இந்தியா கேரளாவில் குரங்கு அம்மை: கொரோனா போல் பரவுமா? அறிகுறிகள் என்ன? சிகிச்சை உள்ளதா?

குரங்கு அம்மை பொதுவாகப் பெரிய பாதிப்புகள் ஏற்படுத்தாது என்றாலும், சிலருக்கு மட்டும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். மக்கள் தொடர்ந்து வெவ்வேறு இடங்களுக்குப் பயணத்தை மேற்கொள்வதால் மேலும் பாதிப்புகள் எழலாம் என்று சுகாதாரத்துறை தெரிவிக்கின்றனர்.
Monkeypox
MonkeypoxNewsSense
Published on

இந்தியாவில் முதல் முறையாக கேரளத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


இதையடுத்து, மத்திய உயா்நிலைக் குழு கேரளத்துக்கு விரைந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து விமானத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அங்கு குரங்கு அம்மை பாதித்த நபருடன் தொடா்பில் இருந்ததால் இவரும் குரங்கு அம்மை பாதிப்புக்குள்ளானாா்.

இதுகுறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ்,”கேரளத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது. அந்த நோய் பிறருக்கும் பரவாத வகையில், நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நோய் பாதிப்புக்குள்ளான நபா் தனது பெற்றோா், விமானத்தில் அருகே அமா்ந்து இருந்தவா்கள், அவரை திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லம் அழைத்து வந்த காா் ஓட்டுநா், ஆட்டோ ஓட்டுநா், விமான ஊழியா்கள் உள்பட 11 பேருடன் தொடா்பில் இருந்துள்ளாா். அவா்களுக்கும் தகவலளித்துவிட்டோம். குரங்கு அம்மை பாதிப்பால் யாரும் அஞ்ச தேவையில்லை.” என்றாா் அவா்.

சரி குரங்கு அம்மை என்றால் என்ன? எப்போது அது பரவ தொடங்கியது?

குரங்கு அம்மை/காய்ச்சல் என்பது புதிய நோய் அல்ல. 1970 ஆம் ஆண்டில் காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டிஆர்சி) பெரியம்மை இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு குழந்தையைத் தனிமைப்படுத்தப்பட்டபோது, முதன்முதலில் உறுதிப்படுத்தப்பட்டதுதான் இந்தகுரங்கு அம்மை.

குரங்கு காய்ச்சல்/அம்மையால் மற்றொரு தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் கோவிட்-19 என்ற தலைப்பில், மற்றொரு பெரிய பயம் இருப்பது புரிந்துகொள்கின்ற விஷயம்தான். குரங்கு அம்மை என்பது அரிதானது. பொதுவாகப் பெரிய பாதிப்புகள் ஏற்படுத்தாது என்றாலும், குரங்கு அம்மை சிலருக்கு மட்டும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். மக்கள் தொடர்ந்து வெவ்வேறு இடங்களுக்குப் பயணத்தை மேற்கொள்வதால் மேலும் பாதிப்புகள் எழலாம் என்று சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

Monkey Pox
Monkey PoxTwitter

குரங்கு அம்மை பற்றி வரலாறு என்ன சொல்கிறது?

குரங்கு அம்மை என்பது வைரஸால் ஏற்படுகிறது. இது Orthopoxvirus எனப்படும் வைரஸ்களின் Poxviridae எனும் குடும்பத்தின் வைரஸ் வகை.

இந்தக் குரங்கு அம்மை எங்கிருந்து வருகிறது, பரவுகிறது என்பது இன்னும் தெரியவில்லை. எனினும் ஆப்பிரிக்க நாட்டில் உள்ள கொறித்து உண்ணும் விலங்குகளிடமிருந்து வரலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றன. குரங்கு அம்மையைக் கண்டறியும் சோதனை தற்போது அமெரிக்காவிலும் அதைச் சார்ந்த ஆய்வகங்களில் மட்டுமே நடத்தப்படுகிறது.

