Israel : நாலாபுறமும் எதிரிகள் இருந்தாலும் அஞ்சாத நாடு - பாலைவனம் பேரரசானது எப்படி?

சுற்றியுள்ள 6 அரபு நாடுகளும் இணைந்து போர் தொடுத்தால் கூட வெல்ல முடியாத சக்தியாக இஸ்ரேல் உருவாகியுள்ளது. 1 கோடி பேர் கூட இல்லாத இந்த நாடு எப்படி வளர்ந்தது?
Israel : நாலாபுறமும் எதிரிகள் இருந்தாலும் அஞ்சாத நாடு - பாலைவனம் பேரரசானது எப்படி?
Israel : நாலாபுறமும் எதிரிகள் இருந்தாலும் அஞ்சாத நாடு - பாலைவனம் பேரரசானது எப்படி?Twitter

இஸ்ரேல் இன்று உலக நாடுகள் திரும்பிப்பார்க்கும் ஒன்றாக இருக்கிறது. வெறும் 91 லட்சம் மக்கள் இருக்கும் இந்த நாட்டைப் பார்த்து வல்லரசு நாடுகளும் அஞ்சும் நிலை இருக்கிறது.

மத்திய கிழக்கில் மேற்கு நாடுகளின் உளவாளி, தங்களுக்கு இடம் கொடுத்த பாலஸ்தீனியர்களையே எதிர்க்கும் நாடு என அரசியல் ரீதியில் இஸ்ரேல் விமர்சிக்கப்பட்டாலும் அந்த நாட்டிலிருந்து நாம் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றனர்.

குறைந்த மக்கள் தொகை இருந்தாலும் வலுவான இராணுவத்தை வைத்திருப்பதன் ரகசியம் நாம் அறியாதது. சுற்றியிருக்கும் அனைத்து அரேபிய நாடுகளும் தாக்குதல் நடத்தியபோதும் இஸ்ரேலை வெல்லமுடியவில்லை.

பாலைவனத்தில் இருந்தாலும் விவசாயத்தில் உலகுக்கே முன்னுதாரனமாக இருப்பது எப்படி? பால் உற்பத்தியில் மட்டும் 2004 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் இஸ்ரேலியர்கள் 6 அறிவியல் நோபல் பரிசுகளைப் பெற்றுள்ளனர். இது இந்தியாவுக்கு இன்றும் கனவாகவே இருக்கும் விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில் முனைவோர்களையும், புதிய தொழில்நுட்பங்களையும் உருவாக்குவதில் இஸ்ரேல் தனிச்சிறப்பு பெற்றுள்ளது. சிறிய இராணுவமாக இருந்தாலும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் கில்லாடிகள் இஸ்ரேலியர்கள்.

மொசாட் எனும் உலகின் சிறந்த உளவு அமைப்பை வைத்திருந்தாலும் பிற வல்லரசு நாடுகளுடன் நட்புறவு பேணுவதிலும் இஸ்ரேல் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது.

இஸ்ரேல் உயர்ந்தது எப்படி? கொஞ்சம் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

இஸ்ரேலும் போர்களும்

1948ம் ஆண்டு இஸ்ரேல் என்ற நாடு உருவானதாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அறிவித்தன. அரேபியர்கள் உலகில், சிறிய நிலப்பகுதியில் யூதர்களுக்காக உருவானது இஸ்ரேல்!

உலகெங்கிலும் இருந்து யூதர்கள் இஸ்ரேலுக்கு சென்றனர். வராலாறு முழுவதும் நாடற்று திரிந்த தங்களுக்கு தாய்நிலம் ஒன்று கிடைத்துவிட்டதாக அகமகிழ்ந்தனர்.

ஆனால் அந்த நிலத்தைக் காத்துக்கொள்ளவும் விரிவிபடுத்தவும் பல போர்களை அவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது. 1948ம் ஆண்டிலேயே அரபு-இஸ்ரேலிய போர் நடைபெற்றது.

எகிப்து, யோர்தான், சிரியா மற்றும் ஈராக் ஆகிய அரபு நாடுகள் இஸ்ரேல் மீது போர் தொடுத்தன. இந்த போரில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு வல்லரசு நாடுகளும் இஸ்ரேலுக்கு உறுதுணையாக நின்றன. போரில் இஸ்ரேல் வெற்றிபெற்றது. இதனை இஸ்ரேல் சுதந்திரப்போர் என அழைக்கின்றனர்.

1956ம் ஆண்டு எகிப்திய பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிக்க சூயஸ் போர் நடைபெற்றது. இதில் பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு உதவின. போரில் இஸ்ரேல் வெற்றி பெற அமெரிக்காவும் ரஷ்யாவும் கூட ஆதரவளித்திருக்கின்றன.

1967ம் ஆண்டு எகிப்து, யோர்தான், சிரியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போரின் விளைவாக சினாய் மலை, வெஸ்ட் பேங்க், கோலன் ஹைட்ஸ் ஆகிய இடங்களை ஆக்கிரமித்தது இஸ்ரேல். இப்போது இஸ்ரேலை எதிர்க்கும் ஹமாஸ் அமைப்பு உருவாக இந்த ஆக்கிரமிப்பு ஒரு முக்கிய காரணம்.

ஆறு ஆண்டுகள் கழித்து இஸ்ரேலிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்காக சிரியா மற்றும் எகிப்து நாடுகள் தாக்குதல் நடத்தின. இந்த நேரத்தில் அமெரிக்கா தனது இராணுவத்தை அனுப்பியதால் இஸ்ரேல் மீண்டும் வெற்றி பெற்றது.

போர்களில் அநியாயம், அதர்மம் எல்லாம் கடந்து, அரபு நாடுகளை விட குறைந்த மக்கள் தொகை இருந்தாலும், இஸ்ரேல் இந்த போர்களை வென்றதன் பின்னணியில் பல காரணங்கள் இருக்கின்றன.

கல்வி, தொழில் நுட்ப வளர்ச்சி, வேளாண்மை வளர்ச்சி, அரசின் கொள்கைகள், இராணுவ கொள்கைகள், அகதிகள் வருகை, பொருளாதார மேலாண்மை, வெளியுறவுக் கொள்கைகள், தொழில்முனைவோர் அதிகரிப்பு என அடுக்கிக்கொண்டே போகலாம்.

இஸ்ரேல் விவசாயம்

விவசாயத்தைப் பொறுத்தவரை பாலைவனத்தில் விவசாயம் செய்வதற்கான தொழில்நுட்பங்களை இஸ்ரேல் கண்டுபிடித்தது. தக்காளி போன்ற பயிர்களை குறைந்த நிலத்தில் குறைந்த தண்ணீர் செலவில் வளர்பதற்கான முறைகளைக் கண்டறிந்தனர்.

பயிர்களை காத்து பன்மடங்கு அதிக மகசூல் தரும் உரங்களைக் கண்டுபிடித்தனர். நவீன தொழில்நுட்பங்களை விவசாயத்தில் பயன்படுத்தினர், ட்ரோன்கள், சென்சார்களை விவசாயத்தில் பயன்படுத்தினர்.

தண்ணீர் பயன்பாட்டை பெருமளவு குறைக்கும் சொட்டுநீர் பாசனத்தை இங்கு தான் அறிமுகப்படுத்தினர். இது 70% வரை தண்ணீர் செலவைக் குறைத்தது.

1948ல் இருந்ததை விட இன்று பன்மடங்கு அதிக காய்கறிகளையும் பிற பயிர்களையும் இஸ்ரேல் அறுவடை செய்கிறது. ஆனால் அதற்கான தண்ணீர் பயன்பாடு அதே அளவில் தான் இருந்து வருகிறது.

தண்ணீர் மேலான்மையில் உலக நாடுகளுக்கு இஸ்ரேல்தான் வாத்தியார் எனலாம். பெருமளவு குடிநீர், உப்பு நீரை தூய்மையாக்கும் பிளான்ட்கள் மூலம் பெருகின்றனர். லீக்கேஜ் மூலமாக தண்ணீர் வீணாவதை முற்றிலுமாக குறைத்துள்ளனர்.

பஞ்சம் அல்லது வறட்சி வந்தால் கூட இஸ்ரேலால் தாங்கிக்கொள்ள முடியும் என்பதை அந்த நாட்டின் தண்ணீர் மேலாண்மைதுறையின் கொள்கைகள் உறுதி செய்கின்றன.

தண்ணீர் பயன்பாட்டை இன்னும் சிறப்பானதாக மாற்றும் தொழில்நுட்பங்களை அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதுபோல விவசாயத்திலும் புதிய திட்டங்களை கொண்டுவரும் தொழில்முனைவோருக்கு அரசு பக்கபலமாக இருக்கிறது. விவசாயம் குறித்து படிப்புகளும் உலகத்தரத்தில் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

இஸ்ரேல் இராணுவம்

இஸ்ரேல் மிகப் பெரிய இராணுவ இயந்திரத்தைக் கொண்டுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தில் சுமார் 1,69,500 பேர் முக்கியப் பணியாளர்களாக இருக்கின்றனர். இவர்கள் இராணுவம், கடற்படை மற்றும் துணை இராணுவம் ஆகிய பிரிவுகளில் உள்ளனர்.

மேலும் 4,65,000 பேர் அதன் இருப்புப் படைகளாக உள்ளனர். 8,000 பேர் அதன் துணை ராணுவத்தின் ஒரு பகுதியாக உள்ளனர்.

சுமார் 3,00,000 இஸ்ரேலிய வீரர்கள் இப்போது காசா பகுதிக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளனர். மிகப் பெரிய தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர இஸ்ரேலின் குடிமக்கள் அனைவருக்கும் கட்டாய இராணுவ பயிற்சி வழங்கப்படுகிறது. இஸ்ரேலின் குடிமக்களுக்கு இராணுவ சேவை கட்டாயம். 18 நிரம்பிய ஆண்கள் 32 மாதமும் பெண்கள் 24 மாதமும் இராணுவ சேவையாற்ற வேண்டும்.

இதனால் இஸ்ரேல் மக்கள் எப்போதும் இராணுவ வீரர்களாக மாற தயாராக இருக்கின்றனர். அங்கு துப்பாக்கி உபயோகிக்கத் தெரியாதவர் யாருமில்லை. இப்போது போர் நடைபெற்று வரும் சூழலில் எதிர்களின் ஊடுருவலைத் தவிர்க்க இஸ்ரேல் பொதுமக்களுக்கு துப்பாக்கி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவ கண்காணிப்பிலும் நவீன ஆயுதங்கள் வைத்திருப்பதிலும் மேம்பட்ட நாடாக திகழ்கிறது இஸ்ரேல்.

ஹமாஸின் ஏவுகணைகளை அழிக்க இஸ்ரேல் பயன்படுத்தும் அயர்ன் டோம் பற்றி நீங்கள் அறிந்திருக்கக் கூடும். இது எதிரியின் ஏவுகணையை கண்டறிந்து அதனை தடுக்க எதிர் ஏவுகணையை ஏவப் பயன்படும் அமைப்பாகும். இதில் நவீன ரேடார் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

Israel : நாலாபுறமும் எதிரிகள் இருந்தாலும் அஞ்சாத நாடு - பாலைவனம் பேரரசானது எப்படி?
Mossad : உலகின் சிறந்த 'உளவுத்துறை' செய்த 5 சம்பவங்கள் - வியக்க வைக்கும் தகவல்!

இஸ்ரேலில் தரைப்படையில் 2200க்கும் மேற்பட்ட பீரங்கிகளும் artillery எனப்படும் சிறிய ரக பீரங்கி 530-ம் இருக்கிறது.

விமானப்படையைப் பொறுத்த வரை, 339 போர் திறன் கொண்ட விமானங்கள் இருக்கின்றன. இவற்றில் 309 தரை தாக்குதல் ஜெட் விமானங்கள் அடக்கம்.

உலகில் 9வது சிறந்த விமானப்படை இஸ்ரேலினுடையது. கடற்படையைப் பொறுத்தவரை 5 நீர் மூழ்கிகளும் 49 ரோந்து மற்றும் கடலோரப் படை கப்பல்களும் உள்ளன.

இவற்றைத் தவிர ஜெரிகோ ஏவுகணைகளும் அணு ஆயுதங்களும் அவற்றை வீசக்கூடிய திறன் கொண்ட விமானங்களும் இஸ்ரேலிடம் இருக்கிறது.

2022ம் ஆண்டு அதன் மொத்த ஜிடிபி-யில் 4.5 விழுக்காட்டை இராணுவத்துக்காக செலவிட்டுள்ளது. இது உலக அளவில் 10வது அதிக விழுக்காடாகும். இந்தியா 2023ம் ஆண்டு 1.19 விழுக்காடு பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது இராணுவத்தை பலம்வாய்ந்ததாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் பிற நாடுகளுக்கும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறது இஸ்ரேல். 2018-22 வரையிலான காலக்கட்டத்தில் 35 நாடுகள் 3.2 பில்லியன் மதிப்பிலான ஆயுதங்களை இஸ்ரேலிடம் இருந்து வாங்கியிருக்கின்றன. இதில் மூன்றில் ஒரு பங்கை (1.2பில்லியன்) வாங்கியிருப்பது இந்தியா தான்!

