”சிறுநீரை குடித்தேன்” 31 நாட்கள் அமேசான் காட்டில் சிக்கிய நபர் - தப்பித்தது எப்படி?

31 நாட்களாக அமேசான் காடுகளில் சிக்கித் தவித்த இவரை மீட்புக்குழு பத்திரமாக மீட்டது. ஆனால், அந்த அடர்ந்த காட்டுக்குள் இவர் மாட்டிக்கொண்டது எப்படி? வெறும் புழுக்கள், பூச்சிகள், ஒரு கட்டத்தில் தனது சிறுநீரையே உட்கொண்டு உயிர்வாழ்ந்தவரின் நெகிழ்ச்சிக் கதை இது!
”என் சிறுநீரை குடித்தேன்” 31 நாட்கள் அமேசான் காட்டில் சிக்கிய நபர் - தப்பித்தது எப்படி?
”என் சிறுநீரை குடித்தேன்” 31 நாட்கள் அமேசான் காட்டில் சிக்கிய நபர் - தப்பித்தது எப்படி?twitter
Published on

”மழை வரவேண்டும் என கடவுளை பிரார்த்தித்தேன்” என மெல்லியக் குரலில் வெளியாகிறது ஜானதனின் வார்த்தைகள்.

31 நாட்கள், ஆள் அரவமில்லாமல், உணவு தண்ணீர் இல்லாமல், உயிர் பறிக்கும் காட்டு விலங்குகளுக்கு மத்தியில் சிக்கி உயிர் பிழைத்துவந்தவர், வாழ்க்கையின் மறுப்பக்கத்திற்கே சென்று வந்திருக்கிறார் எனச் சொன்னாலும் அது மிகையல்ல.

31 நாட்களாக அமேசான் காடுகளில் சிக்கித் தவித்த இவரை மீட்புக்குழு பத்திரமாக மீட்டெடுத்தது. ஆனால், அந்த அடர்ந்த காட்டுக்குள் இவர் மாட்டிக்கொண்டது எப்படி?

வெறும் புழுக்கள், பூச்சிகள், ஒரு கட்டத்தில் தனது சிறுநீரையே உட்கொண்டு உயிர்வாழ்ந்தவரின் நெகிழ்ச்சிக் கதை இது!

Hunting (rep)
Hunting (rep)canva

பொலிவியாவை சேர்ந்த ஜானதன் அகோஸ்டா என்ற 30 வயது நபர், கடந்த ஜனவரி 25 ஆம் தேதி தனது நண்பர்களுடன் காட்டுக்கு வேட்டையாட சென்றுள்ளார். வடக்கு பொலிவியா பகுதிக்கு மிருக வேட்டைக்கு சென்ற குழுவிலிருந்து தவறுதலாக பிரிந்துவிட்டார் ஜானதன்.

பல நாட்களாக ஜானதன் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த அவர்து குடும்பத்தினர், ஜானதனை காணவில்லை என புகார் அளித்திருந்தனர்.

இவரை கண்டுபிடிக்க ஒரு தேடுதல் குழு அமைக்கப்பட்டு, அவரது நண்பர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் தேடுதல் வேட்டை தொடங்கியது.

அடர்வனத்திற்குள் சிக்கிய ஜானதன், ஒரு மாதக்காலம் தான் எதிர்கொண்ட அனுபவங்களை பற்றி பகிர்திருந்தார்.

”என் சிறுநீரை குடித்தேன்” 31 நாட்கள் அமேசான் காட்டில் சிக்கிய நபர் - தப்பித்தது எப்படி?
"நான் நம்பிக்கை இழந்துவிட்டேன்"- 24 நாட்கள், நடுக்கடலில் உணவின்றி உயிர்பிழைத்த மனிதர்!

எப்படியாவது தப்பித்துவிடவேண்டும் என நினைத்த ஜானதன், மனிதர்கள் இருக்கும் இடத்தை தேடி 40 கிலோமீட்டர் அலைந்துள்ளார். ஆனால், சுற்றி சுற்றி ஒரே வட்டத்திற்குள் ஓடிக்கொண்டிருப்பதை உணர்ந்த அவர், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கடவுளே கதி என்று இருந்ததாக பிபிசி தளத்திடம் தெரிவித்திருக்கிறார்.

”புழு, பூச்சிகள், காட்டில் அங்கு அங்கு கிடைத்த பழங்களை சாப்பிட்டேன். எனது ஷூக்களில் தண்ணீர் நிரப்பி அதனை அருந்திவந்தேன்.

ஒருக்கட்டத்தில் மழை பொழிவதும் நின்றுவிட்டது. அதனால் வேறு வழியில்லாமல் எனது சிறுநீரைக் குடித்தேன்.

மழை வரவேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். மழை வராமல் இருந்திருந்தால், நான் பிழைத்திருக்கமாட்டேன்”

இத்துடன் நின்றுவிடவில்லை. காட்டில் அகப்பட்டிருந்தபோது கொடிய மிருகங்கள் ஜானதனை தாக்கியுள்ளது. இப்படியாக 31 நாட்களுக்கு பிறகு, மனிதர்களை கண்டார். முதலில் ஜானதனைக் கண்டு அவர்கள் பயந்ததாகவும், அதன் பிறகே அவரது நிலையை உணர்ந்து அவர்கள் ஜானதனை மீட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த 31 நாட்களில் 17 கிலோ வரை இழந்திருந்தார் ஜானதன். கணுக்காலில் காயம் மற்றும் தண்ணீர் இன்றி தவித்தால் ஏற்பட்ட நீரிழிப்பு ஆகியவற்றிற்காக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

இனி எப்போதும் வேட்டையாடப்போவதில்லை என்று கூறியிருக்கிறார் ஜானதன்.

”என் சிறுநீரை குடித்தேன்” 31 நாட்கள் அமேசான் காட்டில் சிக்கிய நபர் - தப்பித்தது எப்படி?
24 நாட்கள் நடுக்கடலில் சிக்கிய நபர்: உயிர் பிழைத்தது எப்படி? - விறுவிறு கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com