அதிகமாக பணம் செலவாகிறதா? சிக்கனமாக வாழ 5 ஈசி டிப்ஸ்!
நேற்று தான் சம்பளம் போட்டார்கள். இன்று அக்கவுண்ட் பேலன்ஸ் 1000 ரூபாய் கூட இல்லை என்று புலம்புவோரின் எண்ணிக்கை இங்கு ஏராளம். அதிலும், சொந்த ஊரை விட்டு வந்து வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் நிலை இன்னும் மோசம்.
இந்த பணக்கஷ்டம் நம் எல்லோருக்கும் இருந்தாலும், நம்மில் சிலர் நிறைய செலவு செய்யும் பழக்கத்தை வைத்திருப்போம்.
நீங்கள் அப்படி செய்பவராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கானது
அத்தியாவசிய தேவைகளுக்கு முக்கியத்துவம்
நமக்கு ஒரு பொருள் வேண்டும் என்று இருக்கும், ஒரு பொருள் தேவை என்று இருக்கும். அந்த மாதிரியான சமயங்களில் தேவைக்கு முக்கியத்துவம் அளியுங்கள்.
வேண்டும் என நாம் நினைக்கும் பொருட்களை எப்போது வேண்டுமானலும், நாம் வாங்கலாம். தீரப்போவது இல்லை. அழியப்போவதும் இல்லை.
அதனால், தற்போதைக்கு அதில் செலவிடும் பணத்தை சேமிக்கலாம்.
பட்ஜெட் போடுங்கள்
உங்கள் ஊதியம் என்னவென்று உங்களுக்கு தெரியும். அதில் என்னென்ன செலவுகளை நீங்கள் மேற்கொள்கிறீர்கள் என்பதும் தெரியும். அதற்கான செலவுகளை பட்டியலிடுங்கள். அதற்கான பணத்தை எடுத்து வையுங்கள்.
அது போக உங்களிடம் இருக்கும் பணத்தை இதர செலவுகளுக்கு பயன்படுத்துங்கள். மாதம் முடிகையில், இந்த செலவுகளையும் கணக்கிடுங்கள்.
அப்படி செய்யும்போது தேவையற்ற செலவுகள் என்ன என்பது தெரியும். அதனை அடுத்த முறை குறைத்துக்கொள்ளலாம்
பணம் அல்லது டெபிட் கார்ட் பயன்படுத்துங்கள்
கிரெட் கார்ட் பயன்படுத்துவதில் உள்ள ஒரு ஆபத்து, இப்போது செலவு செய்துவிட்டு பின்னர் பணம் கட்டி கொள்ளலாம் என்பது தான். இதுவே நம் செலவுகளை நீடித்துவிடும்.
பதிலாக டெபிட் கார்டையோ கையில் இருக்கும் பணத்தையோ செலவிடுங்கள். இந்த வகையில்ம் நம்மிடம் கணக்கும் இருக்கும், அதிக செலவும் ஆகாது
சேமிப்பு
அந்த மாதத்திற்கான செலவினை பட்டியலிடும்போதே, சேமிப்புக்கு ஒரு தொகையை ஒதுக்குங்கள். அதனை அத்தியாவசிய செலவின் பட்டியலில் வைத்தால் தான் மாதம் தவறாமல் அந்த சேமிப்பு தொகை சேரும். இந்த பழக்கத்தை அலட்சியமாக விடவேண்டாம்.
செலவுகளின் மீது கவனம்
என்ன செலவாகிறது என்பதை கண்காணியுங்கள். முன்பே சொன்னது போல தேவை, வேண்டியது என உங்களது செலவுகளை பிரியுங்கள். அதற்கேற்றார் போல செலவிடுங்கள். உங்களுக்கு ஒரு முறைக்கு மேல் அந்த பொருளின் தேவை இல்லை என்றால் அதனை வாங்குவது குறித்து மறந்துவிடுங்கள்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust

