மொனாக்கோ முதல் பெர்முடா வரை: உலகில் வருமான வரி இல்லாத நாடுகள் குறித்து தெரியுமா?

உலகில் வருமான வரி செலுத்தாத சில நாடுகள் இருப்பது குறித்து தெரியுமா? எவ்வளவு சம்பாதித்தாலும் வருமான வரியாக அரசுக்கு ஒரு பைசா கூட கொடுக்க வேண்டியதில்லை. அந்த நாடுகளை இங்கே பட்டியலிடுவோம்.
Monaco To Bermuda, Income Tax-free Countries In The World
Monaco To Bermuda, Income Tax-free Countries In The WorldTwitter
Published on

ஒரு குறிப்பிட்ட வருமானத்தை சேர்ந்த ஒவ்வொரு நபரும் இந்தியாவில் வருமான வரி செலுத்த வேண்டும். அது எந்தத் தொழிலாக இருந்தாலும் சரி.

உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான அரசாங்கங்களின் வருமானத்தின் முக்கிய ஆதாரமாக வருமான வரி உள்ளது. இந்தியாவில், உங்கள் சம்பளத்தின் அடிப்படையில் உங்கள் வரி விதிக்கப்படுகிறது.

ஆனால் உலகில் வருமான வரி செலுத்தாத சில நாடுகள் இருப்பது குறித்து தெரியுமா? எவ்வளவு சம்பாதித்தாலும் வருமான வரியாக அரசுக்கு ஒரு பைசா கூட கொடுக்க வேண்டியதில்லை. அந்த நாடுகளை இங்கே பட்டியலிடுவோம்.

பஹாமாஸ்

சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் தீவு நாடுகளுள் ஒன்று பஹாமாஸ். ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு குவிகின்றனர்.

அந்நாட்டின் பொருளாதாரத்தை நிலை நிறுத்துவதில் சுற்றுலா துறையும் முக்கிய பங்காற்றுகிறது. அதன் மூலமே அதிக வருவாய் ஈட்டுவதால் தங்கள் நாட்டில் வசிக்கும் குடிமக்களிடம் வருமானத்தை மதிப்பிட்டு தனிப்பட முறையில் பஹாமாஸ் அரசு வரி விதிப்பதில்லை.

அவர்கள் எந்த வழியில் பணம் சேமித்தாலும் அதற்கு எந்த விதமான வரியையும் செலுத்த வேண்டியது இல்லை.

மொனாக்கோ

அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக மொனாக்கோ கருதப்படுகிறது. மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸ் மாநாடு நடத்துவதற்கும் அறியப்படுகிறது.

இந்த நாடும் வருமான வரி விதிக்கவில்லை. மொனாக்கோ நாடு, தங்குவதற்கு மிகவும் விலையுயர்ந்த இடங்களில் ஒன்றாகும். இங்கு தங்குவதற்கு ஒருவர் சட்டப்பூர்வ குடியிருப்பு அனுமதி பெற வேண்டும், அதுவும் மூன்று மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

ஆனால் அதற்கு 500,000 யூரோக்கள் ( 4,45,85,000 ரூபாய்) செலவாகும். மொனாக்கோவில் குற்ற விகிதம் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE)

மத்திய கிழக்கில் உள்ள பல எண்ணெய் நாடுகள், வருமான வரி வசூலிப்பதில்லை. அவற்றில் ஒன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE). இது ஒரு செழிப்பான பொருளாதாரம் மற்றும் பல கலாச்சார சூழலைக் கொண்டுள்ளது. இந்த நாடும் தனது குடிமக்களிடமிருந்து வருமான வரி வசூலிப்பதில்லை.

Monaco To Bermuda, Income Tax-free Countries In The World
சமோசா முதல் கெட்சப் வரை - உலக நாடுகள் தடை செய்த 7 உணவுப் பொருட்கள் - என்ன காரணம்?

பெர்முடா

பெர்முடாவின் இளஞ்சிவப்பு மணல் கடற்கரைகள், இயற்கை அழகுக்கு மிகவும் பிரபலமானது.

வருமான வரி இல்லாத இந்த நாடு வாழ்வதற்கு மிகவும் விலை உயர்ந்த இடமாக கருதப்படுகிறது.

பெர்முடா தனிநபர் வருமான வரியை விதிக்கவில்லை, ஆனால் அது முதலாளிகள் மற்றும் சொத்து உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் மீது நில வரி விதிக்கிறது.

Monaco To Bermuda, Income Tax-free Countries In The World
ஈரான் முதல் இலங்கை வரை : பெயரை மாற்றிகொண்ட நாடுகள் - என்ன காரணம் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com