ஒரே சமயத்தில் கோவிட், குரங்கம்மை மற்றும் HIV -ஆல் பாதிக்கப்பட்ட நபர் - எப்படி?

சுகாதார அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் அவருக்கு குரங்கம்மை மற்றும் எச் ஐ வி இருப்பது உறுதியாகியுள்ளது. நோயாளியின் எச்.ஐ.வி "ஒப்பீட்டளவில் சமீபத்தியதாக" இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
ஒரே சமயத்தில் கோவிட், குரங்கம்மை மற்றும் HIV நோயால் பாதிக்கப்பட்ட நபர்
ஒரே சமயத்தில் கோவிட், குரங்கம்மை மற்றும் HIV நோயால் பாதிக்கப்பட்ட நபர்டிவிட்டர்
Published on

மங்கி பாக்ஸ், கொரோனா, மற்றும் எச்ஐவி நோயால் ஒரே நேரத்தில் இத்தாலி நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்

இத்தாலியை சேர்ந்த 36 வயது நபர் ஒருவர் ஒரே சமயத்தில் கோவிட்19, மங்கி பாக்ஸ் மற்றும் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தி ஜர்னல் ஆஃப் இன்ஃபெக்ஷன் அறிக்கைப்படி, பாதிக்கப்பட்ட நபருக்கு காய்ச்சல், தொண்டை வலி, சோர்வு, தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டது.

பாதிக்கப்பட்ட நபர், ஸ்பெயின் நாட்டிற்குச் சுற்றுலா சென்று திரும்பிய ஒன்பது நாட்களுக்கு பின்னர் அவருக்கு அறிகுறிகள் தோன்றியுள்ளது. அறிகுறிகள் தென்பட்ட மூன்று நாட்களில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து உடலில் மேலும் தடிப்புகள், கொப்புளங்கள் தோன்றியுள்ளது. சுகாதார அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் அவருக்கு குரங்கம்மை மற்றும் எச் ஐ வி இருப்பது உறுதியாகியுள்ளது. நோயாளியின் எச்.ஐ.வி "ஒப்பீட்டளவில் சமீபத்தியதாக" இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

அவருக்கு பைபோலார் டிஸார்டர் இருப்பதும் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் ஸ்பெயினில் தங்கியிருந்தபோது ஆண்களுடன் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டதாக ஆய்வு தெரிவித்துள்ளது.

மேலும் குரங்கம்மை வைரஸ் ஸ்பெயினில் பாதிப்பு ஏற்படுத்திய கிளேட் வகையை சேர்ந்தது என்றும், கொரோனா BA.5.1 என்ற வகையை சேர்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

ஒரே சமயத்தில் கோவிட், குரங்கம்மை மற்றும் HIV நோயால் பாதிக்கப்பட்ட நபர்
இந்தியா கேரளாவில் குரங்கு அம்மை: கொரோனா போல் பரவுமா? அறிகுறிகள் என்ன? சிகிச்சை உள்ளதா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com