ஊரை இருளில் ஆழ்த்திய புழுத்திப்புயல் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள Qinghai மாகாணத்தில் பலத்த புழுதி காற்று வீசியதில் மேகங்கள் அனைத்தும் புழுதி மணலால் மூடப்பட்டு அப்பகுதி முழுவதும் புழுதிக் காடாக காணப்பட்டது.
Sand storm
Sand stormTwitter
Published on

உலகெங்கும் இயற்கை சீற்றங்கள் பல நிகழ்வதுண்டு. அவற்றால் ஏற்படும் விளைவுகளும் பல. குறிப்பாக அண்மைக் காலங்களில் நிறைய நிகழ்வுகள், அனைத்தும் நம்மை ஏதோ ஒரு விதத்தில் பயமுறுத்திக்கொண்டே இருக்கின்றது. அதுவும் ஏதாவது ஒரு நிகழ்வு சீனாவிலிருந்து வந்தால் போதும் பயம் ஒரு படி மேலே சென்று விடுகிறது.

சமீபத்தில் வடமேற்கு சீன பகுதியில் பலத்த புழுதிப்புயல் ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கி உள்ளது.

சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள Qinghai மாகாணத்தில் பலத்த புழுதி காற்று வீசியதில் மேகங்கள் அனைத்தும் புழுதி மணலால் மூடப்பட்டு அப்பகுதி முழுவதும் புழுதிக் காடாக காணப்பட்டது.

சீனாவின் வடமேற்கு பகுதிகள் வறண்ட பூமியாகத்தான் காணப்படுகிறது. மேலும் Qinghai பாலைவன பகுதியாக கருதப்படுகிறது. அங்கு இதுபோன்ற புழுதி புயல் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். ஆனால் கடந்த ஜூலை 20ம் தேதியன்று வீசப்பட்ட சூறைக்காற்று 20 ஆண்டுகளில் வீசப்பட்ட புயல்களை விட மிக பயங்கரமாக வீசியது.

மணிக்கு 53 கிமீ வேகத்தில் சுமார் நான்கு மணி நேரம் வீசிய புழுதி காற்று மேக கூட்டங்கள் முழுவதையும் புழுதியால் படரச்செய்து அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெருமளவு பாதிக்க செய்தது.

மேலும் இந்த புயலால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புயலின் அச்சுறுத்தும் வீடியோவை பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்வது வைரலாகி வருகிறது.

Sand storm
வானிலிருந்து பொழியும் மீன் மழை - காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com