சிறுநீர் முதல் விமானத்தின் கதவை திறந்தது வரை : தொடரும் விமான நிலைய சர்ச்சைகள்

சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு கொண்டிருந்த விமானத்தில் அவசர காலத்தில் திறக்க வேண்டிய கதவை ஒரு பயணி திறந்ததால் விமானிகள் ஒட்டுமொத்த விமானத்தையும் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.
சக பயணி மீது சிறுநீர் கழித்தது முதல் மது போதை ஆசாமிகள் வரை: தொடரும் விமான நிலைய சர்ச்சைகள்
சக பயணி மீது சிறுநீர் கழித்தது முதல் மது போதை ஆசாமிகள் வரை: தொடரும் விமான நிலைய சர்ச்சைகள்ட்விட்டர்

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விமானங்கள் & விமான நிலையங்களில் சர்ச்சைக்குரிய சம்பவங்கள், பிரச்னைகள் நடந்து வருவதாக செய்திகளில் பார்க்க முடிகிறது.

சமீபத்தில் இண்டிகோ விமானம் ஒன்றில், ஒருவர் அவசர காலத்தில் திறக்க வேண்டிய விமானத்தின் கதவுகளை திறந்தது பெரும் பிரச்னையைக் கிளப்பியது.

இதனால் விமானிகள் மற்றும் விமானத்தில் பணியில் இருந்த உதவியாளர்கள் அனைவரும் பதறிப் போய், விமானத்தின் பாதுகாப்பு பரிசோதனைகளை எல்லாம் மீண்டும் ஒருமுறை சரிபார்த்து உள்ளனர்.

6E - 7339 என்கிற இண்டிகோ நிறுவனத்தின் விமானம் சென்னையில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு கடந்த 2022 டிசம்பர் 10ஆம் தேதி அன்று புறப்பட்டு கொண்டிருந்த போதுதான் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

சக பயணி மீது சிறுநீர் கழித்தது முதல் மது போதை ஆசாமிகள் வரை: தொடரும் விமான நிலைய சர்ச்சைகள்
Nepal Flight Crash: கடைசி நேரத்தில் விபத்துக்குள்ளான விமானம்; 32 பேர் பலி - எப்படி?

பொதுவாக விமானம் பூமியிலிருந்து பல்லாயிரம் மீட்டர் உயரத்தில் பறப்பதால் விமானத்திற்குள் நிலவும் காற்றழுத்தம் போன்ற விஷயங்கள் எல்லாம் மிக கவனமாக சரிபார்க்கப்படும். காற்றழுத்தத்தில் பெரிய மாறுபாடுகள் ஏற்பட்டால் பயணிகளின் உயிருக்கே கூட ஆபத்தாக அமையலாம்.

எனவே இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது விமானத்திற்குள் இருக்கும் காற்றழுத்தம் முதல் விமானத்தின் செயல்பாடுகள் வரை அனைத்தையும் சரிபார்த்த பிறகே விமானிகள் விமானத்தை இயக்குவர்.

அப்படித் தான், சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு கொண்டிருந்த விமானத்தில் அவசர காலத்தில் திறக்க வேண்டிய கதவை ஒரு பயணி திறந்ததால் விமானிகள் ஒட்டுமொத்த விமானத்தையும் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் டி ஜி சி ஏ என்று அழைக்கப்படும் டைரக்டரேட் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியேஷன் அமைப்பு விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் செய்திகளில் தெரிய வந்திருக்கிறது.

சக பயணி மீது சிறுநீர் கழித்தது முதல் மது போதை ஆசாமிகள் வரை: தொடரும் விமான நிலைய சர்ச்சைகள்
பறக்கும் விமானத்தில் சிகரட் பிடித்த பயணி; பற்றிய தீ - என்ன நடந்தது?

ஏர் இந்தியா விமானத்தில் சிறுநீர் கழித்த சம்பவம்:

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி நியூயார்க் நகரத்திலிருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானத்தில், ஒரு ஆண் நன்றாக மது குடித்துவிட்டு பிசினஸ் கிளாஸில் அமர்ந்திருந்த சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெண்மணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி காவல்துறை சிறுநீர் கழித்தவர் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து வழக்கு தொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

கோ ஃபர்ஸ்ட் விமான உதவியாளரிடம் தவறாக நடந்து கொண்ட பயணிகள்

கடந்த ஜனவரி 5ஆம் தேதி, கோவாவில் இருந்து டெல்லியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் விமானத்தில், பயணிகளுக்கு உதவி செய்யும் பணியில் இருந்த பெண் உதவியாளர் ஒருவரிடம் இரண்டு வெளிநாட்டவர்கள் தவறாக நடந்து கொண்டதாக செய்திகள் வெளியாகின.

விமான உதவிப் பணியாளர் பெண்ணிடம் அந்த இரு வெளிநாட்டவர்களும் மிக இழிவான சொற்களைப் பேசி கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் டி ஜி சி ஏ அமைப்பிடம் தெரியப்படுத்தியதாகவும், தங்கள் நிறுவனத்தின் விமான உதவியாளர் பெண்ணை தரக்குறைவாக பேசியதற்காக இரு வெளிநாட்டவர்களை மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையிடம் (சி ஐ எஸ் எஃப்) பிடித்துக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

குடித்துவிட்டு கலாட்டா செய்த பயணிகள்

அதேபோல சமீபத்தில் டெல்லியில் இருந்து பாட்னா நகரத்துக்கு பயணித்துக் கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில், இரு பயணிகள் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு பிரச்னைகளை ஏற்படுத்தியதாகவும். ஒரு விமான உதவியாளர் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த பிரச்னை தொடர்பாக இண்டிகோ நிறுவன தரப்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டு, இரு பயணிகளும் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின.

விமான நிலையத்தின் கேட்டில் சிறுநீர் கழித்த சம்பவம்

கடந்த 2023 ஜனவரி 11ஆம் தேதி, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாம் டெர்மினல் பகுதியில், பயணிகள் எல்லாம் தங்களுக்கான விமானங்களில் ஏறிச் செல்லும் டிபார்ச்சர் பகுதியில் இருந்த வாயிலில், ஜவஹர் அலி கான் என்கிற 39 வயது நபர் சிறுநீர் கழித்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி காவல்துறை அவருக்கு எதிராக இந்திய தண்டணைச் சட்டம் 294 மற்றும் 510 ஆகிய சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததும் இங்கு நினைவு கூறத்தக்கது.

சக பயணி மீது சிறுநீர் கழித்தது முதல் மது போதை ஆசாமிகள் வரை: தொடரும் விமான நிலைய சர்ச்சைகள்
Air India: பெண் பயணி மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமி; அலட்சியம் காட்டிய விமான ஊழியர்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com