கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு...தன்னை தானே கருப்பாக மாற்றிக்கொண்ட யூடியூபர் - ஏன்?

இதை ஜப்பானின் கோயோ ஒரியன்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த பெயின்ட் 99.4 சதவிகிதம் வெளிச்சத்தை உள்வாங்கிக்கொள்ளும். இந்த வகை பெயின்ட் அமேசானில் விற்கப்படுகிறது.
கருப்பான மனிதராக மாறிய யூடியுபர்
கருப்பான மனிதராக மாறிய யூடியுபர்டிவிட்டர்
Published on

ஜப்பானை சேர்ந்த ஹஜீம் என்ற யூடியூபர் ஒருவர் தன்னை முழுவதுமாக கருப்பு நிறத்தில் மாற்றிக்கொண்டுள்ளார்.

வான்டாபிளாக் என்ற பெயின்ட் உலகின் மிக கருப்பான பெயின்ட் என அறியப்படுவதாக டைம்ஸ் நவ் தளம் தெரிவிக்கிறது. இது புலப்படும் ஒளியில் 99.965 சதவீதம் வரை உள்வாங்கிக்கொள்ளும் திறன் கொண்டது.

விலையுயர்ந்த இந்த பெயின்ட், அவ்வளவு எளிதில் கிடைக்கும் பொருள் அல்ல. இந்த வான்டா பிளாக்குக்கு அடுத்ததாக இரண்டாவது கருப்பான பெயின்ட் என கூறப்படுவது மசோ பிளாக் என்ற பெயின்ட்.

இதை ஜப்பானின் கோயோ ஒரியன்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த பெயின்ட் 99.4 சதவிகிதம் வெளிச்சத்தை உள்வாங்கிக்கொள்ளும். இந்த வகை பெயின்ட் அமேசானில் விற்கப்படுகிறது.

ஹஜீம் இந்த இரண்டாம் வகை கருப்பு நிற பெயின்ட்டை பயன்படுத்தி, உலகின் கருப்பான மனிதனாக மாறியுள்ளார். முதலில் இந்த மசோ பெயின்ட்டை பயன்படுத்தி தனது அறைக்கு நிறம் மாற்றியவர், பின்னர் தன் மீதும் பூசிக்கொண்டுள்ளார்.

மக்களால் அவரை கண்டுகொள்ள முடிகிறதா என தெரிந்துகொள்ள நினைத்தாக அவர் தெரிவித்தார். இதன் புகைப்படங்களை ஹஜீம் பகிர்ந்த நிலையில், அது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை பார்க்கும்போது நிழல் உருவம் போல தெரிகிறார் ஹஜீம்

கருப்பான மனிதராக மாறிய யூடியுபர்
கோகினூர் முதல் நம்பிக்கை வைரம் வரை: உலகின் விலையுயர்ந்த வைரங்கள் - என்னென்ன சிறப்பு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com