அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் திடீரென வானிலிருந்து ஏதோ விழும் சத்தம் கேட்டுள்ளது. இதன் காரணம் தெரியாமல் மக்கள் வெளியில் வந்து பார்த்தபோது மீன்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதை பார்த்துள்ளனர். காரணம் அறியாமல் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் தொடர்ந்து மீன்மழை பொழிவதால் ஆச்சரியத்தில் உள்ளனர்.
ஏனென்றால், மீன், புழுக்கள், தவளைகள் போன்ற நீர் வாழ் உயிரினங்கள் இப்படி மனிதர்கள் நடமாட்டம் இருக்கும் இடங்களில், தரையில் பார்ப்பதென்பது ஆச்சரியப்படுத்தும் தானே. வெள்ளம் போன்ற நிகழ்வுகளால் நடக்க வாய்ப்பிருக்கிறதே தவிர, இச்சமயத்தில் சான் பிரான்சிஸ்கோவில் மழைக்காலமும் இல்லை.
பின் எப்படி மீன்கள் சிதறி கிடக்கின்றன என யோசித்தபோது, ஒரு வேளை பறவைகள் வானில் பறந்துகொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மீன்கள் கீழே விழுந்திருக்கலாம் என்பது அங்குள்ளவர்களின் கருத்து. சான் பிரான்சிஸ்கோவின் பே ஏரியாவில் சீகல், பெலிகன் போன்ற பறவைகளின் எண்ணிக்கை அதிகம்.
அவற்றின் எண்ணிகைக்கு மிகையாகவே தற்போது அங்கு அன்கோவி வகை மீன்களின் எண்ணிக்கையும் இருப்பதனால், இது பறவைகளுக்கான விருந்து காலமாக மாறியுள்ளது.
மீன்களை வேட்டையாடும் பறவைகள், பறந்துகொண்டே அவற்றை உண்ண முற்படும்போது, மூச்சடைத்து அவற்றை கீழே போட்டுவிடுகின்றனவாம். ஓய்வுபெற்ற ஆய்வக பகுப்பாய்வாளரான ஜிம் எர்வின் சமீபத்தில் இப்படி வானிலிருந்து பொழியும் மீன் மழையை பதிவு செய்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில் இப்படி 29 மீன்களும், மே மாதத்தில் 52 மீன்களும் கண்டறியப்பட்டனவாம்.
ஜூன் மாதம் இந்த எண்ணிக்கை 2600 ஆக உயர்ந்துள்ளது தான் ஆச்சரியமளிக்கும் தகவல். மேல்மட்டத்தில் உள்ள வெப்பமான நீருக்கு பதிலாக ஆழத்திலிருந்து குளிர்ந்த நீர் மேலெழும். இதனை upwelling என்பார்கள். இந்த தண்ணீர் ஊட்டச்சத்து மிக்கதாக இருக்கும்.
இதன் காரணமாகத் தான் அங்கு வழக்கத்திற்கு மாறாக ஆன்கோவி மீன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது "இப்போது நீரின் வெப்பநிலை இயல்பை விட குளிர்ச்சியாக இருப்பதாகத் தெரிகிறது, மேலும் இது ஆன்கோவிஸ், கடற்பறவைகள் மற்றும் கடல் வாழ் பாலூட்டிகள் போன்ற விலங்குகளுக்கு தேவையான உணவை வழங்கியுள்ளது" என்று சௌசாலிட்டோவில் உள்ள கடல் பாலூட்டி மையத்தின் பாதுகாப்பு கல்வி இணை இயக்குனர் ஆடம் ரட்னர் கூறுகிறார்.
இந்த சாதகமான நிலை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியாது என்றாலும், இப்போதைக்கு, உள்ளூர் மீனவ சமூகங்கள் செழித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust