Josephine Baker: இசை உலகின் மகாராணி, உளவாளியாய் மிளிர்ந்த உண்மைக் கதை - பாகம் 5

கையில் காசு இல்லாமல், தன் சொந்த காசை உளவுப் பணிகளுக்கு செலவழித்துக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் பணமின்றி, புதிதாக இசைக் கச்சேரியை நடத்த முடிவு செய்தார்.
Josephine Baker
Josephine Bakerட்விட்டர்
Published on

ஜோசஃபைன் பேக்கர் ஒரு கலைஞர் என்பதால், அவர் ஐரோப்பா கண்டம் முழுக்க பயணிக்க பெரிய தடை ஏதும் இல்லை. எனவே ஜேக்ஸ் அப்டே, ஜோசஃபைன் பேக்கரின் உதவியாளராக அரிதாரம் பூசினார்.

பிரான்ஸின் டொலோஸ் (Toulouse) நகரத்தில் இருந்து, ஸ்பெயின் நாட்டில் உள்ள லிஸ்பன் நகரத்துக்கு சென்று, அந்த நாட்டில் உள்ள பிரிட்டன் தூதரைச் சந்திக்க வேண்டும். பிரிட்டன் தூதரிடம் கேப்டன் பால் மற்றும் அவரது உளவுத் துறை முன்னாள் ஏஜெண்ட்கள் மூலம், ஜெர்மன் படை எங்கு இருக்கிறது, எத்தனை பேர் இருக்கிறார்கள், நாஜிப் படையின் பாராசூட் பிரிவு எங்கிருக்கிறது. குறிப்பாக பிரிட்டனுக்கு எதிராக ஜெர்மனி பயன்படுத்தவிருப்பதாகக் கூறி வந்த லேண்டிங் கிராஃப்ட் படங்கள் போன்ற முக்கிய உளவுத் தகவல்களைக் கொடுக்க வேண்டும்.

இந்த உளவுத் தகவல் எல்லாம் சரியாக இருந்துவிட்டால், பிரிட்டனின் பண உதவி & பொருள் உதவியோடு ஐரோப்பா முழுக்க உளவு தகவல் பகிர்வு அமைப்பை தொடங்கிவிடலாம் என்பது பிரான்ஸ் தரப்பு திட்டத்தின் அடுத்த கட்டமாக இருந்தது.

ஒருவேளை ஜேக்ஸ் அப்டே பிடிபட்டால், நாஜிப் படைகளின் கொடூரமான தாக்குதலுக்கு ஆளாவார். அவர் ராஜ துரோகியாகக் கருதப்பட்டு அவருக்கு எத்தகைய தண்டனையும் வழங்கப்படலாம். இதே நிலை ஜோசஃபைன் பேக்கருக்கும் ஏற்படலாம்.

இருப்பினும் இதை எல்லாம் கடந்து ஜேக்ஸ் & பேக்கர் இருவரும் திட்டப்படி முன்னேறினர். பல ரகசிய உளவுத் தகவல்கள் முந்தைய அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்ட பைகார்பனேட் குளோரைட் மையைக் கொண்டு பாடல் குறிப்புகள் அச்சிடப்பட்டிருந்த காகிதங்களில் எழுதி இருந்தனர். அக்குறிப்புகளை ஜோசஃபைன் பேக்கர் தன் உள்ளாடைக்குள் மறைத்து வைத்துக் கொண்டார்.

ஸ்பெயின் நாட்டில் நுழைந்த போது பயத்தோடு நுழைந்த ஜோசஃபைன் பேக்கருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்த அதிகாரிகள் ஜோசஃபைன் பேக்கரை சோதித்து பாஸ்போர்டில் முத்திரை இட்டு அனுப்புவதற்கு பதிலாக, தங்கள் நோட்டு புத்தகங்களை நீட்டி கையெழுத்து வாங்கத் தொடங்கினர். இதே கதைதான் லிஸ்பன் சென்று சேரும் வரை தொடர்ந்தது. கடைசியில் ஜோசஃபைன் பேக்கர் எல்லோரையும் திசை திருப்பி இருந்த நேரத்தில், ஜேக்ஸ் அப்டே ஸ்பெயின் நாட்டுக்கான பிரிட்டன் தூதரைச் சந்தித்து எல்லா தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

Josephine Baker
இந்தியாவின் முதல் Meta இன்ஃப்ளூயன்சர்: 2k கிட்ஸை கவரும் யார் இந்த கைரா?

ஜேக்ஸ் அப்டே தரப்பு பகிர்ந்த தகவல்களை எல்லாம் பார்த்த தூதர், உடனடியாக பதில் சொல்லாமல் ஜேக்ஸ் அப்டேவையும், ஜோசஃபைன் பேக்கரையும் காத்திருக்க வைத்தார். சில தினங்களுக்குப் பிறகு, பிரான்ஸ் தரப்பு எதிர்பார்த்தது போலவே எல்லாவற்றையும் செய்து கொடுக்க பிரிட்டன் சம்மதித்தது. ஜேக்ஸ் அப்டே லிஸ்பனிலேயே தங்கி இருந்து பிரிட்டன் அதிகாரிகளோடு பணியாற்ற வேண்டி இருந்தது.

ஜோசஃபைன் பேக்கரோ பிரான்ஸுக்கு திரும்பி உளவுத் தகவல்களை சேகரிக்கவும், கிடைத்த தகவல்களை மேலதிகாரிகளிடம் பகிரவும் அறிவுறுத்தப்பட்டார். கையில் காசு இல்லாமல், தன் சொந்த காசை உளவுப் பணிகளுக்கு செலவழித்துக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் பணமின்றி, புதிதாக இசைக் கச்சேரியை நடத்த முடிவு செய்தார்.

அது அவருக்கு பணம் மட்டுமின்றி, மிகக் கடுமையான நெருக்கடியில் இருந்த பிரான்ஸ் மக்களை கொஞ்ச நேரம் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மறுமுனையில் ஜேக்ஸ் அப்டே பிரான்ஸ் வந்து சேர்ந்தார்.

இருவரும் உளவு வளையத்தை பெரிதுபடுத்தினர். இதனால் கிடைக்கும் உளவுத் தகவல்களின் எண்ணிக்கை அதிகரித்தது. எனவே பிரான்ஸில் இருந்து லண்டனுக்கு ஒரு வலுவான தகவல் பகிர்வுத் தொடர்பு உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதற்கு போர்ச்சுகள் கொடியின் கீழ் செயல்படும் சரக்கு கப்பல் ஒன்றை தொடர்ந்து இயங்கச் செய்தனர். அக்கப்பல் லிஸ்பனில் இருந்து லண்டன் வரை பயணித்தது. எனவே ஜோசஃபைன் பேக்கர் மற்றும் ஜேக்ஸ் அப்டே போர்ச்சுகல் நாட்டுக்குப் பயணித்து சில விஷயங்களை நேர் செய்ய வேண்டி இருந்தது. அப்படி போர்ச்சுகல் நாட்டுக்குள் சென்ற இருவரில், ஜோசஃபைன் பேக்கருக்கு மேற்கொண்டு பயணிக்க விசா வழங்கப்பட்டது.

ஜேக்ஸ் அப்டேவுக்கு போர்ச்சுகல் தரப்பிடமிருந்து விசா வழங்கப்படவில்லை. எனவே ஜோசஃபைன் பேக்கர் தனியாக லிஸ்பன் நகரத்தில் தன் உளவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பிரான்ஸ் நாட்டின் உளவுப் பணியில் சேர்ந்ததில் இருந்து, ஜேக்ஸ் அப்டேவின் கண்காணிப்பின் கீழ் தான் ஜோசஃபைன் பேக்கர் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். இப்போது முதல் முறையாக ஜோசஃபைன் பேக்கர் தனியாக செயல்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

Josephine Baker
ராஜகுமாரி அம்ரித் கவுர்; யார் இவர்? அரச குடும்ப சொத்து விவகாரம் வெளியானது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com