உகாண்டா: 102 குழந்தைகள், 578 பேரக்குழந்தைகள் - பெரிய குடும்பத்தின் தலைவர் என்ன சொல்கிறார்?

தனக்கு போதுமான அளவு குழந்தைகள் பிறந்துவிட்டதாக திருப்தி அடைந்துவிட்டார் கசாரே. ஆனால் அவரால் இப்போது இருக்கும் எல்லா குழந்தைகளையும் பார்த்துகொள்ள முடியவில்லை.
உகாண்டா: 102 குழந்தைகள், 578 பேரக்குழந்தைகள் - பெரிய குடும்பத்தின் தலைவர் என்ன சொல்கிறார்?
உகாண்டா: 102 குழந்தைகள், 578 பேரக்குழந்தைகள் - பெரிய குடும்பத்தின் தலைவர் என்ன சொல்கிறார்?Twitter
Published on

மூசா ஹசஹ்யா கசேரா என்பவர் 68 வயது முதியவர். உகாண்டா நாட்டில் லுசாகா என்ற பகுதியில் வசிக்கிறார். 

கசேராவுக்கு 102 குழந்தைகள் உள்ளனர். 578 பேரக்குழந்தைகள் இருக்கின்றனர். 

12 பெண்களைத் திருமணம் செய்துகொண்ட கசேராவால் அவரது பல குழந்தைகளின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறார்.

ஏஎஃப்பி ஊடகத்திடம் பேசிய கசாரே, “என்னால் முதலிலும் கடைசியுமாக பிறந்த குழந்தைகளின் பெயர்களை மட்டுமே நினைவில் வைத்திருக்க முடிகிறது, பலரை நினைவுகொள்ள முடியவில்லை.” எனக் கூறியுள்ளார். 

கசாரே இன்னமும் கருத்தடை சிகிச்சை செய்யவில்லை. ஆனால் அவரது மனைவிகள் கருத்தடை மருந்துகளை உட்கொள்கின்றனர். 

இப்போது தனக்கு போதுமான அளவு குழந்தைகள் பிறந்துவிட்டதாக திருப்தி அடைந்துவிட்டார் கசாரே. ஆனால் அவரால் இப்போது இருக்கும் எல்லா குழந்தைகளையும் பார்த்துகொள்ள முடியவில்லை. 

1972ம் ஆண்டு கசாரே மற்றும் அவரது முதல் மனைவியின் திருமணம் நடைபெற்றது. அப்போது இருவருக்கும் 17 வயது. 

அடுத்த ஆண்டில் அவரின் முதல் குழந்தை  சாண்ட்ரா நப்வைர் பிறந்துள்ளார். அதன் பிறகு குழந்தை பிறக்காத ஆண்டே அவர் வாழ்க்கையில் இருந்திருக்காது என கணிக்க முடிகிறது.

“நான் என் சகோதரர் மற்றும் உறவினர்களிடம் அதிக பெண்களை திருமணம் செய்துகொள்ள வலியுறுத்துவேன். அப்போது தான் நம் குடும்ப பாரம்பரியம் அதிகமாக விரிவடையும் எனக் கூறுவேன்” எனவும் கூறியுள்ளார் கசாரே.

உகாண்டா: 102 குழந்தைகள், 578 பேரக்குழந்தைகள் - பெரிய குடும்பத்தின் தலைவர் என்ன சொல்கிறார்?
எலான் மஸ்குக்கு 10 குழந்தைகள்: எத்தனை மனைவிகள்? - மஸ்க் குடும்பம் பற்றிய சுவாரசிய தகவல்கள்

இப்போது கசாரே தான் அதிகமாக குழந்தைகளைப் பெற்றுக்கொண்டது எத்தனை பெரிய தவறு என்பதைப் புரிந்துகொண்டுள்ளார். அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் 2 ஏக்கர் நிலம் வேலைசெய்ய ஆள் இல்லாமல் தரிசாக கிடக்கிறது. 

குழந்தைகளுக்கு உணவு, கல்வி, உடை ஆகியவற்றை அவரால்  வழங்க முடியவில்லை. இதுவரை அதிக குழந்தைகளைப் பெற்று காயங்களை அனுபவித்துவிட்டதால் இனி குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை எனக் கூறியுள்ளார்.

அவரது மனைவிகளில் இருவர் இதன் காரணமாக அவரைப் பிரிந்துவிட்டதாகவும் வருத்தம் கொள்கிறார்.

உகாண்டாவில் பலரும் பல பெண்களைத் திருமணம் செய்யும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக கிராமப்புற மக்கள்.

அதிக பெண்களைத் திருமணம் செய்துகொள்வதை ஆண்கள் பெருமையாக கௌரவமாக கருதுவதே இந்த  நிலைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. 

உகாண்டா: 102 குழந்தைகள், 578 பேரக்குழந்தைகள் - பெரிய குடும்பத்தின் தலைவர் என்ன சொல்கிறார்?
5 மனைவிகள்; 1400 கோடி பணம்; சிறைத் தண்டனை - பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபின் கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com