மெக்சிகோ : உலகை ஆட்டிப்படைக்கும் ரியல் ரோலெக்ஸ், சந்தனம் ஆகியோரின் கதை - விரிவான தகவல்

மெக்ஸிகோவிலிருக்கும் கார்டெல்கள் மெக்சிகோவின் பரந்த பகுதிகளைக் கட்டுப்படுத்துவதோடு அரசியல் ஊழல், அரசியல் படுகொலை மற்றும் கடத்தல்களுக்கு காரணமாகவும் இருக்கின்றன. இந்தக் குழுக்களில் எது மிகவும் வலிமையானது?
Drug Mafia (Representative)
Drug Mafia (Representative)Twitter
Published on

அமெரிக்காவின் தெற்கு எல்லைப்புறத்தில் இருக்கும் நாடு மெக்சிகோ. மெக்சிகோ என்றாலே போதைப் பொருள் கும்பல்கள் நாடு எனுமளவுக்கு அங்கே பல கும்பல்கள் செயல்படுகின்றன. இந்தக் கும்பல்களுக்கிடையே நடக்கும் சண்டையால் வருடந்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின்றன. இக்குழுக்கள் தமது பிராந்தியம் மற்றும் ஆதிக்கத்திற்காக தங்களுக்குள்ளேயே மோதிக் கொள்கின்றன. இந்தப் போதைப் பொருள் கடத்தல் குழுக்களை ஆங்கிலத்தில் cartels கார்டெல்கள் என்று அழைக்கிறார்கள்.

இந்த கார்டெல்கள் மெக்சிகோவின் பரந்த பகுதிகளைக் கட்டுப்படுத்துவதோடு அரசியல் ஊழல், அரசியல் படுகொலை மற்றும் கடத்தல்களுக்கு காரணமாகவும் இருக்கின்றன.

இந்தக் குழுக்களில் எது மிகவும் வலிமையானது?

சினாலோவா கார்டெல்

இந்தக் கும்பல் மெக்சிகோ நாட்டின் வடமேற்கு பகுதியைக் கட்டுப்படுத்துகிறது. இந்தக் கார்டெலைத்தான் உலகின் மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல் குழுவாக அமெரிக்க அரசு கருதுகிறது.

1980களின் பிற்பகுதியில் இக்குழு துவங்கப்பட்டது. குழுவின் தலைவராகவும் பிரபலமான கொடூரமான போதைப் பொருள் மன்னனாகவும் ஜோவாகின் எல் சாப்போ இருந்தார். ஒரு காலத்தில் இவர் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக அறியப்பட்டார். அவரது போதைப் பொருள் கடத்தல் வாழ்க்கை மற்றும் சாம்ராஜ்ஜியம் பல புத்தகங்களாகவும் தொலைக்காட்சி தொடர்களாகவும் வெளிவந்திருக்கிறது.

இவரது தலைமையில் போட்டி போதைப் பொருள் கடத்தல் குழுக்கள் முறியடிக்கப்பட்டன. இக்குழுக்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டாலும் தங்களுக்குள் கூட்டணியையும் அமைத்துக் கொள்கின்றன.

எல் சாப்போவின் நீண்ட கால ஆட்சியில் சினாலோவா கார்டெல்தான் அமெரிக்காவின் மிகப்பெரிய போதைப் பொருள் சப்ளையராக இருந்தது. இந்தக்குழு போட்டி குழுக்களின் உறுப்பினர்களைக் கடத்தி சித்திரவதை செய்து படுகொலை செய்தது. ஆர்பிஜி எனப்படும் ராக்கெட் வெடிகுண்டு, கிரானைடு எனும் கைக்குண்டு, நவீன ரகத் துப்பாக்கியான ஏ கே 47 உள்ளிட்ட பெரும் ஆயுதக் குவியலை வைத்திருந்தது.

