மெட்டா முதல் ட்விட்டர் வரை: 2022ல் ஊழியர்களை லே ஆஃப் செய்த டாப் நிறுவனங்கள்

2022ஆம் ஆண்டில் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்ட டாப் நிறுவனங்கள் என்ன என்பதை இந்த கட்டுரையில் காணலாம்
லே ஆஃப்
லே ஆஃப் canva

2022 ஆம் ஆண்டு முடிவுக்கு வரவுள்ள நிலையில், இந்த வருடம் நடந்த முக்கிய நிகழ்வுகளை நாம் நினைவுகூர்ந்து வருகிறோம். இலங்கை பொருளாதார நெருக்கடி, ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம், ட்விட்டரை எலான் மஸ்க் கைப்பற்றியது என இந்த பட்டியல் நீளம். அவற்றில் முக்கியமான ஒன்று பெரு நிறுவனங்களில் நடந்த லே ஆஃப்.

2022ஆம் ஆண்டில் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்ட டாப் நிறுவனங்கள் என்ன என்பதை இந்த கட்டுரையில் காணலாம்

மெட்டா
மெட்டா canva

1.மெட்டா:

2004ல் மெட்டா நிறுவனம் தொடங்கப்பட்டது. ஃபேஸ்புக், நாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனம் மெட்டா.

இதன் சி இ ஓ மார்க் சக்கர்பெர்க். மெட்டா 2022ஆம் ஆண்டில் 11,000 பேரை பணி நீக்கம் செய்தது.

லே ஆஃப்
Meta, Twitter லே ஆஃப்: வேலை தருவதாக கூறிய Dream11 நிறுவனர் - நெட்டிசன்கள் ரியாக்ஷன் என்ன?
Twitter

2. அமேசான்:

1994ல் தொடங்கப்பட்ட ஈ-காமர்ஸ் நிறுவனம் அமேசான். இதன் சி இ ஓ ஜெஃப் பெசாஸ் லே ஆஃப் குறித்து அறிவித்திருந்தார். அதன்படி 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது அமேசான்.

3. ட்விட்டர்:

2006ல் தொடங்கப்பட்ட ட்விட்டர் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் எலான் மஸ்க்.

ட்விட்டரை கைப்பற்றிய பிறகு பல மாற்றங்களை அறிவித்த மஸ்க், பணி நீக்கமும் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

ட்விட்டரின் முன்னாள் சி இ ஓ பராக் அகர்வால், சி எஃப் ஓ நெட் சேகல் ஆகியோரை முதலில் பணி நீக்கம் செய்தார்.

அதனை தொடரந்து சுமார் 4,400 ஒப்பந்த பணியாளர்கள், மற்றும் 3800 இதர பணியாளர்களை பணி நீக்கம் செய்திருந்தது நிறுவனம்

மைக்ரோசாஃப்ட்
மைக்ரோசாஃப்ட்

4. மைக்ரோசாஃப்ட்:

1975ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தின் சி இ ஓ சத்யா நாதெல்லா. மறு சீரமைப்புக்காக ஜூலை மாதம் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பணி நீக்க நடவடிக்கையில், சுமார் 1800 ஊழியர்கள் விடுவிக்கப்பட்டனர். இரண்டாம் சுழற்சியில் 200 பேரும், மூன்றாம் சுழற்சியில் 1000 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்

லே ஆஃப்
உலகின் பெரிய Tech நிறுவன இணைப்புகள்: Microsoft முதல் Twitter வரை - ஆச்சர்ய தகவல்

5. ஃபோர்ட்:

பிரபல கார் தயாரிக்கும் நிறுவனமான ஃபோர்ட் 1903 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. லே ஆஃப் அறிவித்த முக்கிய நிறுவனங்களில் ஃபோர்டும் ஒன்று. இந்த நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் 3500 நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது

Apple
Technology company
Apple Technology companyTwitter

6. ஆப்பிள்:

கடந்த ஆகஸ்ட் மாதம் சுமார் 100 ஒப்பந்த பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. மேலும், அடுத்த சில மாதங்களுக்கு புதிய ஊழியர்களை பணியமர்த்தும் நடவடிக்கையையும் நிறுவனம் நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தது

7. ஸ்னாப்சாட்:

கடந்த செப்டம்பர் மாதம் சுமார் 1200 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது ஸ்னாப்சாட்டின் தாய் நிறுவனமான ஸ்னாப்.

லே ஆஃப்
Twitter நிறுவனத்தில் தொடரும் lay off - இந்திய ஊழியர்களை மொத்தமாக நீக்கியது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com