Q, W, X எழுத்துக்கள் துருக்கியில் சட்டவிரோதமானவை - வரலாற்று பின்னணி என்ன?

2007 ஆம் ஆண்டில், தென்கிழக்கு துருக்கியில் உள்ள ஒரு நகரத்தின் மேயர் தனது குடிமக்களுக்கு குர்திஷ் மற்றும் பாரசீக புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து வாழ்த்து அட்டைகளை அனுப்பியபோது, ​​W என்ற எழுத்தைப் பயன்படுத்தியதற்காக அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
Letters Q, W, And X Were Once Illegal in Turkey
Letters Q, W, And X Were Once Illegal in Turkey Twitter
Published on

ஒரு காலத்தில் Q, W, X ஆகிய எழுத்துக்கள் துருக்கியில் சட்டவிரோதமான எழுத்துகளாக இருந்தன, அவற்றை ஏன் அவ்வாறு குறிப்பிட்டனர், என்ன காரணத்திற்காக என இங்கே தெரிந்து கொள்வோம்.

1928 இல், துருக்கி அரசாங்கம் அவர்களின் எழுத்துக்களை மாற்ற முடிவு செய்தது.

பழைய துருக்கிய எழுத்து முறை, அரபு எழுத்துமுறையைப் பயன்படுத்தியது. அந்த எழுத்துகள் மிகவும் கடினமானதாக இருந்துள்ளது.

பல ஆண்டுகளாக துருக்கியில் வாழ்ந்து, சரளமாக துருக்கிய மொழி பேசக்கூடியவர்களுக்கு கூட தெருப் பலகைகளை உச்சரிக்கவோ படிக்கவோ முடியவில்லை.

Q, W மற்றும் X எழுத்துக்கள் கைவிடப்பட்டன

லத்தீன் ஸ்கிரிப்டை அடிப்படையாகக் கொண்ட பிற மொழிகளுடன் ஒப்பிடுகையில், சிறு குழந்தைகள் துருக்கிய மொழியைப் படிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டனர்.

பழைய அரேபிய எழுத்துக்களில் கிட்டத்தட்ட ஐந்நூறு எழுத்துக்கள் இருந்தன. புதிய துருக்கிய எழுத்துக்களில் இருபத்தி ஒன்பது எழுத்துக்கள் மட்டுமே உள்ளன.

பழைய மற்றும் புதிய துருக்கிய எழுத்துக்கள் இரண்டும் ஒரே லத்தீன் ஸ்கிரிப்டைப் பயன்படுத்துவதால் இது ஆங்கில எழுத்துக்களைப் போலவே தெரிகிறது.

துருக்கிய உச்சரிப்பின் நுணுக்கங்களுக்கு இடமளிக்கும் வகையில் சில சிறப்பு எழுத்துக்கள் சேர்க்கப்பட்டன. அதே நேரத்தில் தேவையற்றதாக கருதிய மூன்று எழுத்துக்கள் கைவிடப்பட்டன. Q, W மற்றும் X இந்த மூன்று எழுத்துக்களும் கைவிடப்பட்டன.

இந்த எழுத்துக்கள் முறையே K, V மற்றும் KS என்ற எழுத்துக்களைப் பயன்படுத்தி உச்சரிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

அடுத்ததாக நாடு முழுவதும் உள்ள நூறாயிரக்கணக்கான பொது அடையாளங்களை புதுப்பிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

தெருப் பெயர்கள், கடைகள், பேருந்து நிறுத்தங்கள், வணிக நிறுவனங்கள், ரயில் நிலையங்கள் என அனைத்தும் புதிய எழுத்துக்களைப் பயன்படுத்தி எழுத அறிவுறுத்தப்பட்டன. செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள் பழைய தட்டச்சுகளை தூக்கி எறிந்தன.

தேசத்தின் எழுத்து மொழி மாற்றம்

அதிகாரப்பூர்வ ஆவணங்கள் புதுப்பிக்கப்பட்டன, பாடப்புத்தகங்கள் மறுபதிப்பு செய்யப்பட்டன. பதினாறு முதல் நாற்பது வயதுக்குட்பட்ட அனைத்து குடிமக்களும் புதிய எழுத்தை கற்க வேண்டும் என்பதற்காக பள்ளிகள் திறக்கப்பட்டன.

இஸ்தான்புல்லில் மட்டும் ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் அந்த வகுப்புகளில் சேர்ந்தனர்.

அப்போதைய ஜனாதிபதி முஸ்தபா கெமால் அட்டாடர்க் புதிய துருக்கிய எழுத்துக்களை 20 செப்டம்பர் 1928 அன்று கைசேரி ஊர் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

பதினான்கு மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு தேசத்தின் எழுத்து மொழியை சில வாரங்களுக்குள் மாற்றியது ஒரு சிறந்த கல்வி சாதனையாக கருதப்பட்டது.

Letters Q, W, And X Were Once Illegal in Turkey
துருக்கி நிலநடுக்கம் : குர்து இன மக்களை அழிக்க செயற்கையாக உருவாக்கப்பட்டதா? உண்மை என்ன?

அவர்களில் பெரும்பாலோர் புதிய மொழியை கற்கும் முனைப்பில் இருந்தாலும், அழகான அரபு எழுத்துக்களை இழந்ததற்காக பலர் வருந்தினர்.

முஸ்தபா துருக்கிய எழுத்துக்களில் இருந்து மூன்று லத்தீன் எழுத்துக்கள் Q, W மற்றும் X-ஐத் தவிர்த்துவிட்டபோது, ​​அவர் அவற்றை வெறுமனே என்று கைவிடவில்லை.

இந்த மூன்று எழுத்துகளை பொதுவில் பயன்படுத்துவதை குற்றமாக கருதி, அவற்றை முற்றிலும் தடை செய்தார்.

2007 ஆம் ஆண்டில், தென்கிழக்கு துருக்கியில் உள்ள ஒரு நகரத்தின் மேயர் தனது குடிமக்களுக்கு குர்திஷ் மற்றும் பாரசீக புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து வாழ்த்து அட்டைகளை அனுப்பியபோது, ​​W என்ற எழுத்தைப் பயன்படுத்தியதற்காக அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இதே தவறை செய்ததற்காக கடந்த காலங்களில் அரசு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

துருக்கிய மக்கள்தொகையில் சுமார் 20 சதவீதம் பேர் குர்து மக்கள், எழுத்துக்கள் சட்டத்தின் சுமைகளைச் சுமந்தனர். ஏனெனில் அவர்கள் துருக்கியர்களை விட சட்டவிரோதமான மூன்று எழுத்துக்களை அதிகம் பயன்படுத்துவோர்களாக இருந்தனர்.

Letters Q, W, And X Were Once Illegal in Turkey
குர்து மக்கள் : தனி நாடு -  மத்திய கிழக்கில் போராடும் ஒரு தேசிய இனத்தின் விறுவிறு வரலாறு!

எழுத்துகள் மீதான தடை நீக்கம்

குர்து மக்களுக்கென சொந்த மொழி மற்றும் குறிப்பிட்ட எழுத்துகள் உள்ளன. ஆனால் 1990கள் வரை இவையும் தடைசெய்யப்பட்டன.

புதிய துருக்கிய எழுத்துக்களைப் பயன்படுத்த கட்டாயப்படுத்தியது நாடு. ஆனால் முக்கியமான Q, W மற்றும் X இல்லாமல், பல குர்திஷ் மக்கள் தங்கள் பெயர்களை மாற்ற வேண்டியிருந்தது.

குர்து மக்கள் துருக்கிய அரசாங்கத்தால் மொழி ரீதியாக ஒடுக்கப்பட்டன. பல போராட்டங்களுக்கு பின் அக்டோபர் 2013 இல் துருக்கிய அரசாங்கம் Q, W மற்றும் X மீதான தடையை நீக்கியது.

Letters Q, W, And X Were Once Illegal in Turkey
துருக்கி நிலநடுக்கம்: சரிந்த ஊழல் கட்டடங்கள், கைவிடப்பட்ட மக்கள் - மன்னிப்பு கேட்ட அதிபர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com