இந்த சின்ன பழக்கத்தை பின்பற்றினால், நீங்கள் பணக்காரர் ஆகலாம் - நிபுணர் கூறும் அட்வைஸ்!
இந்த சின்ன பழக்கத்தை பின்பற்றினால், நீங்கள் பணக்காரர் ஆகலாம் - நிபுணர் கூறும் அட்வைஸ்!canva

இந்த சின்ன பழக்கத்தை பின்பற்றினால், நீங்கள் பணக்காரர் ஆகலாம் - நிபுணர் கூறும் அட்வைஸ்!

இவரும் உலக பணக்காரர்களில் ஒருவர் தான். இவர் சமீபத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் பணம் சேமிப்பதற்கான எளிதான அறிவுரை ஒன்றை வழங்கியிருக்கிறார்.
Published on

உலகில் மனிதர்களுக்கு பொதுவானதாக இருக்கும் ஆசை என்றால், நாமும் பணக்காரர் ஆகவேண்டும் என்பது தான்.

சேமிப்பு, ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகள், சொந்த தொழில் என நமக்கு தெரிந்தவாறு சம்பாதிக்கிறோம், பணம் சேமித்து வைக்கிறோம்.

சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல, இந்த சிறிய பழக்கத்தை நாம் ஏற்படுத்திக்கொண்டால், பணத்தையும் எளிதாக சேமிக்கலாம், பணக்காரராக அது உங்களை மாற்றலாம் என்கிறார் டேவிட் பாக் என்பவர்.

டேவிட் எல். பாக் ஒரு அமெரிக்க நிதி ஆசிரியர்(எழுத்தாளர்), தொலைக்காட்சி ஆளுமை, மோட்டிவேஷனல் ஸ்பீக்கர், தொழில்முனைவோர் மற்றும் FinishRich.com இன் நிறுவனர் ஆவார்.

இவரும் உலக பணக்காரர்களில் ஒருவர் தான். இவர் சமீபத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் பணம் சேமிப்பதற்கான எளிதான அறிவுரை ஒன்றை வழங்கியிருக்கிறார்.

பாக் கூறுவதன் படி, உங்களுக்கு நீங்களே சம்பளம் வழங்கவேண்டும்.

உங்களது தினசரி வருமானத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்கான தொகையை உங்களுக்கு வழங்கிகொள்ளுங்கள். இது நாளடைவில் உங்களது வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும்.

இந்த சின்ன பழக்கத்தை பின்பற்றினால், நீங்கள் பணக்காரர் ஆகலாம் - நிபுணர் கூறும் அட்வைஸ்!
அதிகமாக பணம் செலவாகிறதா? சிக்கனமாக வாழ 5 ஈசி டிப்ஸ்!

நம் வாழ்நாளில் சுமார் 90,000 மணி நேரம் தோராயமாக நாம் வேலை செய்கிறோம். அப்படியானால், ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கான சம்பளத்தை நீங்கள் சேமித்து வைப்பது அவசியமாகிறது என்கிறார்.

டேவிட் பாக் மொத்தம் மூன்று விதிமுறைகளை முன்வைக்கிறார்

முதலில் உங்களுக்கு நீங்களே சம்பளம் வழங்குவது.

உங்கள் நாளின் முதல் ஒரு மணி நேரத்தை சம்பள நேரமாக மாற்றுங்கள்

இதற்கு முக்கிய காரணம், நமது இதர அத்தியாவசிய செலவுகளுக்கு கணக்கிட்டு பணத்தை பிரித்து வைத்த பிறகு, சேமிப்புக்கு கையில் பெரும்பாலானோரிடம் பணம் இருப்பதில்லை.

ஆதலால், உங்களை நீங்கள் முதலில் கவனித்து கொள்வது (proritising yourself) அவசியமாகிறது.

இந்த சின்ன பழக்கத்தை பின்பற்றினால், நீங்கள் பணக்காரர் ஆகலாம் - நிபுணர் கூறும் அட்வைஸ்!
கெளதம் அதானி இன்னும் எத்தனை நாளில் உலகின் 2 ஆவது பணக்காரர் ஆவார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com