ஜப்பான்: வளர்ந்து வரும் வாடகை காதலி கலாச்சாரம்- 1 மணிநேரத்துக்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா?

இதற்கான இணையதளங்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நாட்டில் இளைஞர்களுக்கு பெரிய பிரச்னையாக எழும் 'தனிமை'யைப் போக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஜப்பான் : வளர்ந்து வரும் வாடகைக் காதலிகள் - ஒரு மணிநேரத்து எவ்வளவு கட்டணம் தெரியுமா?
ஜப்பான் : வளர்ந்து வரும் வாடகைக் காதலிகள் - ஒரு மணிநேரத்து எவ்வளவு கட்டணம் தெரியுமா?Canva
Published on

காதலுக்கு நேரம் ஒதுக்குவது பலருக்கு சிமரமமான ஒன்றாக மாறி வருகிறது. சமீப காலமாக வளர்ந்த நாடுகளில் சிங்கிளாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.

பெரும்பாலும் இளைஞர்கள் தனிமையில் இருக்கும் சூழல் நிலவுகிறது. காதல், உறவுகளை உருவாக்குவதும் பேனிக் காப்பதும் முடியாத காரியம் என்றோ, தேவையற்றது என்றோ நினைக்கும் சூழல் இருக்கிறது.

இப்படி தனிமையில் இருக்கும் சிங்களுக்காக ஜப்பானில் சில முன்னெடுப்புகள் செய்யப்பட்டுள்ளன. திருமணம் ஆகாத இந்த பேச்சுலர் இளைஞர்கள் தங்களுக்கான காதலன், காதலியை சில மணி நேரங்களுக்கு வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாமாம்.

இதற்காக இணையதளங்கள் செயல்படுகின்றன. இவை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தளங்களாகவும் இருக்கின்றன. நாட்டில் வளர்ந்து வரும் தனிமையையும், திருமணம் ஆகாமையையும் கட்டுப்பட்டுத்த ஜப்பான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

எல்லாரும் பயன்படுத்திக்கொள்ளும் அளவு இது மலிவானது இல்லை. ஒரு காதலி அல்லது காதலனை வாடகைக்கு எடுக்க ஒரு மணி நேரத்துக்கு இந்திய மதிப்பில் 3000 ரூபாய் கொடுத்தாக வேண்டும். குறைந்த பட்சம் 2 மணிநேரத்துக்கு வாடகைக்கு எடுக்க வேண்டும்.

காதலிகளை தேர்வு செய்ய அதிக ப்ரொஃபைல்களைப் பார்க்க வேண்டுமென்றால், 1200 ரூபாய் கூடுதலாக செலவிட வேண்டியதும் இருக்கலாம்.


"இதற்கு முன்னர் எந்த பெண்களுடனும் தொடர்பில் இல்லாதவர்கள் மற்றும் உண்மையான காதலிக்கு நேரம் செலவிடமுடியாத அளவுக்கு பிசியாக இருப்பவர்கள் தான் இந்த சேவையை நாடுகின்றனர்" என வாடகை காதலியான ஷிஹோ என்பவர் ஒரு பத்திரிகையில் கூறியுள்ளார்.

இப்படி காதலர்களைத் தேர்ந்தெடுக்கும் போது அவர்கள் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

சில நிறுவனங்கள் வாடகை காதலிகளை நேரடியாக தொடர்புகொள்ளக் கூடாது என வாடிக்கையாளர்களுக்கு விதிமுறை வகிக்கின்றன. சிலர் வாடகை காதலன், காதலிக்கு விலை உயர்ந்த பரிசுகளை வழங்கக் கூடாது என்கின்றன.

ஜப்பான் : வளர்ந்து வரும் வாடகைக் காதலிகள் - ஒரு மணிநேரத்து எவ்வளவு கட்டணம் தெரியுமா?
கர்ப்பம் தரிக்க இந்தியாவுக்கு வரும் ஜெர்மனி பெண்கள்: தூய ஆரியர்கள் இருப்பது உண்மையா?

கேட்பதற்கு இதெல்லாம் அதிர்ச்சியாக இருந்தாலும், ஜப்பான் இதைவிட விநோதமாக சேவைகளையும் கொண்டிருக்கிறது. காதலன், காதலி மட்டுமல்லாமல் அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா என எந்த ஒரு உறவையும் வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் பழக்கம் அங்கு வளர்ந்து வருகிறது.

ஜப்பான் : வளர்ந்து வரும் வாடகைக் காதலிகள் - ஒரு மணிநேரத்து எவ்வளவு கட்டணம் தெரியுமா?
ஜப்பான்: ராணுவ பாலியல் விடுதிகள் டு இந்தோனேசியர்கள் அடிமைத்தனம் - ஒரு சுவாரஸ்ய வரலாறு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com