரை, பேரிக் கோல்டின் பெரும்பான்மைக்கு சொந்தமான நெவாடா கோல்ட் மைன்ஸ் என்பது உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்க வளாகமாகும், இது ஆண்டுக்கு 3.5 மில்லியன் அவுன்ஸ் உற்பத்தி செய்கிறது.

புதிய தங்கச் சுரங்கங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றிலிருந்து பெரிய அளவில் தங்கம் வைப்புக்கு வருவதில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான தங்க உற்பத்தி தற்போது பல தசாப்தங்களாக பயன்பாட்டில் உள்ள பழைய சுரங்கங்களில் இருந்து தான் வந்து கொண்டிருக்கிறது.

உலகின் டாப் 10 தங்க சுரங்கங்கள் :

1 நெவாடா தங்கச் சுரங்கங்கள் - அமெரிக்கா 3,311,000 ounces

2 முருண்டாவ் - உஸ்பெகிஸ்தான் 2,990,020 ounces

3 கிராஸ்பெர்க் - இந்தோனேசியா 1,370,000 ounces

4 ஒலிம்பியாடா - ரஷ்யா 1,184,068 ounces

5 பாபுலோ வெய்ஜோ - டொமினிகன் குடியரசு 814,000 ounces

6 கிபாலி - காங்கோ ஜனநாயக குடியரசு 812,000 ounces

7 காடியா - ஆஸ்திரேலியா 764,895 ounces

8 லிஹிர் - பப்புவா நியூ கினியா 737,082 ounces

9 கனடியன் மலார்டிக் - கனடா 714,784 ounces

10 போடிங்டன் - ஆஸ்திரேலியா 696,000 ounces

Gold
பீகார் தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு : கொட்டிக் கிடக்கும் லட்சம் கோடி மதிப்பிலான தங்கம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com