Man builds tiny house from 35,000 plastic bags
Man builds tiny house from 35,000 plastic bagsTwitter

35,000 பிளாஸ்டிக் பைகளை கொண்டு வீட்டை உருவாக்கிய இளைஞர் - யாருக்கு அந்த வீடு?

கேரி, தான் உருவாக்கிய இந்த மாடல் வீட்டை அதிகளவில் உருவாக்கி, இயற்கை பேரழிவுகளால் வீட்டை இழந்தவர்களுக்கு வழங்கமுடியும் என்று கூறுகிறார்.
Published on

கேரி பெஞ்செகிப் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் 35,000 பிளாஸ்டிக் பைகளை கொண்டு ஒரு சிறய வீட்டை உருவாக்கியுள்ளார்.

பாலியில் வசிக்கும் இவர் இந்தோனேசியாவில் உள்ள நதிகளை மீட்டெடுக்கும் இலாப நோக்கற்ற நிறுவனமான சுங்கை வாட்ச் உடன் பணிபுரிகிறார்.

இந்த நிறுவனத்தில் பணிபுரியும் குழுவானது 2.2 மில்லியன் பவுண்டுகள் பிளாஸ்டிக்குகளை கடலிருந்தும், ஆற்றிலிருந்தும் சேகரித்துள்ளது.

பிளாஸ்டிக் பைகளில் இருந்து ஒரு சிறிய வீட்டை உருவாக்கி கேரி ஒரு படி மேலே சென்றுள்ளார்.

இந்தோனீசியாவிலும் குப்பைகள் கடல்களிலும், ஆறுகளிலும் தூக்கி வீசப்படுகின்றன. கடலிலும், ஆற்றிலும் பல லட்சம் டன் குப்பைகள் வீசப்படுகின்றன

சுங்கை வாட்ச் என்ற அமைப்புடன் இணைந்து பாலி, ஜாவா பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் இருந்தும் சட்டவிரோதமாக குப்பை கொட்டப்பட்ட இடங்களிலிருந்தும் குப்பைகளை அகற்றத் தொடங்கினார் கேரி பெஞ்செகிப்.

Man builds tiny house from 35,000 plastic bags
சுந்தர் பிச்சை : கூகுள் CEO வாழும் சொகுசு வீடு குறித்து தெரியுமா? மதிப்பு என்ன?

அவ்வாறு அகற்றப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளைக் கொண்டு ஒரு வீட்டையே கட்டியுள்ளார்.

35,000 பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு 14 சதுர மீட்டர் பரப்பளவில் சிறய வீட்டை உருவாக்கியிருக்கிறார் கேரி.

சிறியதாக இருந்தாலும், இந்த வீட்டில், ஒருவர் வாழத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. சூரிய சக்தியைப் பயன்படுத்துவதால் செலவுகளும் பூஜ்ஜியமாக இருக்கிறது.

கேரி, தான் உருவாக்கிய இந்த மாடல் வீட்டை அதிகளவில் உருவாக்கி இயற்கை பேரழிவுகளால் வீட்டை இழந்தவர்களுக்கு வழங்கமுடியும் என்று கூறுகிறார்.

Man builds tiny house from 35,000 plastic bags
Elon Musk : உலக பணக்காரர் வாழும் சிறிய 3BHK வீடு - ஏன் இதை தேர்வு செய்தார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com