வட கொரியா: தொகுப்பாளருக்கு கிம் ஜாங் உன் பரிசளித்த மாளிகை - யார் இந்த 79 வயது ரி சுன் ஹி?

ரி-யின் முக பாவனைகள் அரசாங்கத்தினுடையவையாக தான் பெரும்பாலும் இருக்கும். அவர் வசிக்கும் Pyongyang நகரம் பணக்கார வட கொரியர்களுக்கானது மட்டுமே.
Kim Jong  Un with Ri Chun Hi
Kim Jong Un with Ri Chun HiTwitter
Published on

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அந்த நாட்டுத் தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவருக்கு விலையுயர்ந்த வீடு ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார். இந்த நிகழ்வு அந்த 79 வயது தொகுப்பாளினியை உலகம் முழுவதும் பேச்சு பொருளாக்கியிருக்கிறது.

50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொகுப்பாளினியாக இருக்கும் அவரின் சேவைக்காக கிம் இந்த பரிசை வழங்கியுள்ளார். அத்துடன் மேலும் சில ஆண்டுகளுக்கு அவர் தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாகவும் கிம் கூறியிருக்கிறார்.

தொகுப்பாளினிக்கு ஆற்றோரம் உள்ள விலை உயர்ந்த வீட்டைப் பரிசளித்த கிம், “இவர் நம் நாட்டின் சொத்து” எனப் புகழ்ந்துள்ளார்.

அதிபரின் பரிசை அன்புடன் ஏறுகொண்ட அந்த பெண், “எங்களுக்குப் புதிதாக வழங்கப்பட்ட வீடு பெரிய ஹோட்டல் போல உள்ளது. எங்கள் குடும்பத்தில் யாருக்கு இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. மிகுந்த நன்றி உணர்வுடனும் கண்ணீருடனும் இருந்தோம்” எனக் கூறியிருக்கிறார்.

அதிபர் கிம் அதிகம் மதிக்கக்கூடிய அவருக்கு பிடித்தமான இந்த செய்தி தொகுப்பாளினி யார் எனக் காணலாம்.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்Twitter

ரி சுன் ஹி

அவரது பெயர் ரி சுன் ஹி. 1970 களிலிருந்து செய்தி வாசிப்பாளராக இருக்கிறார். 1994 ஆம் ஆண்டு தந்தை கிம் இல் சுங்-ன் மரணம், முதல் அணு ஆயுத சோதனை எனப் பல வரலாற்றுப் பூர்வமான நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார் ரி.

ரி -ஐ ‘பிங்க் லேடி’ எனவும் மக்கள் குறிப்பிடுகின்றனர். அவருக்கு மிகவும் பிடித்த நிறம் பிங். கொரியப் பாரம்பரிய உடைகளை விரும்பும் அவர் அதிலிருந்து தினமும் பிங் நிற ஆடையைத் தேர்வு செய்து உடுத்துவார். பிங்க் அல்லாமல் அவர் கருப்பு நிற ஆடைகளையும் அணிவார். தலைவர்களின் மறைவு செய்திகளை தெரிவிப்பதானால் மட்டும்.

இவரை மக்களின் ஒளிபரப்பாளர் (People’s Broadcaster) என்றும் அழைக்கின்றனர். கொரிய மக்களுக்கு இவரது குரல் தான் அதிக பழக்கமானது. கொரியாவின் கொரிய சென்ட்ரல் தொலைக்காட்சியில் இவரை மக்கள் தினசரியும் காண்கின்றனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக இவர் தொலைக்காட்சியில் பணியாற்றுவதால் தலைமுறைகளாக மக்கள் இவர் மூலம் செய்திகளைத் தெரிந்துகொண்டு வருகின்றனர்.

Kim Jong  Un with Ri Chun Hi
எல் டொராடோ எனும் தங்க நகரம் உண்மையில் இருந்ததா? - ஒரு சாகச பயணம்

இவரது செய்தி வாசிக்கும் தன்மை மிகவும் தனித்துவமானதாகவும் நாடகத்தனமாகவும் இருக்கும். இவர் அதிபர்களின் அறிவிப்புகளை வாசிக்கும் போது மிக கண்டிப்பாகவும் கோபமாகவும் வாசிப்பார். சோகமான நிகழ்வுகளைச் சொல்லும் போது அழுதேவிடுவார்.

அதிக வயதாகிவிட்டதால் இளம் செய்தி வாசிப்பாளர்களுக்குப் பயிற்சி அளிக்க விரும்புவதாகக் கூறும் அவர் இன்னும் சில காலம் பணியிலிருக்க வேண்டும் என அரண்மனை போன்ற வீட்டைப் பரிசளித்த அதிபர் கிம் விரும்புகிறார்.

Kim Jong  Un with Ri Chun Hi
வட கொரியா: யாரும் பார்த்திடாத புகைப்படங்கள் | Visual Stories

வடகொரியாவில் தன்னிச்சையாக எந்த ஊடகமும் செயல்பட முடியாது. அரசாங்கம் கொடுக்கிற செய்திகள் மட்டுமே வாசிக்கப்படும். கிட்ட தட்ட ஊடகங்கள் ஆளும் தொழிலாளர் கட்சியின் செய்தி தொடர்பு துறையின் கிளைகளாகத் தான் செயல்படும். அதுவே Pyongyang-ல் வசிக்கும் ரி சுன் ஹி அதிபருக்கு நெருக்கமாக காரணம்.

ரி-யின் முக பாவனைகள் அரசாங்கத்தினுடையவையாக தான் பெரும்பாலும் இருக்கும். அவர் வசிக்கும் Pyongyang நகரம் பணக்கார வட கொரியர்களுக்கானது மட்டுமே.

வடகொரியாவின் கிராமப்புற மக்கள் பசி, பட்டினியால் அவதிப்படும் வேளையில் ரி போன்ற ஊடகவியலாளர்கள் பெரிய ஹோட்டல்களில் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழிக்கின்றனர். அதிபர் கிம் பணக்கார மக்களுக்கு ஒரு நல்ல அதிபராகவும் ஏழைகளுக்கு எமனாகவும் விளங்குகிறார். அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளை அச்சுறுத்த அதிகப் பணம் செலவழிக்கும் அதிபர், டிவி தொகுப்பாளருக்கு மாளிகையைப் பரிசளிக்கும் அதிபர் உள்நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் கண்டு கொள்ளவேண்டும் என்பது கொரிய மக்களின் அன்றாட பிரார்த்தனையாக இருக்கிறது

Kim Jong  Un with Ri Chun Hi
வட கொரியா: கிம் ஜாங் உன் வம்சத்தின் விறுவிறுப்பான கதை | பகுதி 1

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com