கத்தார் : சிலுவைப் போர் உடையால் சர்ச்சை - இங்கிலாந்து ரசிகர்களுக்கு தடை விதித்ததா FIFA?

இங்கிலாந்து ரசிகர்கள், இதுபோன்ற சிலுவைப்போர் உடையில் விளையாட்டு போட்டிகளுக்கு செல்வது இது ஒன்றும் முதல்முறையல்ல.
ரசிகர்களின் உடையால் சர்ச்சை? மைதானத்திற்குள் அனுமதி மறுத்த ஃபிஃபா!
ரசிகர்களின் உடையால் சர்ச்சை? மைதானத்திற்குள் அனுமதி மறுத்த ஃபிஃபா!ட்விட்டர்
Published on

க்ரூசேடர் (சிலுவைப்போர்) உடையில் இங்கிலாந்து ரசிகர்கள் கத்தார் கால்பந்து மைதானத்துக்குள் நுழைய முயன்றபோது, காவலாளிகள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

2022 ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை கத்தாரில் நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து USA அணிகள் மோதின. இந்த போட்டிய காணவந்த இங்கிலாந்து ரசிகர்கள் சிலர் க்ரூசேடர் உடையில் வந்திருந்தனர். இவர்கள் மைதானத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

வரலாற்றுக் காரணங்களுக்காக இஸ்லாமிய நாடுகளில் க்ரூசேடர் உடைகள் தடைசெய்யப்பட்டுள்ளன. முஸ்லீம் நாடுகளில், 11 முதல் 13 ஆம் நூற்றாண்டுகளில் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் ஜெருசலேம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைக் கைப்பற்ற முயன்ற கிறிஸ்தவர்களின் வன்முறைப் படையெடுப்பின் வரலாற்றை இது நினைவுக்கூரும் விதமாக உள்ளதால், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பட்டுள்ளது.

இங்கிலாந்து ரசிகர்கள், இதுபோன்ற சிலுவைப்போர் உடையில் விளையாட்டு போட்டிகளுக்கு செல்வது இது முதல்முறையல்ல. ஆனால், கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெற்று வருவதால், இந்த விஷயம் சர்ச்சையாகியுள்ளது.

கடந்த திங்களன்று இங்கிலாந்து ஈரான் அணிகள் மோதியபோதும், இங்கிலாந்து ரசிகர்கள் இதேபோல க்ரூசேடர் உடையில் வந்திருந்தனர். இது சமூக வலைத்தலங்களில் சர்ச்சையானது.

ரசிகர்களின் உடையால் சர்ச்சை? மைதானத்திற்குள் அனுமதி மறுத்த ஃபிஃபா!
Qatar : பாலைவனம் டூ 'பணக்கார நாடு' - கத்தார் வளர்ச்சியின் 3 ரகசியங்கள்

இதனையடுத்து கலாச்சார ரீதியான உணர்வுகளை தூண்டும் விதத்தில் நடந்துகொண்டால், இனி நடைபெறவிருக்கும் போட்டிகளை காணவும் இங்கிலாந்து ரசிகர்களுக்கு தடை விதிக்கப்படும் என ஃபிஃபா நிர்வாகம் அறிவித்துள்ளதை, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.

"அரபு அல்லது மத்திய கிழக்கு நாடுகளில், இந்த ஆடைகள் அந்நாட்டவர்களை அவமதிக்கும் விதமாக அமையலாம். எனவே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மைதானங்களில் அனுமதிக்கப்படாமல் இருப்பதற்கு இதுவே காரணம்" என்று FIFA செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ரசிகர்களின் உடையால் சர்ச்சை? மைதானத்திற்குள் அனுமதி மறுத்த ஃபிஃபா!
FIFA உலக கோப்பை 2022 : பெருமைக்கு எருமை மேய்ப்பதா? கத்தார் சந்திக்கும் சர்ச்சைகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com