"குரங்கு அம்மை" என்ற பெயர் 1958 ஆம் ஆண்டில் விலங்குகளின் நோயிலிருந்து பெயர் வந்தது. அப்போது ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த இரண்டு குரங்குகளுக்கு இந்நோய் ஏற்பட்டன. இருப்பினும், வைரஸ் குரங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவவில்லை. மேலும் குரங்குகள் நோயின் முக்கிய கேரியர்களாகவும் இல்லை. அதாவது, குரங்குகள் இந்நோய் பரவக் காரணம் கிடையாது.

முதன்முதலில் பதிவுசெய்யப்பட்ட, குரங்கு அம்மை மத்திய, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்டது. பெரும்பாலான நோயத்தொற்றுகள் இங்கு இருந்தன. ஆப்பிரிக்காவிற்கு வெளியே ஏற்பட்ட பாதிப்புகள், அதாவது அமெரிக்கா, பிற இடங்கள் உட்பட பாதிப்புகளுக்குக் காரணம் மக்கள் சர்வதேச பயணத்தை மேற்கொள்வது, விலங்குகளைச் சில நாட்டிலிருந்து சில நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படுவது போன்ற காரணங்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறதே தவிர உறுதி செய்யப்படவில்லை.

Monkey Pox
Monkey PoxTwitter

2003 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட கேஸ்கள் இருந்தன. நவம்பர் - ஜூலை 2021 இல் மேரிலாந்துக்குப் பயணம் செய்தோருக்கு இந்தப் பாதிப்புகள் இருந்தன.

இந்தக் குரங்கு அம்மை கிட்டதட்ட பெரிய அம்மை போலத்தான். ஏற்கெனவே போடப்பட்ட பெரிய அம்மை தடுப்பூசிகளே இந்தக் குரங்கு அம்மை வராமல் தடுக்கும். தொற்றுக்கு எதிரான பாதுகாப்பைப் பெரியம்மை தடுப்பூசியே அளிக்கும். பெரும்பாலான மக்கள் பெரிய அம்மை தடுப்பூசியைச் சிறு வயதிலேயே போட்டிருப்பார்கள். பெரிய அம்மை நோய் அழிக்கப்பட்டுவிட்டதுதான். எனினும், 1972 ஆம் ஆண்டில் அமெரிக்கா பொது மக்களுக்கு வழக்கமாகப் போடப்படும் பெரியம்மை தடுப்பூசிகளை நிறுத்தியது. இதனால் மீண்டும் குரங்கு அம்மை சற்று அதிகரித்திருக்கலாமா எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

Monkeypox
குரங்கு அம்மை: கண்டம் விட்டு கண்டம் பரவும் புதிய வைரஸ் - நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

எப்படிப் பரவும்?

பாதிக்கப்பட்ட நபர், விலங்குகள், அசுத்தமான இடங்கள் மூலம் வைரஸ் பரவலாம். பொதுவாக, வைரஸ் வெடிப்பு ஏற்பட்ட தோல், புண், காயமான இடங்கள், சுவாசம், கண்கள், மூக்கு அல்லது வாயில் உள்ள சளி சவ்வுகள் வழியாக உடலில் நுழைகிறது.

மனிதனிலிருந்து மனிதனுக்குப் பரவக் காரணம், சுவாசம், இருமல், தும்மல் போன்ற நீர் துளிகள் வழியாக, ஒருவர் துணியை இன்னொருவர் மாற்றிப்போட்டுக் கொள்ளும் பழக்கமாகவும் இருக்கலாம். எனினும், மனிதனுக்கு மனிதன் பரவும் தன்மை மிக மிகக் குறைவு, அரிது எனச் சொல்லப்படுகிறது.

இந்த வைரஸ் சமூகப் பரவல் மூலம் பரவ வாய்ப்பில்லை. எனினும், புதிய நமக்கு தெரியாத, அறிந்திராத வழியிலும் பரவலாம் என்று சுகாதார அதிகாரிகள் கவலைப்படுகின்றனர். தொற்று எங்கு, எப்படி ஏற்படுகிறது என்பது இன்னும் விசாரணையிலே உள்ளது. கண்டுபிடிக்க முடியவில்லை.

Monkey Pox
Monkey PoxTwitter

அறிகுறிகள்

வைரஸ் உடலில் நுழைந்த பிறகு, அவை காப்பி செய்யப்பட்டு அதிகமாகிறது. ரத்த ஓட்டம் வழியாக உடலில் பரவுகிறது. நோய்த்தொற்றுக்குப் பிறகு ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வரை அறிகுறிகள் பொதுவாகத் தோன்றாது.

அதன் பிறகுதான் பெரிய அம்மை போலவே தோலில் புண்கள் தோன்றுகின்றன. ஆனால், பெரிய அம்மையைவிட இந்தக் குரங்கு அம்மை பயப்படும் அளவுக்குப் பெரிய நோய் அல்ல. அதைவிட இது குறைந்த பாதிப்புகளே தரும். காய்ச்சல், தலைவலி முதல் மூச்சுத் திணறல் வரை ஆரம்பத்தில் வருவது பொதுவானவை.

ஒன்று முதல் 10 நாட்களுக்குப் பிறகு, கை-கால், தலை அல்லது உடற்பகுதியில் சொறி, அரிப்பு தோன்றலாம். இறுதியில் சீழ் நிரப்பப்பட்ட கொப்புளங்களாக மாறும். ஒட்டுமொத்தமாகவே, அறிகுறிகள் இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும். அதே சமயம் தோல் புண்கள் பொதுவாக 14 முதல் 21 நாட்களுக்குள் வறண்டுவிடும்.

குரங்கு அம்மை அரிதானது. பொதுவாகப் பெரிய ஆபத்து இல்லை என்றாலும், நோய் பாதிக்கப்பட்ட சுமார் 10 சதவிகித்தனர் இதனால் இறக்கலாம். ஆனால், ஒரு நற்செய்தி என்னவென்றால் தற்போது புழக்கத்தில் இருக்கும் வைரஸ்ஸின் வடிவம் லேசானதாகக் கருதப்படுகிறது. அதாவது பெரிய பாதிப்புகள் ஏற்படுத்தாத வைரஸ்கள் இவை. இதனால் இறப்பு விகிதம் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

Monkey Pox
Monkey PoxTwitter
Monkeypox
கொரோனா பரவல்: சவுதி - இந்தியா விமான போக்குவரத்து நிறுத்தம்; 15 நாடுகளுக்கு தடை

சிகிச்சைகள்

குரங்கு அம்மை/காய்ச்சலுக்கான சிகிச்சையானது முதன்மையாக அறிகுறிகளை குறைப்பதில் கவனம் செலுத்துகிறது.

CDC யின் படி, குரங்கு நோய்த் தொற்றைக் குணப்படுத்த எந்தச் சிகிச்சையும் இல்லை.

ஏற்கெனவே போடப்பட்ட பெரிய அம்மை தடுப்பூசி, குரங்கு நோய்த்தொற்றுகளை தடுக்கவும் அறிகுறிகளின் தீவிரத்தைக் குறைக்கவும் உதவும் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன.

Imvamune அல்லது Imvanex எனப்படும் தடுப்பூசி ஒன்று, குரங்கு அம்மை மற்றும் பெரியம்மை நோயைத் தடுக்க அமெரிக்காவில் உரிமம் பெற்றுள்ளது.

CDC, தற்போது பெரியம்மை தடுப்பூசியைக் குரங்கு அம்மை/காய்ச்சலுக்கு ஆளாகிய அல்லது குரங்கு அம்மை வரக்கூடிய நபர்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கிறது. நோய் எதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு, அதிகப் பாதிப்பு இருக்கலாம். இதனால், அவரவர் தனது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக்கொள்வதே சரியான தீர்வாக அமையும்.

Monkeypox
கண்ணாடியை கழற்றி வைக்க உதவும் கண் பயிற்சிகள் : 60 + வயதிலும் கண்ணாடி அணிய தேவை இருக்காது!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com