எல் சாப்போ மகன் பிடிபட்டார் : திரைப்படங்களை மிஞ்சிய சண்டை - சரியுமா போதை சாம்ராஜ்ஜியம்?

உலகை நடுங்க வைத்த போதை பொருள் மாஃபியா தலைவன் எல் சாப்போவின் மகனை கைது செய்துள்ளது மெக்சிகோ இராணுவம். சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தி வந்த கும்பலின் தற்போதைய நிலை என்ன?
எல் சாப்போ மகன் பிடிபட்டார் : திரைப்படங்களை மிஞ்சிய சண்டை - சரியுமா போதை சாம்ராஜ்ஜியம்?
எல் சாப்போ மகன் பிடிபட்டார் : திரைப்படங்களை மிஞ்சிய சண்டை - சரியுமா போதை சாம்ராஜ்ஜியம்?ஒவிடியோ குஸ்மேன்-லோபெஸ்
Published on

சர்வதேச அளவில் மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல் மன்னனாக இருந்த எல் சாப்போ கடந்த 2019ம் ஆண்டு அமெரிக்க மற்றும் மெக்சிகோ இராணுவங்களின் கூட்டு முயற்சியால் கைது செய்யப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு தலைமை வகித்து வந்த அவரது மகன் ஒவிடியோ குஸ்மேன்-லோபெஸ் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

மெக்சிகன் இராணுவம் விமானப்படையுடன் மேற்கொண்ட நடவடிக்கையில் அவரை கைது செய்தனர். இந்த தாக்குதலில் 29 பேர் மரணமடைந்துள்ளனர்.

எல் சாப்போ தற்போது அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பண மோசடி உள்ளிட்ட குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார்.

எல் சாப்போ: உலகை நடுங்க வைத்த போதை பொருள் மாஃபியாவின் கதை!

ஆனால் அவரது மகன் ஒவிடியோவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த மெக்சிகோ நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஏற்கெனவே 2019ம் ஆண்டு ஒவிடியோ கைது செய்யப்பட்டார். ஆனால் அப்போது அவரது கூட்டாளிகாள் ஏற்படுத்திய பயங்கர கலவரம் மற்றும் வன்முறை மிரட்டல்கள் காரணமாக இராணுவம் அவரை விடுதலை செய்தது.

இந்த முறை அந்த மாதிரியான அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது இராணுவம்.


உதாரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளிவரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

ஒவிடியோ, 'தி மவுஸ்' என்ற புனைப் பெயரில் இயங்கி வந்தார். கடந்த 6 மதங்களுக்கும் மேலாக அவரைப் பிடிக்க பல முயற்சிகள் செய்து வந்தது மெக்சிகன் இராணுவம். இறுதியாக அமெரிக்காவின் உதவியுடன் அவரைக் கண்காணித்து வெள்ளி அன்று களமிறங்கினர்.

ஒவிடியோ தங்கியிருந்த குலியகான் நகரை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டது இராணுவம்.

இராணுவத்தினரின் வருகையை அறிந்ததுமே போதைப் பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர்.

கடைகள், வணிக வளாகங்களை சூறையாடினர். இராணுவத்தினரை தடுக்க சாலைகளில் தடுப்புகளை உருவாக்கினர். வாகனங்களைத் தீக்கிரையாக்கினர். குறிப்பாக விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த விமானத்தை நோக்கி தாறுமாறாக சுட்டனர். உள்ளிருந்த பயணிகள் முன்னெச்சரிக்கையாக குணிந்துகொண்டதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இராணுவ விமானங்களும் குறிவைக்கப்பட்டதால் விமான நிலையம் செயல்பட முடியாமல் போனது.

போதைப்பொருள் கும்பலுக்கும் இராணுவத்துக்கும் இடையில் நடந்த சண்டையில் மொத்த நகரமும் போர்களமாக மாறியது.

இதற்கிடையில் அதிரடியாக சினிமா காட்சிகளை மிஞ்சும் விதமாக ஒவிடியோவை நெருங்கியது இராணுவம். தீவிர துப்பாக்கி சண்டைக்கு பிறகு அவரைக் கைது செய்து உடனடியாக ஹெலிகாப்டரில் தலை நகர் மெக்சிகோவுக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சண்டையில் 10 இராணுவத்தினர் 19 போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மரணித்தனர். பலர் படுகாயமடைந்தனர். முன்மெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாதவண்ணம் மெக்சிகன் இராணுவம் சினலோவா மாகாணம் முழுவதையும் கண்காணித்து வருகிறது.

எல் சாப்போ மகன் பிடிபட்டார் : திரைப்படங்களை மிஞ்சிய சண்டை - சரியுமா போதை சாம்ராஜ்ஜியம்?
மெக்சிகோ : உலகை ஆட்டிப்படைக்கும் ரியல் ரோலெக்ஸ், சந்தனம் ஆகியோரின் கதை - விரிவான தகவல்


சினலோவா கார்டல்

1989 போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த எல் சாப்போ சினலோவா கார்டல் என்ற போதைப் பொருள் கடத்தல் கும்பலை நிறுவினார்.

2019ல் அவர் கைது செய்யப்படும் வரை இந்த கும்பல் அசுர வளர்ச்சி அடைந்தது. உலகின் 5 கண்டங்களுக்கு இங்கிருந்து போதைப் பொருள் அனுபப்படுகிறது.

சினலோவாவில் உள்ள 11 மெத்தம்பெட்டமைன் ஆய்வகங்கள் மூலம் மாதம் தோறும் இந்த கும்பல் 2,200 கிலோ போதைப் பொருள் உற்பத்தி செய்கின்றனர்.

இந்த கார்டலை வழிநடத்துவதில் எல் சாப்போ, ஒவிடியோ மட்டுமின்றி அவரது 3 சகோதரர்களுக்கும் பங்கு இருக்கிறது. அவர்களையும் பிடிக்கும் நடவடிக்கைகளை திட்டமிட்டு வருகிறது இராணுவம்.

அதே நேரத்தில் போதைப் பொருள் கும்பலின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

எல் சாப்போ மகன் பிடிபட்டார் : திரைப்படங்களை மிஞ்சிய சண்டை - சரியுமா போதை சாம்ராஜ்ஜியம்?
ஆணுறை மூலம் போதை ஏற்றும் இளைஞர்கள் - என்ன நடக்கிறது இங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com