பாங்காக்கில் உள்ள லோப்பூரி என்ற நகரத்தில் குரங்குகளுக்கு சிறப்பு உணவு விருந்து நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்த விருந்திற்கு ஆயிரக்கணக்கில் குரங்குகள் வருகின்றன.
மனிதர்களுக்கு விலங்குகளுடன் தனிப்பட்ட உறவு இருக்கிறது. அதிலும் முக்கியமாக குரங்குகளுடன் ஆதிகாலத்தில்ருந்தே தொடர்பு இருக்கிறது. மனிதர்கள் இருக்கும் இடங்களில் மற்ற காட்டு விலங்குகளை விட குரங்குகளை நாம் அதிகம் காணலாம். அவைகளுக்கு உணவு தண்ணீர் போன்றவற்றை நாம் பலசமயம் வழங்கியிருப்போம்.
ஆனால் இங்கு ஒரு இடத்தில் பிரத்யேகமாக குரங்குகளுக்கு விருந்து உபச்சாரம் நடக்கிறது. தாய்லாந்து தலைநகரம் பாங்காக்கில் உள்ள லோப்பூரி என்ற இடத்தில் ஒவ்வொரு வருடமும் Monkey Feast Festival நடக்கிறது. இங்கு ஆயிரக்கணக்கில் குரங்குகள் வந்து உணவு விருந்தில் பங்கெற்கின்றன.
பாங்காக்கில் இருந்து 150 கிமீ தொலைவில் இருக்கும் லோப்பூரி என்ற இடத்தில் இந்த திருவிழா நடக்கிறது. இந்த இடத்தின் சின்னமே குரங்கு தான். இங்கு குரங்கு சிலைகள் அமைக்கப்பட்டு, அதன் கைகளில் தட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் குரங்குகளுக்கு தயாரிக்கப்பட்ட உணவுகள் பரிமாறப்பட்டுள்ளன.
இங்கு வரும் குரங்குகள் அடித்துப்பிடித்து ஒன்றோடு ஒன்று சண்டைப்போட்டு கொண்டு உணவை உண்கின்றன. மனிதர்களின் மேல் ஏறிக்கொண்டும், குரங்கு சிலைகளின் மேல் உட்கார்ந்துக்கொண்டும் இவை சாப்பிடுவது பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது
லோப்பூரியில், மனிதர்களோடு ஒன்றி வாழும் குரங்குகளை தினந்தோறும் பார்க்க முடியும். நகரத்தில் வாழும் குரங்குகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த திருவிழா 1989ல் தொடங்கப்பட்டது. இதை தொடக்கி வைத்தவர் Yongyuth Kitwatanusont. இவர் ஒரு உணவக உரிமையாளர்.
தாய்லாந்து மக்கள் குரங்குகளை ஆஞ்சநேய கடவுளின் அம்சமாக பார்ப்பதனால், அவைகளுக்கு அங்கு சிறப்பு மரியாதை கொடுக்கப்படுகிறது. Yongyuth Kitwatanusont-ன் தலைமையில் தொடக்க விழா நடத்தி இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெறும்.
இதை பார்க்க ஊர்மக்கள், சுற்றுலா பயணிகள் என அனைவரும் அந்த இடத்தில் கூடியுள்ளனர். Yongyuth Kitwatanusont என்பவர், அவர்கள் ஊரில் சுற்றாலா துறையை மேம்படுத்தும் முயற்சியாகவும் இந்த வழக்கம் பின்பற்றப்படுவதாக தெரிவித்திருக்கிறார்.
“இந்த Monkey Feast Festival ஒரு வெற்றிகரமான நிகழ்வாக அமைந்துள்ளது. இது லோப்பூரியின் சுற்றாலா வளத்தை மேம்படுத்தி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் ஈர்த்துள்ளது”
மேலும் அவர், தொடக்கத்தில் லோப்பூரியில் 300 குரங்குகள் மட்டுமே இருந்ததாகவும், தற்போது அந்த எண்ணிக்கை 4000ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். “லோப்பூரி குரங்கு நகரம் என்று அறியப்படுகிறது, அதாவது, குரங்குகளும் மனிதர்களும் இங்கு ஒற்றுமையாக வாழமுடியும்.”
ஆண்டுதோறும் இந்த திருவிழா நவம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமை அன்று நடத்தப்படுகிறது. குரங்குகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த விழா கொண்டாடப்படுகிறது.
மொத்தம் நான்கு வேளைகள் இந்த உணவு விருந்து நடக்கிறது. காலை 10 மணி, பகல் 12 மணி, மதியம் 2 மணி மற்றும் மாலை 4 மணி ஆகிய நேரங்களில் விருந்து நடைபெறும். விருந்து நடைபெறும் சமயத்தில் அங்கு மற்ற சில கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
Ancient Three Pagodas என்ற இடத்தில் நடக்கும் இந்த உணவு திருவிழாவில், குரங்குகள் விரும்பி உண்ணும் காய்கறிகள், பழங்களை வித விதமாக வைத்துள்ளனர் ஏற்பாட்டாளர்கள்.
இந்த விருந்து நடக்கும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள குரங்கு சிலைகள் இந்த வருடம் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் நடந்த திருவிழாவில் குரங்குகளின் வரத்து குறைவாக இருந்ததனால் அதிக குரங்குகளை ஈர்க்க செய்யப்பட்ட ஏற்பாடு எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கோவிட் தொற்றுகாலம் முடிந்து இந்த வருடம் மீண்டும் குரங்கு உணவு திருவிழா தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust