பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தடுக்க புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்ளவுள்ளது லண்டனின் சோஹோ நகர அரசு. இந்த முயற்சி சற்றே வேடிக்கையாகவும், வெறுக்கத்தக்கதாகவும் இருந்தாலும், நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
பொது இடங்களில் மக்கள் சிறுநீர் கழிப்பதை நாம் நிறைய பார்த்திருப்போம். பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயலாகும். இது எல்லா நாடுகளிலும் உள்ள பிரச்னை தான். இது குற்றமாக பாவிக்கப்பட்டு, இதனை தடுக்க அரசும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இருப்பினும், பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் போக்கு குறைந்தபாடில்லை. இதனால், பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தடுக்க லண்டன் சோஹோ நகர அரசு ஒரு புதிய யுக்தியை கையாளவுள்ளது.
மக்கள் எங்கெல்லாம் சிறுநீர் கழிக்க ஒதுங்குகிறார்களோ, அந்த சுவர்களில் எல்லாம், ஒரு புதிய வகை பெயிண்ட்டை இவர்கள் பூசவுள்ளனர். அதன் பெயர் anti-pee repellant பெயிண்ட்.
இதன் "மேற்பரப்பு பாதுகாப்பு" ஒரு வெளிப்படையான நீர்-தடுப்பு அடுக்கை உருவாக்குகிறது. சிறுநீர் அதன் மீது தாக்கும் போது திரும்ப தெறிக்கும் விதத்தில் இந்த பெயிண்ட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சோஹோ நகரத்தில் சூமார் 12 இடங்களில் இந்த பெயிண்ட்டை அரசு அதிகாரிகள் பூசவுள்ளனர். பார்கள், உணவகங்கள், தியேட்டர்கள், மற்றும் ஒரு சில குடியிருப்பு பகுதிகள் இதில் அடங்கும்.
அந்த நகரத்து கவுன்சிலர், ஓர் சுவற்றில் இந்த பெயிண்ட்டை பூசி, சோதனைக்காக தண்ணீரை எறிந்தார். அப்போது தண்ணீர் அதன் மீது பட்டு தெறித்துள்ளது. “இந்த முயற்சி நிச்சயம் பயன்தரும்” என்று அவர் தெரிவித்திருக்கிறார்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust