வீட்டிற்குள் புகுந்து டோனட் சாப்பிட்ட கரடிகள், அதிர்ந்த உரிமையாளர் - வைரல் வீடியோ

ஆலிஸ் டெய்லர் என்ற பெண், தன் வீட்டிற்குள் ஏதோ வினோத சத்தம் கேட்டதும் சென்று பார்த்திருக்கிறார். அப்போது சமையலறையில், ஒரு கரடியும் அதன் குட்டியும் இருந்துள்ளது. கிச்சென் ஜன்னல் வழியாக வீட்டினுள் அவை நுழைந்துள்ளன
Bear cub (representational)
Bear cub (representational)Pexels
Published on

கலிஃபோர்னியாவில் உள்ள மோன்ரோவியாவில் ஒரு வீட்டில், ஒரு குட்டி கரடியும், அதன் தாயும் புகுந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த டோனட்டை சாப்பிட்டுவிட்டு சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆலிஸ் டெய்லர் என்ற பெண், வீட்டிற்குள் ஏதோ வினோத சத்தம் கேட்டதும் சென்று பார்த்திருக்கிறார். அப்போது சமையலறையில், ஒரு கரடியும் அதன் குட்டியும் இருந்துள்ளது. கிச்சென் ஜன்னல் வழியாக வீட்டினுள் நுழைந்த கரடிகள், அங்கு வைக்கப்பட்டிருந்த டோனட்களை சாப்பிட்டிருக்கின்றன.

அதுவும் அமர்ந்து பொறுமையாக அவற்றைச் சாப்பிட்டுள்ளன. அவை சாப்பிட்டு முடித்தபின் ஆலிஸ் சப்தம் எழுப்பியுள்ளார். அதை கேட்ட அந்த கரடிகள் வந்த வழியே திரும்ப சென்றுவிட்டன.


இதோடு இதே கரடிகள் இரண்டாவது முறையாக ஆலிசின் வீட்டிற்கு வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னரும் ஒரு முறை, கலிஃபோர்னியாவில் வேறொரு இடத்தில், ஒரு காரில் இருந்த சாண்ட்விச்சை கரடி ஒன்று எடுக்க முயற்சித்திருந்தது.

கரடிகளின் இந்த செயல்களை நாம் படம்பிடித்துப் பகிர்வது அது க்யூட்டாக இருப்பதனால் தான் என்றாலும், அதிகரித்துவரும் வாழ்விட ஆக்கிரமிப்புகளும், சுற்றுச்சூழல் வளங்களின் இழப்பும், விலங்குகளின் உணவு சங்கிலியில் கைவைத்திருக்கிறதா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

Bear cub (representational)
ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தும் குரங்குகள் - வைரலாகும் வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com