Karthik Subramanian: 'பிக்சர்ஸ் ஆஃப் தி இயர்' விருதை வென்ற இந்திய- அமெரிக்கர் : யார் இவர்?

அந்த புகைப்படத்தில் ஒரு கழுகு மற்றொரு கழுகுடன் சண்டையிட்டு தனக்கான இடத்தைப் பிடிக்க முயற்சி செய்யும் காட்சியைப் பதிவு செய்துள்ள கார்த்திக், இந்தப் படத்துக்கு 'வெண்தலைக் கழுகுகளின் நடனம்' (Dance of Bald Eagles) என்று தலைப்பு வைத்திருக்கிறார்.
Karthik Subramanian : Indian-American wins National Geographic 'Pictures of the Year' award
Karthik Subramanian : Indian-American wins National Geographic 'Pictures of the Year' awardTwitter
Published on

இந்திய-அமெரிக்கரான கார்த்திக் சுப்ரமணியம், சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட மென்பொருள் பொறியாளர், 2023 ஆம் ஆண்டுக்கான நேஷனல் ஜியோகிராபி ”பிக்சர்ஸ் ஆஃப் தி இயர்” விருதை வென்றுள்ளார்.

நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த புகைப்படத்தைத் தேர்வு செய்து அவர்களுக்கு விருது அளித்து கெளரவித்து வருகிறது.

இயற்கை, மக்கள், இடங்கள் மற்றும் விலங்குகள் ஆகிய நான்கு வகைகளில் கிட்டத்தட்ட 5,000 உள்ளீடுகளில் இருந்து புகைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான விருதை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கார்த்திக் சுப்ரமணியம் என்ற புகைப்படக் கலைஞர் பெறுகிறார்.

Wild Life புகைப்பட வல்லுநரான இவர் எடுத்த வெண்தலை கழுகுகள் (Bald Eagles) புகைப்படத்துக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த புகைப்படத்தில் ஒரு கழுகு மற்றொரு கழுகுடன் சண்டையிட்டு தனக்கான இடத்தைப் பிடிக்க முயற்சி செய்யும் காட்சியைப் பதிவு செய்துள்ள கார்த்திக், இந்தப் படத்துக்கு 'வெண்தலைக் கழுகுகளின் நடனம்' (Dance of Bald Eagles) என்று தலைப்பு வைத்திருக்கிறார்.

அலாஸ்காவின் சில்காட் பால்ட் ஈகிள் ப்ரிசர்வ் பகுதியில் உள்ள கிளையில் மூன்று கழுகுகள் சண்டையிடுவதைக் காட்டுகிறது என்று பத்திரிகையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலாஸ்காவின் ஹைன்ஸில் உள்ள மீன்பிடித் தளங்களில் கழுகுகள் பாய்ந்து வருவதைப் பார்த்துக்கொண்டே இருந்ததாக கார்த்திக் கூறினார்.

ஒவ்வொரு இலையுதிர்காலத்திலும் உலகிலேயே மிகப்பெரிய கழுகுகளின் கூட்டங்கள் இப்பகுதியில் உள்ளன. சுமார் 3,000 சால்மன் ரன் ( பனி கரடி) சரியான நேரத்தில் இங்கு வந்து சேரும் என்றார்.

Karthik Subramanian : Indian-American wins National Geographic 'Pictures of the Year' award
உலகிலேயே வயதான பறவை இதுதானா? கழுகு இல்லை; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

இந்த நிலையில் நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் இந்த ஆண்டுக்கான விருதை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கார்த்திக் சுப்ரமணியம் என்ற புகைப்படக் கலைஞருக்கு கொடுத்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Karthik Subramanian : Indian-American wins National Geographic 'Pictures of the Year' award
Neal Mohan: ஆண்டுக்கு 57 ஆயிரம் கோடி வருமானம்; Youtube CEO பதவியில் இந்தியர்- யார் இவர்?

யார் இவர்?

அமெரிக்காவைச் சேர்ந்த கார்த்திக் தொழில் ரீதியாக மென்பொருள் பொறியாளர், பொழுதுபோக்கினால் புகைப்படக் கலைஞர்.

2009 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் மாஸ்டர் ஆஃப் ஆர்ட்ஸ் - போட்டோ ஜர்னலிசம் முடித்துள்ளார்.

லேண்ட்ஸ்கேப் புகைப்படம் எடுப்பதிலும், பயணம் செய்வதிலும் அவருக்குப் பிரியம்.

கார்த்திக் குழந்தையாக இருக்கும் போது நகர வாழ்க்கையிலிருந்து கிராமத்தில் உள்ள தனது தாத்தா பாட்டி வீட்டிற்கு அடிக்கடி பயணம் செய்வார்.

பஸ் அல்லது ரயிலின் ஜன்னல் வழியாக உலகைப் பார்க்க கற்றுக்கொண்டார்.

அப்படி பயணிக்கும் போது நகர்ந்து செல்லும் காட்சிகளை, ஜன்னல்கள் வழியாக பார்க்கிறார்.

அப்போது தோன்றிருக்கிறது சலன படங்களின் மீதான ஆர்வம்!

அதன் பின்னர் புகைப்படம் எடுப்பதை passion ஆக கொண்டார் சுப்ரமணியம், இவர் பல வருடங்களாக இயற்கை காட்சிகளையும் தனது பயணங்களையும் புகைப்படம் எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Karthik Subramanian : Indian-American wins National Geographic 'Pictures of the Year' award
அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி - இனிவெறிக்கு எதிராக நிற்கும் Nikki Haley யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com