பிரிட்டன் முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் மொபைலை ஹேக் செய்த ரஷ்ய ஏஜெண்ட்கள் - விரிவான தகவல்

லிஸ் ட்ரஸ்ஸின் நண்பரான குவாசி குவார்டெங்குடன் அவர் பேசிய தனிப்பட்ட உரையாடல்கள் மூலமாக பல முக்கிய ரகசியங்களை ஹேக்கர்கள் தெரிந்துகொண்டிருக்கலாம் என அறிக்கைகள் கூறுகின்றன.
லிஸ் ட்ராஸ்
லிஸ் ட்ராஸ்Twitter

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ். போரிஸ் ஜான்சன் பதவி விலகிய பின்னர் ரிஷி சுனக்கை விட கன்சர்வேடிவ் கட்சியினரின் அதிக ஆதரவைப் பெற்று பிரதமரானார். ஆனால் இவரது வரி விலக்கு நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையை அடையவே ராஜினாமா செய்தார்.

பிரதமராக பதவியேற்பதற்கு முன்னர் லிஸ் ட்ரஸ் வெளியுறவுத்துறை அமைச்சராக செயலாற்றினார். அந்த நேரத்தில் தான் அவரது மொபைல் ஹேக் செய்யப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

லிஸ் ட்ரஸ்ஸின் நண்பரான குவாசி குவார்டெங்குடன் அவர் பேசிய தனிப்பட்ட உரையாடல்கள் மூலமாக பல முக்கிய ரகசியங்களை ஹேக்கர்கள் தெரிந்துகொண்டிருக்கலாம் என அறிக்கைகள் கூறுகின்றன.

குவாசி குவார்டெங் பின்னாளில் லிஸ் ட்ரஸ்ஸால் நிதியமைச்சராக பணியமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

லிஸ் ட்ரஸ் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமரான போது அவரது கைப்பேசி ஹெக் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

ஹேக்கர்கள் ரஷ்ய அதிபர் புதினுக்காக வேலை செய்பவர்கள் என அறிக்கைகள் கூறுகின்றன. இங்கிலாந்து உக்ரைனுக்கு செய்துள்ள இராணுவ உதவிகள் மற்றும் பிற திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்வது அவர்களின் நோக்கம்.

லிஸ் ட்ராஸ்
லிஸ் ட்ரஸ்: பிரதமராக இருந்தது 45 நாட்கள் தான்; ஆனால் வாய்பிளக்க வைக்கும் வாழ்நாள் வருமானம்

அத்துடன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் குறித்து லிஸ், குவார்டெங்கிடம் கூறிய விமர்சனங்களும் ஹேக்கர்களுக்கு தெரிந்திருக்கலாம். இதனால் அவர்கள் பிளாக் மெயில் செய்யவும் வாய்ப்பிருப்பதாக அறிக்கைகள் எச்சரிக்கின்றன.

லிஸ் ட்ரஸ் வெறும் 44 நாட்கள் மட்டுமே பிரிட்டன் பிரதமராக இருந்தார். இவரைத் தொடர்ந்து இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக பணியாற்றி வருகிறார்.

லிஸ் ட்ராஸ்
ரிஷி சுனக் : பிரிட்டன் பிரதமராகும் இந்திய மருமகன் - யார் இவர்? சாதித்த விஷயங்கள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com