Drug Mafia (Representative)
எல் சாப்போ : தன் வாழ்க்கையை படமாக எடுக்க சிறையை விட்டு தப்பித்த கைதி | பகுதி 2

இறுதியில் எல் சாப்போ கைது செய்யப்பட்டு 2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அமெரிக்காவில் இந்த வழக்கு மிகவும் பிரபலம். எல் சாப்போ கோகோயின், ஹெராயின், கஞ்சா போன்றவற்றைக் கடத்தியதாகவும், வியாபாரிகள் - கடத்தல்காரர்களின் நெட்வொர்க்கை பணத்தால் பராமரித்ததாகவும் அரசு வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

எல் சாப்போ சிறையில் அடைக்கப்பட்டதை ஒட்டி மற்ற குழுக்கள் ஆதிக்கம் பெற நினைத்ததால் வன்முறை அதிகரித்தது. இருப்பினும் தற்போதும் சினாலோவா கார்டெல் சக்தி வாய்ந்த குழுவாக வடமேற்கு மெக்சிகோவில் நீடிக்கிறது. அர்ஜெண்டினா தலைநகரம் பியூனஸ் அயர்ஸ் முதல் அமெரிக்காவின் நியூயார்க் வரையிலான நகரங்களில் இக்குழுவின் நெட்வோர்க் இருப்பதாகக் கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் சட்டவிரோதமாகப் போதைப் பொருட்களைக் கடத்துவதன் மூலம் இந்த கார்டெல் பில்லியன் கணக்கான டாலர்களை ஈட்டுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது இக்கார்டெல் எல் சாப்போவின் மகன் ஓவிடியோ குஸ்மான் லோபஸால் ஓரளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

2019 அக்டோபரில் எல் சாப்போவின் மகனான இவர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட போது குழுவின் உறுப்பினர்கள் தங்கள் ஆயுத வலிமையை விரைந்து வெளிப்படுத்தினர். இராணுவத்துடன் தெருச்சண்டையில் ஈடுபட்டனர். இறுதியில் தங்கள் தலைவர் விடுவிக்கப்படுவதற்கு முன்பு சிறையைத் தகர்க்கவும் முயன்றனர். இக்குழு இன்னும் சக்தி வாய்ந்ததாக இருப்பதற்கு இதுவே சாட்சி.

ஜாலிஸ்கோ நியு ஜெனரேஷன் கார்டெல்

2010 ஆம் ஆண்டு வாக்கில் உருவாக்கப்பட்ட இக்குழு மெக்சிகோவின் மேற்குப் பகுதியில் குறிப்பாக Tierra Caliente பகுதியில் செயல்படுகிறது. இக்குழு முன்னர் கண்ட சினாலோவா கார்டெலுக்கு கடும் போட்டி கார்டெலாக உள்ளது.

தற்போது இக்குழு மெக்ஸிகோ முழுவதும் வேகமாக விரிவடைந்து வருகிறது. இதன் சொத்து மதிப்பு 20 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்குமென்று கருதப்படுகிறது. இக்கார்டெலின் தலைவராக முன்னாள் போலீஸ் அதிகாரியான எல் மென்சோ என்று அழைக்கப்படும் ரூபன் ஒசேகுவேரா வழிநடத்துகிறார். மெக்சிகோவின் மிகவும் தேடப்படும் நபரான இவரின் தலைக்கு பத்து மில்லியன் டாலர் விலையை அமெரிக்க அரசு வைத்துள்ளது.

Mexico arrests Jalisco New Generation drug lord El Menchito
Mexico arrests Jalisco New Generation drug lord El Menchito Twitter

அமெரிக்க அரசாங்கத்தின் கூற்றுப்படி ஜாலிஸ்கோ கார்டெல் இக்கண்டத்தில் உள்ள செயற்கை மருந்துகளின் முக்கியமான விநோயகஸ்தர்களில் ஒன்றாகும். செயற்கை மருந்து என்பது போதைப் பொருளைப் போன்ற பண்புகள், விளைவுகளைக் கொண்ட ஒரு மருந்தாகும். ஆனால் சற்று மாறுபட்ட வேதியியல் அமைப்பைக் கொண்டுள்ளது. இது சட்டவிரோத போதைப் பொருட்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளைத் தவிர்க்க உருவாக்கப்பட்ட மருந்து. இதை இக்குழு சட்டவிரோதமாக விற்கிறது.

Drug Mafia (Representative)
பாப்லோ எஸ்கோபார் நிஜ ரோலெக்ஸ் : ஒரு கொலம்பிய போதைப்பொருள் கடத்தல் மன்னனின் கதை! | பகுதி 1

மேலும் இக்குழு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் சட்டவிரோத ஆம்பெடமைன் சந்தையிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆம்பெடமைன்கள் என்பவை தூண்டுதல் மருந்துகள். அவை உங்கள் மூளைக்கும் உடலுக்கும் இடையே உள்ள செய்திகளை வேகமாக நகரச் செய்கின்றன. இதன் விளைவாக, நீங்கள் அதிக விழிப்புடன் மற்றும் உடல் ரீதியாகச் சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள். சிலர் வேலையில் விழித்திருக்க அல்லது தேர்வுக்காக படிக்க உதவுவ ஆம்பெடமைன்களைப் பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் விளையாட்டில் தங்கள் செயல்திறனை அதிகரிக்க அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

ஆம்பெடமைன்
ஆம்பெடமைன் Twitter

சமீப ஆண்டுகளில் இக்குழு சக்திவாய்ந்ததாக வளர்ந்துள்ளது. தீவிர வன்முறையிலும் ஈடுபடுகிறது. தனது செல்வாக்கு பகுதியை விரிவாக்கவும் முயற்சி செய்கிறது. இக்கார்டெல் இராணுவம், மற்றும் போலீஸ், அரசு அதிகாரிகளைத் தாக்குவதற்குப் புகழ் பெற்றது. ஒரு இராணுவ ஹெலிகாப்டரையே இக்குழு வீழ்த்தியதோடு பல டஜன் அரசு அதிகாரிகளையும் கொன்றிருக்கிறது. போட்டிக் குழுக்களின் உறுப்பினர்களைக் கொன்று அவர்களது உடல்களைப் பாலங்களில் தொங்க விடுவது இக்குழுவின் வாடிக்கை. இக்குழு மேலும் விரிவடையும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.

Drug Mafia (Representative)
உலகை பதற வைத்த மாயாவி : உளவு பார்த்து பிடித்த அதிகாரி - ஒரு த்ரில்லர் கதை

கல்ஃப் கார்டெல்

மெக்சிகோவின் வடகிழக்கு எல்லை மாநிலமான தமெளலிபாஸ்தான் இக்குழுவின் மையம். இக்கார்டெல் மெக்சிகோவின் பழமையான குற்றக் குழுக்களில் ஒன்றாகும். இதன் தோற்றம் செயல்பாடு 1980கள் முதல் இருக்கிறது.

இக்குழு தற்போது அமெரிக்காவிற்கு கோகோயின், கஞ்சா, ஹெராயின் மற்றும் ஆம்பெடமைன்களை கடத்துகிறது. மேலும் இக்குழு கொலம்பியா நாட்டின் போதைப் பொருள் கார்டெல்களுடன் நெருக்கமாக வேலை செய்கிறது. 90களில் இக்குழு ஆண்டு தோறும் பில்லியன் டாலர்களை ஈட்டியதாக கூறப்படுகிறது. அரசாங்க அதிகாரிகளுக்கு இலஞ்சம் தருவதன் மூலம் தனது நெட்வொர்க்கை பராமரித்து வருகிறது.

இக்கார்டெல் ஆரம்பத்தில் ஜூவான் கார்இயா அப்ரிகோவால் வழிநடத்தப்பட்டது. அமெரிக்காவால் தேடப்படும் பத்து நபர்களில் இவரும் ஒருவராக இருந்தார். இறுதியில் 1996இல் கைது செய்யப்பட்டு அமெரிக்காவில் வாழ்நாள் சிறைத்தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார்.

