ரியோ டி ஜெனிரோவில் அமைந்துள்ள மீட்பர் இயேசு கிறிஸ்துவின் சிலை மீது தாக்கிய மின்னலின் தத்ரூபமான புகைப்படம் இணையத்தை ஆட்கொண்டுள்ளது.
ஒரு தருணத்தை அப்படியே நிலை நிறுத்தக் கூடிய சக்தி புகைப்படங்களுக்கு உண்டு. அதனை எப்போது பார்த்தாலும், நமக்கு அன்று நடந்த நிகழ்வுகள் எல்லாம் நினைவலையில் வந்துசெல்லும்.
சிலப் புகைப்படங்கள், இயற்கையின் அழகை, ஆச்சரியத்தை நமக்கு எடுத்துக்காட்டும். அப்படி சில புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உலகின் மிகப் பெரிய கிறிஸ்து சிலை அமைந்திருக்கிறது. மீட்பர் இயேசு - The Christ The Redeemer என்றழைக்கப்படும் இந்த பிரம்மாண்ட சிலையின் உயரம் 125 அடியாகும். இந்த சிலை மீது சமீபத்தில் மின்னல் தாக்கியது.
இந்த மின்னல் சரியாக இயேசு சிலையின் தலைப்பகுதியை தாக்கியது. இதனை கச்சிதமாக புகைப்படம் எடுத்திருக்கிறார் புகைப்படக் கலைஞரான ஃபெர்னாண்டோ ப்ராகா என்பவர். இந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். கடந்த பிப்ரவரி 10 ஆம் நாள் இந்த மின்னல் தாக்கியதாக அவரது பதிவின் மூலம் அறியப்படுகிறது.
இந்த புகைப்படங்கள் இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. வானில் தோன்றிய மின்னல், மிக துல்லியமாக மீட்பர் இயேசுவின் தலை மீதே விழுந்துள்ளது தான் இதற்கு காரணம். ஒரு சிலர் இதனை ஃபோட்டோஷாப் என்று கூறினாலும், இந்த புகைப்பட்ங்கள் பார்ப்பவரை மெய் சிலிர்க்க வைக்கிறது. ஒரு சிலரோ, இதனை ஒரு எதிர்மறை நிகழ்வாக கருதி, கடவுள் கோபமாக இருக்கிறார் என்றும் தெரிவித்து வருகின்றனர். இன்னொரு புறம் கடவுள் மனிதர்களுக்கு ஏதோ ஒரு செய்தி அனுப்ப முயற்சிக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.
இந்த புகைப்படங்களை பகிர்ந்த ஃபெர்னாண்டோவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ள பல புகைப்படங்கள் இந்த மீட்பர் இயேசுவின் சிலையின் புகைப்படங்கள் தாம். மற்றொரு பயனர், அந்த பகுதியில் அடிக்கடி இவ்வாறு மின்னல் தாக்கும் என்று கூறியிருந்தார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust