ஐரோப்பாவின் மாண்டெனெக்ரோ என்ற இடத்தில் வினோதமான சாம்பியன்ஷிப் ஒன்று நடைப்பெற்று வருகிறது. இதில் முதல் பரிசை வெல்லும் நபருக்கு 1070 டாலர் பரிசுத் தொகை வழங்கப்படும். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.88,000.
இந்த போட்டி தொடங்கி 26வது நாளாக தொடர்ந்து வருகிறது.
சரி இப்படி ஒரு லம்ப் அமௌண்ட்டை பரிசாக வழங்கும் அந்த போட்டி தான் என்ன? இந்த பதிவில் பார்க்கலாம்
ஐரோப்பாவின் வடக்கு மாண்டெனெக்ரோ என்ற பகுதியில் இருக்கும் ப்ரெஸ்னா என்கிற கிராமம் அமைந்துள்ளது. இங்கு தான் மிக சோம்பேறியான குடிமகன் என்ற போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த வருடாந்திர போட்டி கேட்பதற்கு நகைச்சுவையாக, எளிதானதாக இருந்தாலும், இதில் விளையாடுவது சுலபமான காரியம் அல்ல.
படுத்த வாக்கில் தான் இருக்கவேண்டும்
எழுந்து நிற்கவோ, தங்கள் மெத்தையின் மீது அமரவோ கூடாது
ஒவ்வொரு 8 மணி நேரத்துக்கும் ஒரு 10 நிமிட இடைவெளி விடப்படுகிறது. அப்போது கழிவறை பயன்படுத்திக்கொள்ளலாம்
சாப்பிடுவது, பானங்கள் அருதுவது, செல்ஃபோன் பார்த்தல், புத்தகம் படித்தல் என அனைத்தையும் படுத்தவாறே செய்யவேண்டும்
ஒரு வேளை போட்டியாளர்கள், நின்று விட்டாலோ அமர்ந்துவிட்டாலோ உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிடுவார்கள்
இந்த போட்டி 21 போட்டியாளர்களுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. 20 நாட்களுக்கும் மேலாக நடைப்பெற்று வரும் இந்த போட்டியில், செப்டம்பர் 11ஆம் தேதி படி 7 போட்டியாளர்கள் இன்னும் களத்தில் உள்ளனர்.
இவர்கள் சுமார் 500 மணி நேரத்தையும் கடந்து விளையாடி வருகின்றனர். முந்தைய ஆண்டின் வெற்றியாளருடைய சாதனையை முறியடிக்கவேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள் என்கின்றனர் இந்த சோம்பேறி போட்டியாளர்கள்.
இந்த போட்டியை நடத்தும் ஏற்பாட்டாளர்கள், சுகாதார ரீதியாக போட்டியாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் தளம் கூறுகிறது. இதனால் எங்களுக்கு எந்த வித பிரச்னையும் இல்லை என்கின்றனர் போட்டியாளர்கள்.
இந்த போட்டி 12 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. மாண்டெனெக்ரோவின் மக்கள் இயல்பாகவே சோம்பேறிகள் என்ற கூற்று முன்பு ஒரு காலத்தில் இருந்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தொடங்கப்பட்டது தான் இந்த போட்டி
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust