சீனா: ஒரு ஆண்டுக்கு சம்பளத்துடன் லீவ் - ஊழியருக்கு நிறுவனம் கொடுத்த அடடே பரிசு!

தண்டனை என்றால், ஒரு மணி நேரத்திற்கு ஓட்டல் ஊழியராக நடிப்பது, கசப்பான பானங்களை அருந்துவது போன்ற விளையாட்டான தண்டனைகள். அதில் தான் சென் என்பவருக்கு பரிசு கிடைத்தது. அவருக்கு கிடைத்த லக்கி டிரா பரிசில், ஒரு ஆண்டுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை என எழுதப்பட்டிருந்தது.
சீனா: ஒரு ஆண்டுக்கு சம்பளத்துடன் லீவ் - ஊழியருக்கு நிறுவனம் கொடுத்த அடடே பரிசு!
சீனா: ஒரு ஆண்டுக்கு சம்பளத்துடன் லீவ் - ஊழியருக்கு நிறுவனம் கொடுத்த அடடே பரிசு!Twitter
Published on

வருடத்தின் 365 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை பெற்றிருக்கிறார் சீனாவை சேர்ந்த நபர் ஒருவர்.

பெயர் குறிப்பிடப்படாத ஒரு நிறுவனத்தில் பணியாற்றிவரும் இவருக்கு குலுக்கல் முறையில் இந்த அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது.

சீனாவை சேர்ந்தசென் என்கிற நபர் பணியாற்றும் நிறுவனத்தில் வருடாந்திர கூட்டம் மற்றும் இரவு உணவு விருந்து நடைப்பெற்றது

அப்போது பல விளையாட்டு போட்டிகள் நடந்தது. அதில் நடத்தப்பட்ட குலுக்கல் முறை போட்டியில், பரிசுகளும் இருந்தன, தண்டனைகளும் இருந்தன.

தண்டனை என்றால், ஒரு மணி நேரத்திற்கு ஓட்டல் ஊழியராக நடிப்பது, கசப்பான பானங்களை அருந்துவது போன்ற விளையாட்டான தண்டனைகள்.

அதில் தான் சென் என்பவருக்கு பரிசு கிடைத்தது. அவருக்கு கிடைத்த லக்கி டிரா பரிசில், ஒரு ஆண்டுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை என எழுதப்பட்டிருந்தது.

இதனை கண்டு சென், அவர் பணியாற்றும் நிறுவனத்தின் தலைவர் உள்பட அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இந்த வீடியோவும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

குலுக்கல் பரிசுகளில் இந்த சர்பிரைஸ் பரிசு இருப்பதை நிறுவனம் அறிந்தே இருந்தது. ஆனால் யாரும் இதை வெல்வார்கள் என்று நினைக்கவில்லை. வென்றபோது யாரும் நம்பவுமில்லை.

ஒரு ஆண்டுக்கு வேலையும் செய்யாமல், அந்த விடுமுறை நாட்களுக்கு ஊதியமும் கிடைக்கும் என்றால் யாரால் தான் நம்பமுடியும்? இது நிஜம்தானா என சென் கேட்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது

சீனா: ஒரு ஆண்டுக்கு சம்பளத்துடன் லீவ் - ஊழியருக்கு நிறுவனம் கொடுத்த அடடே பரிசு!
மரியாதையாக பேசினால் டீ விலை குறைவு; கஃபேயின் அடடே ஆஃபர்

கொரோனா காலம் என்பதால் கடந்த மூன்று ஆண்டுகளாக வழக்கமாக நடைபெறும் இந்த வருடாந்திர டின்னர் பார்ட்டி நடைபெறவில்லை எனவும், இப்போது தான் நடைபெறுகிரது எனவும் சென் தெரிவிக்கிறார்.

ஓராண்டு முடிந்து திரும்பும்போது, தேவைப்பட்டால் இதே நிறுவனத்தில் பணியாற்றுவேன் எனவும், இல்லை என்றால் மாறிவிடுவேன் எனவும் சென் தெரிவித்தார்

சீனா: ஒரு ஆண்டுக்கு சம்பளத்துடன் லீவ் - ஊழியருக்கு நிறுவனம் கொடுத்த அடடே பரிசு!
Zomato : Wifi, போன் சார்ஜ் செய்யும் வசதி - ஊழியர்களுக்கு அடடே அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com