காலையில் நீதிபதியாகவும், மாலையில் ஆபாசப்படத்தில் நடிப்பவர்காவும் இருந்து வந்த அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் நீதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தி நியூயார்க் போஸ்ட்டின் அறிக்கையின்படி, கிரெகரி லாக் என்ற 33 வயது இளைஞர் நியூயார்க் நகரில் நீதிபதியாக இருக்கிறார்.
பகலில் நீதிபதியாக இருக்கும் இவர் ஒன்லி ஃபேன்ஸ் என்ற ஆபாசப்படங்கள், வீடியோக்களை காணும் ஒரு இணையதளத்தில் ஆபாசப்படக் கலைஞராக பணியாற்றிவந்துள்ளார்.
நியூயார்க் நகரத்தில் பார்க்கிங் டிக்கெட் நீதிபதியாக இருக்கிறார் கிரெகரி. இவருக்கு ஒரு மணி நேரத்திற்கு 58 டாலர்கள் ஊதியமாக வழங்கப்படுகிறது. இவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்களை வைத்து இவர் பிடிப்பட்டிருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
கிரெகரி, தனது படங்கள், வீடியோக்களை காண ஒரு நபருக்கு மாதம் ரூ.987 (12 டாலர்கள்) வசூலித்துள்ளார். கிட்ட தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாசமான புகைப்படங்களை இந்த இணையதளத்தில் தனது அக்கவுண்ட்டில் பதிவேற்றியிருக்கிறார்.
பகலில் தன் வேலை நேரம் முடிந்ததும், இரவில் இந்த வேலையை செய்து வந்துள்ளார். அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு நபர் தங்களது பொருளாதார தேவைகளுக்காக ஒன்றுக்கு மேலான வேலைகளில் இருப்பது இயல்பே.
தனது அக்கவுண்ட் பயோவில், “"White collar professional by day very unprofessional by night. always amateur, always raw, always slutty." என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மக்களுக்கு வழிகாட்டும் நீதித்துறையில் பணியாற்றிக் கொண்டிருப்பவர், இந்த மாதிரியான செயல்களில் ஈடுப்பட்டிருப்பது இழுக்கு என்று கூறி அவரை நீதிபதி பதவியிலிருந்து நீக்கியுள்ளனர் நியூயார்க் நகர அதிகாரிகள்.
மேலும், அரசின் மீதும், சட்டத்தின் மீதும் மக்களின் நம்பிக்கையை கிரெகரி போன்ற ஆட்கள் குலைத்துவிடுவார்கள் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில், கிரெகரிக்கு மற்றொரு ஆபாசப்படங்கள் வெளியிடும் இணையதளத்திலும் அக்கவுண்ட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு அவர் ஒரு நபர் தன் புகைப்படத்தை காண ரூ.800 வசூலித்துள்ளார்!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust