கொலம்பியாவில் நீதிபதி ஒருவர் ஆன்லைனில் நடந்த விசாரணையின்போது உள்ளாடைகள் மட்டுமே அணிந்துகொண்டும், புகைப்பிடித்துக்கொண்டும் இருக்கும் வீடியோ இணையத்தில் தற்போது பரவி சர்ச்சையாகியுள்ளது.
கொலம்பியாவை சேர்ந்த நீதிபதி விவியன் போலானியா zoom call மூலம், காரில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டல் குறித்த வழக்கை அவர் விசாரித்து கொண்டிருந்தார்.
கேமராவில் பதிவு செய்யப்பட்ட இந்த விசாரணையின்போது விவியனின் நடவடிக்கை மரியாதைக் குறைவாகவும் முகம் சுளிக்கும் விதத்திலும் இருந்துள்ளது. முறையாக குற்றவாளியிடமோ, வழக்கறிஞர்களிடமோ அவர் செவிசாய்க்காமல், தனி உலகத்தில் மிதந்துக்கொண்டிருந்தார் என்று குற்றம்சாட்டப்படுகிறது.
தனது உள்ளாடைகள், மற்றும் அதன் மேல் ஒரு கோட் மட்டுமே அணிந்துக்கொண்டு zoom callக்கு வந்தவரின் கையில் சிகரெட்டும் இருந்தது, மற்றவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வழக்காட வந்த வழக்கறிஞர்களில் ஒருவர் புகார் அளித்ததன் பேரில், இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
நீதிபதி பொறுப்பில் இருந்துகொண்டு அநாகரீகமாக நடந்துக்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு, விவியனை Norte de Santander -யை நீதித்துறை ஒழுங்கு ஆணையம் மூன்று மாதங்களுக்கு தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதற்கு முன்னரும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை பகிர்ந்ததாக இவர் மீது புகார் எழுந்தது. அப்போது அவரை கண்டித்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க் போஸ்ட்டின் அறிக்கைப்படி, சுமார் ஒரு மணி நேரமாக இந்த ஆன்லைன் விசாரணையின் போது விவியன் தன் கேமராவை ஆஃப் செய்து வைத்திருந்ததாகவும், பின்னர் ஒரு கட்டத்தில் ஆன் செய்த போது, தனது மெத்தையில், முறையற்ற முறையில் அவர் அமர்ந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கேமரா ஆன் ஆனதை அவர் உணரவில்லை எனவும், சுட்டிக்காட்டிய பின்னர் அவசரமாக ஆஃப் செய்ததும் தெரியவந்துள்ளது. விசாரணையின் போது குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக தான் படுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust