மரியாதையாக பேசினால் டீ விலை குறைவு; கஃபேயின் அடடே ஆஃபர்

அந்த வகையில் லண்டனில் அமைந்துள்ள ஒரு கஃபேவில், வாடிக்கையாளர்களின் நடத்தையை பொறுத்து அவர்கள் வாங்கும் தேனீருக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டீ
டீnews sense
Published on

லண்டனில் உள்ள ஒரு கஃபேவில் மரியாதையாக பேசினால் குறைந்த விலைக்கும், அதிகாரமாக பேசினால் அதிக விலைக்கும் டீ விற்கப்படுகிறது.

நாம் வெளியில் உணவருந்த செல்லும்போது, சிலர் அங்கு பணி புரியும் சர்வர்களை சற்று மரியாதைக் குறைவாக நடத்துவதைப் பார்த்திருப்போம். வாடிக்கையாளர் திருப்தியை மனதில் வைத்து அவர்கள் அதை சகித்துக் கொண்டு வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் மாறிவிட்டது.

பரஸ்பர மரியாதை என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. அதையும் மீறி கலாட்டா செய்தால் அந்த வாடிக்கையாளரை வெளியில் அனுப்பிவிடுவார்கள்.

அந்த வகையில் லண்டனில் அமைந்துள்ள ஒரு கஃபேவில், வாடிக்கையாளர்களின் நடத்தையை பொறுத்து அவர்கள் வாங்கும் தேனீருக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ப்ரெஸ்டன் என்ற இடத்தில் அமைந்துள்ளது சாய் ஸ்டாப் என்கிற கஃபே. அங்கு தான் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த கஃபேவில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும்போது அவர்கள் குரலில் தன்மையோடு பேசினால், அவர்களுக்கு தேனீரின் விலை குறைவு.

டீ
காபி குடித்த பின் கப்பை சாப்பிட்டு விடலாம் - வைரல் டீ கடை!

அதாவது, 'தேசி சாய்' என்று மட்டும் சொன்னால், ஒரு கோப்பை தேனீர் 5 பவுண்டுகள். 'தேசி சாய் ப்ளீஸ்' எனக் கேட்டால், 3 பவுண்ட். 'ஹலோ, தேசி சாய் ப்ளீஸ்' எனக் கேட்டால், வெறும் 1.90 பவுண்ட் தான் விலை.

இது குறித்து பேசிய கஃபே உரிமையாளர் உஸ்மான் ஹுஸ்ஸைன், "சில சமயங்களில் நம்முடைய பழக்க வழக்கங்கள் பற்றி நினைவூட்டுவது சரி என்று படுகிறது." குரலை உயர்த்தி பேசி கலாட்ட செய்வது மட்டும் மரியாதையின்மை இல்லை. ஒருவரிடம் பேசும்போது அன்போடும், மரியாதையாகவும், மென்மையாகவும் பேசவேண்டும் எனக் கூறினார்.

இந்த முயற்சியை முன்னெடுத்தலிருந்து வாடிக்கையாளர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவதாகவும், ஊழியர்களுக்கும் கஸ்டமருக்குமான உறவும் மேம்பட்டுள்ளதாகவும் உஸ்மான் தெரிவித்தார்.

"ஒருவேளை யாராவது மரியாதை இல்லாமல் பேசினால், நான் தயங்காமல் நாங்கள் வைத்திருக்கும் எங்கள் அறிவிப்பை காண்பிப்பேன். அவர்கள் மறுமுறை அன்பாக கேட்பார்கள்" என்றும் அவர் கூறினார்.

டீ
ஒரு வருடத்திற்கு free பீட்சா; தம்பதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த உணவகம் - என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com