அமெரிக்காவில் இருந்து போருக்காக பல பில்லியன் டாலர்களை நிதியுதவியாக வாங்கியிருக்கிறது இஸ்ரேல்.

Israel : நாலாபுறமும் எதிரிகள் இருந்தாலும் அஞ்சாத நாடு - பாலைவனம் பேரரசானது எப்படி?
இஸ்ரேல் : பாலும் தேனும் ஓடும் நாடு என அறியப்படுவது ஏன்?

இஸ்ரேல் இராணுவத்தின் வெற்றி அதன் தனியார் நிறுவனங்களையும் சார்ந்திருக்கிறது. இராணுவத் தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதில் தனியார் நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. அரசும் நிறுவனங்களும் பலன்பெறும் வகையில் திட்டங்கள் அமைத்திருக்கின்றனர்.

இஸ்ரேலுக்கு உலகின் பல நாடுகளில் இருந்து மக்கள் வந்து சேர்ந்திருப்பதால் பலதரப்பட்ட தொழில்நுட்பங்களும் சிந்தனைகளும் இணையும் நாடாக இருக்கிறது.

இஸ்ரேலில் இஞ்சினியர்கள் அதிக விகிதத்தில் இருக்கின்றனர். 10,000 பேருக்கு 140 இஞ்சினியர்கள் இருந்துவருகின்றனர். அறிவியல், பொறியியல், கணிதம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இஸ்ரேல் சிறந்து விளங்க அதன் கல்விமுறைதான் முக்கிய காரணம்.

உலகின் டாப் 100 பல்கலைக்கழங்கலில் 3 இஸ்ரேலில் இருக்கின்றன. இந்தியாவின் ஒரு பல்கலைக்கழகம் கூட அதில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவம், மருத்துவம் மற்றும் பிற தொழில்நுட்ப துறைகளில் வளரும் ஸ்டார்ட்-அப்களுக்கு நிதியளிக்க பல திட்டங்களை இஸ்ரேல் அரசு வகுத்துள்ளது.

மேலும் இஸ்ரேலில் உள்ள தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்கள் இடையில் தொடர்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகின்றன.

இஸ்ரேல் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் தொடர்பில் இருக்கும் நிலப்பகுதியில் அமைந்திருப்பது வர்த்தகத்துக்கு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

Israel : நாலாபுறமும் எதிரிகள் இருந்தாலும் அஞ்சாத நாடு - பாலைவனம் பேரரசானது எப்படி?
இஸ்ரேல் என்ற நாடு உருவாக ஐன்ஸ்டீன் காரணமாக இருந்தது எப்படி? - அறிவியலாளரின் மற்றொரு முகம்!

சைபர் தொழில்நுட்பத்திலும் இஸ்ரேல் சிறந்து விளங்குகிறது. சைபர் பாதுகாப்பில் முதன்முறையாக முனைவர் பட்டம் வழங்கிய நாடு இஸ்ரேல்.

இதன் சைபர் தொழில்நுட்பங்களில் ஒன்றான பெகாசஸ் பெரும் விலைக்கொடுத்து வாங்கியது இந்தியா. பெகாசஸ் இந்தியாவில் சர்ச்சைக்குள்ளான ஒரு தொழில்நுட்பமாகும்.

Israel : நாலாபுறமும் எதிரிகள் இருந்தாலும் அஞ்சாத நாடு - பாலைவனம் பேரரசானது எப்படி?
இஸ்ரேல் இராணுவத்தின் பலம் என்ன? நவீன விமானங்கள் டு நீர்மூழ்கி - ஹமாஸை தோற்கடிக்க முடியுமா?

இஸ்ரேலிய ஸ்டார்ட்-அப்களான வேஸ், மொபிலியி, எம்-சிஸ்டம்ஸ், வைபர், அனோபிட், ஆர்கேம், ஸ்டோர்டாட் ஆகியவற்றை கூகுள், ஆப்பிள், இண்டெல், சாம்சங், சான் டிஸ்க் ஆகிய பெரு நிறுவனங்கள் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாலைவன நாடான இஸ்ரேல் அறிவு சார்ந்த பொருளாதாரமாக தன்னை உருவாக்கிக்கொண்டுள்ளது. நாலாபுறமும் எதிரிகள் இருந்தாலும் வலுவான நாடுகளுடன் நட்பு கொண்டு தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது.

Israel : நாலாபுறமும் எதிரிகள் இருந்தாலும் அஞ்சாத நாடு - பாலைவனம் பேரரசானது எப்படி?
கசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் - நடுங்க வைக்கும் தகவல்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com