Mexican police arrest cartel's ′Devil Commander′ in 2012
Mexican police arrest cartel's ′Devil Commander′ in 2012Twitter

இவரது வாரிசு ஓசியேல் கார்டெனாஸ் குய்லன் இக்குழுவின் ஆயுதப் பிரிவை உருவாக்கினார். அதற்குப் பல அரசு சிறப்புப்படை வீரர்களை ஊழல் மூலம் விலைக்கு வாங்கி சேர்த்துக் கொண்டார். இதன் மூலம் வன்முறையை அதிகம் தூண்டினார். இறுதியில் இந்த முன்னாள் வீரர்கள் தங்களுக்கென போட்டி கார்டெல் ஒன்றை உருவாக்கினார்கள்.

கார்டனாஸ் 2003 இல் கைது செய்யப்பட்டு அமெரிக்காவில் 25 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார். 2010 இல் மெக்சிகோ இராணுவ துருப்புக்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இவரது சகோதரரான எஸேகுவேல் கார்டெனாஸ் கொல்லப்பட்டார். இதன் பின்னர் இக்கார்டெல் பல குழுக்களாகப் பிரிந்து பலவீனமடைந்தது. தற்போது அவர்களுக்குள் சண்டை நடந்து வருகிறது.

Drug Mafia (Representative)
ஐரோப்பா : ரூ.822 கோடி மதிப்பிள்ள கஞ்சாத் தோட்டத்தை அழித்த ஸ்பெயின் அதிகாரிகள்

லாஸ் செட்டாஸ் கார்டெல்

இக்குழு ஆதிக்கம் செலுத்தும் பகுதி மெக்சிகோவின் வட கிழக்கு. இக்குழு மெக்சிகோ அரசின் சிறப்புப் படைகளின் உயரிக்குப் பிரிவின் ஊழல் உறுப்பினர்களால் நிறுவப்பட்டது. 90 களில் மேலே கண்ட கல்ஃப் கார்டெல் தலைவரால் 30க்கும் மேற்பட்ட முன்னாள் வீரர்கள் பணியமர்த்தப்பட்டனர். ஆனால் மேலே குறிப்பிட்டபடி அவர்கள் அதிலிருந்து பிரிந்து 2010இல் தங்களது சொந்த குழுவை உருவாக்கினார்.

பிறகு மெக்சிகோவின் வடகிழக்கில் இரு குழுக்களும் மோதிக் கொண்டன. லாஸ் செட்டாஸ் குழு அவர்களின் கொடூரமான வன்முறைக்குப் புகழ் பெற்றவர்கள். சித்திரவதை செய்வது, தலையைத் துண்டிப்பது இவர்களுக்கு வாடிக்கை.

Drug Dealer (Representative)
Drug Dealer (Representative)Twitter

2012 வாக்கில் இக்குழு நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் கும்பலாக வளர்ச்சியடைந்தது. சினாலோவா கார்டெலோடு போட்டியிட்டு அவர்களை முந்தியது. மெக்சிகோ மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றில் இக்குழு செயல்படுகிறது. இக்குழு போதைப்பொருளோடு சிகரெட் கடத்தல், மனிதக் கடத்தல், விபச்சாரக் கடத்தல் வரை எல்லா குற்றங்களிலும் ஈடுபட்டார்கள்.

2012 மற்றும் 2015 இல் குழுவின் தலைவர்கள் பிடிபட்டனர். இதன் பிறகு இக்கார்டெல் வீழ்ச்சியடைந்தது. தலைமை இல்லாமல் குழு பிரிந்து போனது. போட்டி குழுக்களோடு மோதவும் முடியவில்லை. ஜாலிஸ்கோ கார்டெல் கிழக்கு கடற்கரைப் பகுதியைக் கைப்பற்றியதால் செட்டாஸ் குழு தனது இடத்தை இழந்தது. தற்போது இது பல குழுக்களாக பிரிந்திருந்தாலும் இன்னும் ஆபத்தான குழுவாகவே கருதப்படுகிறது.

Drug Mafia (Representative)
பாப்லோ எஸ்கோபார் : நார்கோஸ் - நெட்பிலிக்ஸ் சீரியலாக வரும் அளவிற்கு என்ன செய்தார்?| பாகம் 2

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com