Beer-ல் இயங்கும் பைக் - 240 கிமீ வேகத்தில் பறக்கும் ஒரு அடடே கண்டுபிடிப்பு - எங்கே?

பொருளாதார நெருக்கடிகள், இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற காரணங்களுக்காக எரிவாயுக்களுக்கு மாற்றை நாம் தேடிக்கொண்டிருக்கிறோம். அதில் சமீபத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடிய மாற்றாக மின்சார சக்தியில் ஓடும் வாகனங்கள் வந்துவிட்டன.
Beer bike
Beer bikeTwitter
Published on

பீரில் ஓடக்கூடிய இரு சக்கர வாகனத்தை தயாரித்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர். இந்த வாகனம் மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதாக தயாரிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிகள், இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற காரணங்களுக்காக எரிவாயுக்களுக்கு மாற்றை நாம் தேடிக்கொண்டிருக்கிறோம். அதில் சமீபத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடிய மாற்றாக மின்சார சக்தியில் ஓடும் வாகனங்கள் வந்துவிட்டன.

Beer bike
"பைக் இன்ஸ்ட்ரக்டர் தேவை" வைரலாகும் இளைஞரின் பத்திரிகை விளம்பரம்

தண்ணீர், எண்ணெய் போன்ற திரவங்களில் ஓடும் வாகனங்களையும் தயாரித்து வருகின்றனர். தற்போது, அமெரிக்காவில் ஒருவர் பீரில் இயங்கும் பைக் ஒன்றை தயாரித்துள்ளார். கீ மைக்கல்சன் என்பவர் தான் இந்த பீரில் ஓடக்கூடிய இரு சக்கர வாகனத்தை தயாரித்திருக்கிறார்.

ப்ளூமிங்டன்னில் உள்ள தனது கராஜில் இந்த வாகனத்தை உருவாக்கியுள்ளார் மைக்கல்சன்

இவர் இதற்கு முன் ராக்கெட் சக்தியில் இயங்கும் கழிப்பறை மற்றும் ஜெட் சக்தியில் இயங்கும் காபி பாட் ஆகியவற்றையும் தயாரித்திருக்கிறார்.

இந்த பீர் டூவீலரில் ஒரு 14 கேலன் கெக் (keg - பீர் பீபாய்) பொருத்தப்பட்டுள்ளது. எரிவாயுவுக்கு பதிலாக இதுவே வாகனத்தை இயக்கும்.

இதிலுள்ள காயில் 300 டிகிரிக்கு சூடாகி, பின்னர் நீராவியாக மேல் எழுகிறது. இது வாகனத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்ல உதவுகிறது.

அதிகரித்து வரும் எரிவாயுவின் விலை தான் தன்னை இந்த பைக்கை உருவாக்க காரணமாக இருந்ததாக மைக்கல் கூறினார். மேலும், எப்போதும் மற்றவரிடம் இருந்து தனித்து தெரியவேண்டும் என நினைப்பவராம்.

மைக்கல்சனுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை, அதனால் மதுவை பயன்படுத்த இதை விட சிறந்த வழி இல்லை என நினைத்துதான் அதனை எரிவாயுவின் மாற்றாக பயன்படுத்தியுள்ளார்

மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் இந்த பைக்கை விரைவில் டெஸ்ட் டிரைவ் செய்யவுள்ளதாக கூறியுள்ளார் மைக்!

Beer bike
Royal Enfield 18,700 ரூபாய் தானா? இணையத்தில் வைரலாகும் 36 வருட பழைய பில்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com