Gaza: தொடரும் பாரபட்சமற்ற கொலைகள்; அமெரிக்காவுக்கும் ஐநாவுக்கு அடங்காத இஸ்ரேல் பிரதமர்!

ஐநாவில் ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்துவதற்கு ஆதரவளித்ததை விட அதிக நாடுகள் இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்த தீர்மானத்துள்ளன. அமெரிக்க அதிபர் வெளிப்படையாக இஸ்ரேலை எச்சரித்துள்ளார். இவற்றுக்கு இஸ்ரேல் பிரதமர் சொன்ன பதில் என்ன தெரியுமா?
Gaza: தொடரும் பாரபட்சமற்ற கொலைகள்; அமெரிக்காவுக்கும் ஐநாவுக்கு அடங்காத இஸ்ரேல் பிரதமர்!
Gaza: தொடரும் பாரபட்சமற்ற கொலைகள்; அமெரிக்காவுக்கும் ஐநாவுக்கு அடங்காத இஸ்ரேல் பிரதமர்!Twitter

இஸ்ரேல் கசாவில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்களை கொன்றுவிட்டதால் சர்வதேச நாடுகளிடம் இருந்து ஆதாரவை இழக்கிறது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை எச்சரித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

இஸ்ரேல் அதன் கடும்போக்கு அரசை மாற்ற வேண்டும் என பைடன் கூறியுள்ளார். மேலும் ஐநா சபை உடனடியாக போரை நிறுத்த வேண்டும் எனக் கூறியதனால் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்திருக்கிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான மோதல்கள் நீண்டகாலமாக நடந்து வருகின்றன. அக்டோபர் 7ம் தேதி ஹமாஸின் தாக்குதலுக்கு பிறகு அதிகரித்த இந்த மோதல்களில் பாலஸ்தீனிய ஆயுதக்குழு 1200 பேரைக் கொன்றுள்ளது. 200க்கும் மேற்பட்டவர்களை பணயகைதிகளாக வைத்துள்ளனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான ஒருவார போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் ஹமாஸ் 150 இஸ்ரேலியர்களை விடுவித்தது. பதிலுக்கு இஸ்ரேல் சிறையில் இருந்த 200 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஹாமாஸை அக்டோபர் 7ம் தேதி முதல் தீவிரமாக தாக்கி வரும் இஸ்ரேல் தரைவழியாகவும் வான்வழியாகவும் தொடர்ந்து தாக்கி வருகிறது. இந்த தாக்குதல்களில் 18,400க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய மக்கள் இறந்துள்ளனர்.

இஸ்ரேல் குறித்து தொடர்ந்து பேசிய பைடன் இரண்டு அரசுகள் நடைமுறைக்கு நெதன்யாகு ஒத்துவருவதாகத் தெரியவில்லை. "இதுதான் இஸ்ரேல் வரலாற்றிலேயே மிகவும் பழமையான அரசு" என்றும் "இஸ்ரேலின் பாதுகாப்பு அமெரிக்காவை மட்டும் நம்பி இல்லை. ஐரோப்பா இருக்கிறது, ஐரோப்பிய யூனியன் இருக்கிறது, பல உலக நாடுகள் இருக்கின்றன. ஆனால் இஸ்ரேல் பாரபட்சமின்றி குண்டுகள் போட்டு மக்களை கொல்வதனால் சர்வதேச ஆதரவுகளை இழந்து வருகிறது" என்றும் கூறியுள்ளார்.

Gaza: தொடரும் பாரபட்சமற்ற கொலைகள்; அமெரிக்காவுக்கும் ஐநாவுக்கு அடங்காத இஸ்ரேல் பிரதமர்!
Israel : நாலாபுறமும் எதிரிகள் இருந்தாலும் அஞ்சாத நாடு - பாலைவனம் பேரரசானது எப்படி?

ஐநாவில் மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவு அளித்தன. இது ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த ஆதரவு வழங்கிய நாடுகளின் எண்ணிக்கையை விட அதிகம்.

அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்துள்ளன. 23 நாடுகள் வாக்களிக்கவில்லை.

Gaza: தொடரும் பாரபட்சமற்ற கொலைகள்; அமெரிக்காவுக்கும் ஐநாவுக்கு அடங்காத இஸ்ரேல் பிரதமர்!
Isreal vs Hamas : போருக்கு காரணம் இதுதான்! என்ன நடக்கிறது அங்கு?

"எங்கள் மக்களுக்கு எதிரான இந்த ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை, எங்கள் மக்களுக்கு எதிரான இந்த போர் நிறுத்தப்படும் வரை இந்த பாதையில் தொடர்வது எங்கள் கூட்டு கடமையாகும். எங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்வது எங்கள் கடமை" என பாலஸ்தீனத்தின் ஐநா தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஐநாவின் தீர்மானத்துக்கு பதிலளிக்கும் வகையில் "ஹமாஸை முழுவதுமாக அழித்தொழிக்கும் வரையில் யாராலும் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது" என விடாப்பிடியாக கூறியுள்ளார் பெஞ்சமின் நெதன்யாகு.

Gaza: தொடரும் பாரபட்சமற்ற கொலைகள்; அமெரிக்காவுக்கும் ஐநாவுக்கு அடங்காத இஸ்ரேல் பிரதமர்!
Isreal - Hamas: குடியிருப்பு, மருத்துவமனை, முகாம்களில் தாக்குதல்! கசா மக்களின் நிலை என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com