அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி - இனிவெறிக்கு எதிராக நிற்கும் Nikki Haley யார்?

முன்னதாக ட்ரொனால்ட் ட்ரம்ப் அரசாங்கத்தில் அமெரிக்காவுக்கான ஐ.நா தூதராக செயல்பட்டார். கரோலினா மாகாணத்தின் கவர்னராகவும் இருந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில்  இந்திய வம்சாவளி - இனிவெறிக்கு எதிராக நிற்கும் Nikki Haley யார்?
அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி - இனிவெறிக்கு எதிராக நிற்கும் Nikki Haley யார்?Twitter
Published on

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நிற்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இந்திய வம்சாவளியான நிக்கி ஹேலி.

"இது புதிய தலைமுறை தலைமைக்கான நேரம்" என்று கூறியுள்ள ஹேலி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட குடியரசு கட்சியில் ட்ரொனால்ட் ட்ரம்பை எதிர்க்கிறார்.

இப்போது எதிர்கட்சியாக இருக்கும் குடியரசு கட்சி சார்பில் ஹேலி மற்றும் ட்ரம்ப் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ட்ரொனால்ட் ட்ரம்ப் அரசாங்கத்தில் அமெரிக்காவுக்கான ஐ.நா தூதராக செயல்பட்டார். கரோலினா மாகாணத்தின் கவர்னராகவும் இருந்துள்ளார்.

இந்தியா வம்சாவளி

தெற்கு கரோலினாவில் உள்ள ரந்தவா என்ற இடத்தில் இந்தியாவில் இருந்து குடியேறிய பெற்றொருக்கு பிறந்தார் நிக்கி ஹேலி.

பஞ்சாபில் இருந்து குடியேறிய அவரது பெற்றோர்கள் ஆசிரியராக பணியாற்றினர். மற்றும் ஒரு துணிக் கடையும் வைத்திருக்கின்றனர்.

சீக்கியராக வளர்ந்த இவர் கடந்த 1996ம் ஆண்டு கணவர் மைக்கேல் ஹேலியை திருமணம் செய்த போது கிறிஸ்தவராக மாறினார்.

Nikki Haley Family
Nikki Haley Family

"என் பெற்றோர் அமெரிக்காவுக்கு வந்த போது ஒரு சிறிய ஊரில் குடியேறினர். என் அப்பா டர்பன் அணிந்திருந்தார். என் அம்மா சாரி அணிந்திருப்பார். நான் இந்த கருப்பு வெள்ளை நாட்டில் பழுப்பு குழந்தையாக பிறந்தேன். நாங்கள் ஒதுக்கப்பட்டோம் ஆனால் என் அம்மா இதற்காக யாரையும் குறை சொல்லியதோ, வெறுத்ததோ இல்லை" என கடந்த நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையில் பேசியிருந்தார் நிக்கி ஹேலி.

1994ம் ஆண்டு க்லெம்சன் பல்கலைக்கழகத்தில் அக்கவுண்டிங்கில் பட்டம் பெற்றார். பின்னர் பெற்றோரின் துணிக் கடைக்கு உதவியாக இருந்து வந்தார்.

தெற்கு கரோலினாவின் கவர்னர்

2004ம் ஆண்டு கரோலினா மாகாண சட்டமன்றத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் நிக்கி ஹேலி.

2010ம் ஆண்டு முதல் பெண் கவர்னராக கரோலினாவில் பதவியேற்றார். அமெரிக்காவிலேயே இரண்டாவது இந்திய வம்சாவளி கவர்னர் என்ற பெருமையும் பெற்றார். (முதல் இந்திய வம்சாவளி பாபி ஜிண்டால், லூசியானா மாகாணம்)

கவர்னராக ஹேலி குழப்பம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டார். அவர் குடியேற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில்  இந்திய வம்சாவளி - இனிவெறிக்கு எதிராக நிற்கும் Nikki Haley யார்?
அமெரிக்காவும் சீனாவும் இணைய போகும் இந்தப் புள்ளி - எதற்காக தெரியுமா?

புதிதாக வேலைக்கு சேர்க்கப்படும் ஊழியர்கள் அமெரிக்கர்கள் தான் என்பதை நிறுவனங்கள் நிரூபிக்க வேண்டுமென்ற சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.மேலும் குடியேறுபவர்கள் சட்டப்பூர்வமான ஆவணங்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்றும் அந்த சட்டம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் இனவெறி தொடர்பான பிரச்னைகளில் மிகவும் வலிமையாக தனது கருத்துக்களை தெரிவித்து வந்திருக்கிறார் நிக்கி ஹேலி.

வெள்ளை ஆதிக்கவாதியான டைலான் ரூஃப் என்பவரால் 9 கருப்பின மக்கள் தேவாலயத்தில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பிறகு நாடு முழுவதும் பேசப்பட்டார்.

அப்போது கரோலினாவின் தலைநகரில் Confederate battle flag எனும் கூட்டமைப்பு போர் கொடியை அகற்றினார் நிக்கி.

அமெரிக்க அரசியலில் பழைமைவாதம் ஊறிப்போன கோட்டைகளை உடைத்து மிதிக்கும் சக்தியாக பார்க்கப்படுகிறார் நிக்கி ஹேலி.

அமெரிக்க அதிபர் தேர்தலில்  இந்திய வம்சாவளி - இனிவெறிக்கு எதிராக நிற்கும் Nikki Haley யார்?
அமெரிக்கா அரசை இயக்கும் இந்தியர்கள் - வியப்பூட்டும் தகவல்கள்

ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர்

ஐ.நாவுக்கான அமெரிக்க தூதராக குறுகிய காலமே பதவி வகித்திருந்தாலும், மக்களின் நன்மதிப்பை பெற தவறவில்லை நிக்கி.

ஐ.நாவில் ரஷ்யா, ஈரான் மற்றும் சீனாவை கடுமையாக தாக்கிப் பேசியிருக்கிறார். வட கொரியா ஏவுகனைச் சோதனைகளின் போது அமெரிக்க இராணுவம் உங்களின் எந்த தாக்குதலையும் சந்திக்க தயாரக உள்ளது என கர்ஜித்தார்.

மேலும் இஸ்ரேலுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசிவந்த அவர், இஸ்ரேலைத் தொடர்ந்து கொடுமைபடுத்தியதாக ஐ.நா சபையையே எதிர்த்துப் பேசினார்.

டொனால்ட் ட்ரம்புடனான உறவு

2016ம் ஆண்டு ட்ரம்ப் பதவியேற்றது முதலே நிக்கி மற்றும் ட்ரம்புக்கு இடையில் மோதல் இருந்து வந்தது. 2018ம் ஆண்டு ஐ.நா தூதர் என்ற பதவியையும் துறந்து ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து வெளியேறினார்.

2024 நாடாளுமன்றத்தில் ஜோ பைடனை எதிர்த்து போட்டியிடுவதற்கு முன்னர் நிக்கி ட்ரம்பை வெற்றி பெற வேண்டும். ட்ரம்புக்கு எதிராக கடந்த 14ம் தேதி போட்டியிடுவதாக நிக்கி அறிவித்தது முதலே அமெரிக்க தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில்  இந்திய வம்சாவளி - இனிவெறிக்கு எதிராக நிற்கும் Nikki Haley யார்?
Avatar : இனவெறி, கலாச்சார திருட்டு - அமெரிக்க பூர்வகுடிகள் இந்த படத்தை எதிர்ப்பது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com